யாழில் கொள்ளை கும்பலின் சித்திரவதையில் வயோதிபர் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதை புரிந்ததில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

தென்மராட்சி அல்லாரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. அதில் சிவராசா (வயது-72) என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

வயோதிபத் தம்பதி வசிக்கும் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக் கும்பல் அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தி, பணம் நகை என்பவற்றை கேட்டுள்ளனர். . அதில் வயோதிபரின் கழுத்தை நெரித்ததில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

அதனை அடுத்து வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு கும்பல் தப்பித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here