யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கும் முல்லைத்தீவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 406 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நான்கு பேருக்கும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் ஏழு பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
