Wednesday 30 June 2021

அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா; வீட்டில் முடங்கிய அவுஸ்திரேலிய மக்கள்..!!!

SHARE


அவுஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் நகரில் டெல்டா பிளஸ் கொரோனாவால் அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் கொரோனாவாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மின்னல் வேகத்தில் பரவி வரும் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு அவுஸ்திரேலியாவும் தப்பவில்லை.

டெல்டா பிளஸ் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து அவுஸ்திரேலியாவின் 4 நகரங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பெர்த் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேன் நகரில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, சிட்னியில் ஜூலை 9-ம் திகதி வரையிலும், டார்வின் நகரில் வரும் வெள்ளிக்கிழமை வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், நியு சவுத் வேல்ஸ் உள்ளிட்ட நகரங்களிலும் ஊரடங்கு அமுலில் உள்ளது.

அவுஸ்திரேலியா முழுவதும் 257 பேர் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நியு சவுத் வேல்சில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அவசர காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பல்வேறு நகரங்கள் அறிவித்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் அஸ்ட்ரா செனகா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மொத்த மக்கள் தொகையில்5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாததால் டெல்டா வகை கொரோனா அதிகமாக பரவுகிறது எனவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SHARE