Sunday 23 August 2020

Note 20 Ultra 5G ஸ்மார்ட் போன்கள் இலங்கையில் ..!!!

SHARE

இலங்கையின் முதற்தர ஸ்மாட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung, தமது முதன்மை Galaxy Note20 மற்றும் Galaxy Note20 Ultra ஆகியவற்றுக்கான முற்பதிவுகளை ஆரம்பித்துள்ளது. இந்த ஸ்மாட் ஃபோன்கள் 5G தயாரான நிலையில் உள்ளதுடன் கல்வி மற்றும் தொழிலுக்கு ஏற்றவாறான சாதனங்கள் ஆகும். Samsung இன் சமீபத்திய Note series நீங்கள் வேலை செய்யும் முறைகளை மாற்றியமைக்கிறது. S Pen மற்றும் Samsung Notes அம்சங்களுடன் நீங்கள் எப்பொழுதும் எங்கிருந்தாலும் உங்கள் வேலையை செய்திட வலுவூட்டுகிறது. Samsung இன் ஒவ்வொரு புதிய Note20 Ultra வின் கொள்வனவின் போதும் Galaxy Buds Liveck Note20 யின் கொள்வனவின் போது Galaxy Buds10 உம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புதிய series மென்மையான மற்றும் நடுநிலையான நிறங்களில் கிடைக்கப்பெறுகின்றன. அத்தோடு இவை புத்தம் புதிய Timeless Premium Design இனைக் கொண்டிருப்பதனால் கைவிரல் ரேகை மற்றும் ஸ்மட்ஜ்களை குறைத்திடும்.

‘இலங்கையில் Note க்கான பாரிய வாடிக்கையாளர் தளம் ஒன்றினை நாம் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆண்டுதோறும் தங்கள் Galaxy Note இனை மேம்படுத்துகிறார்கள்.

காரணம் இது வேறு எந்த smartphone உம் வழங்காதவற்றை – சக்தி மற்றும் உற்பத்தித்திறனை வழங்குகிறது. Galaxy Note 20 Galaxy Note20 Ultra ஆனவை 5G மற்றும் உற்பத்தி திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. மேலும் நுகர்வோருக்கு தங்கள் வேலைகளை அதிகரித்துக் கொள்ளவும் அவர்கள் இணைப்பில் இருக்கையில் விளையாடவும் இது உதவுகிறது. இவ்வாண்டு இலங்கையின் முதலாவது 5G தயார் நிலையிலுள்ள ஸ்மார்ட் ஃபோன்களான Galaxy Note20 Ultra 5G மற்றும் Note20 5G ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறோம்.’ என Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளர். கெவின் யூ தெரிவித்தார்.
SHARE