Tuesday 28 July 2020

கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு – வியக்கவைக்கும் மனிதனின் சிந்தனை திறன் ..!!!

SHARE

மனிதனின் ஒருநாளைய சிந்தனை திறன் தொடர்பாக கனடா நாட்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

கனடா நாட்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இந்தஆய்வை மேற்கொண்டனர்.

அதன்படி ஒரு சராசரி மனிதன் நாள் ஒன்றுக்கு 6200 முறை சிந்திப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசியுள்ள அவர்கள் மனிதனின் மூளையில் சிந்திக்கும் இடம் தொடங்கி முடியும் இடம் வரை அடையாளப்படுத்தி வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

ஒரு மனிதனை தனிமைப்படுத்தி அவன் ஒரே சிந்தனை கொண்டவனாய் இருந்தால் அந்த நபரை “சிந்தனை புழு” என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.
SHARE