வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..!!!


வட மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 186 பேரின் மாதிரிகள்
பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
10 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம்  முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது பரிசோதனையிலேயே தொற்று உள்ளமை அறியப்பட்டது.

கிளிநொச்சி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
Previous Post Next Post


Put your ad code here