Monday 18 January 2021

ஏ-9 பிரதான வீதியை இடைமறித்து ஆசிரியர்கள் போராட்டம்..!!!

SHARE


இன்றைய தினம் வடமாகாண யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஆறு வருடங்களுக்கு மேல் வெளி மாவட்டத்தில் சேவை ஆற்றியும் சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.

ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நடந்த இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை சந்திக்க ஆளுநர் முன் வராமை காரணமாக ஆசிரியர்கள் A9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடவே.  போலீசாருக்கும் போராட்ட ஆசிரியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
அதன்பின் ஆளுநரின் செயலாளரை சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது ஒரு வார காலத்திற்குள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் வடமாகாண ஆளுநரும் பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பத்தை பெற்றுத்தருவதாக எழுத்து மூலம் உறுதியளிக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க மற்றும் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், வடமாகாண செயலாளர் ஸ்ரீ கந்த நேசன் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


















 

SHARE