Saturday 24 October 2020

மிஸ்ட்கோல் மூலம் மீதியை சரிபார்த்தல் கொமர்ஷல் வங்கியின் புதிய அறிமுகம்..!!!

SHARE


கொமர்ஷல் வங்கி அதன் கிரடிட் கார்ட் வாடிக்கையாளர்களின் நன்மை கருதி புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘மிஸ்ட்கோல் மூலம் கார்ட் மீதி’ என்பதே அந்தப் புதிய சேவையாகும். வாடிக்கையாளர் அனுபவிக்கும் வசதிகளை அதிகரிக்கும் வகையில் இந்த மிஸ்ட்கோல் அலர்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் மிகவும் வசதியான முறையில் பரபரப்பின்றி தமது கார்ட் மீதிகளைத் தெரிந்து கொள்ள இந்த முறை வழியமைக்கின்றது.

வங்கியின் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் தமது கையடக்க தொலைபேசி இலக்கத்தைப் பதிவு செய்துள்ள பட்சத்தில் 0112353111 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு இந்த மிஸ்ட்கோல் சேவை மூலம் தமது கார்ட் மீதியைத் தெரிந்து கொள்ள முடியும். இந்த நம்பருக்கு டயல் செய்ததும் கார்ட் வைத்திருப்பவரின் அழைப்பு ஒரு சில நொடிகளில் தானாகவே துண்டிக்கப்படும். அதனைத் தொடர்ந்து வங்கி அவருக்கு குறுஞ்செய்தி ஊடாக அவரது கார்ட்டின் கடைசி நான்கு இலக்கங்களுடன் அதற்கான மீதித் தொகையையும், கடைசிக் கூற்றின் மீதி, குறைந்த பட்சமாகக் கட்டவேண்டிய தொகை, அதற்கான கால அவகாசம் என்பனவற்றை அறிவிக்கும். பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் ஒன்றுக்கும் அதிகமான கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட்டுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தால் இதே விதத்தில் சகல கார்ட்டுகளுக்குமான மீதி விவரங்கள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும்.
SHARE