Thursday 21 January 2021

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது. 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 850 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. அத்தோடு உலகப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் இன்று(21) ஒரு பவுண் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 850 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று அதன் விலை 99 ஆயிரத்து 850 ரூபாயாகக் காணப்பட்டது.

தூய தங்கத்தின் விலை

24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது

SHARE