Friday 2 July 2021

4 டொலருக்கு வாங்கப்பட்ட ஓவியம் ஏலத்தில் 90,000 டொலருக்கு விற்பனை..!!!

SHARE

4 டொலருக்கு வாங்கப்பட்ட ஓவியம் 90,000 டொலருக்கு ஏலம் விடப்பட்டது

பிரபல பிரிட்டிஷ் பாப் பாடகர், டேவிட் போவி வரைந்த அந்த ஓவியம், கனடாவில் நடத்தப்பட்ட ஏலத்தில் விற்கப்பட்டது.

ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்ற டேவிட் போவி, நூற்றுக்கணக்கான ஓவியங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவற்றுள் சில ஏலத்தில் விற்கப்பட்டதும் உண்டு. இருப்பினும், அவரே வரைந்த ஓவியங்கள் விற்கப்படுவது மிகவும் அரிது என்று கூறப்பட்டுள்ளது.

1995 இலிருந்து 1997க்கு இடைப்பட்ட காலத்தில் டேவிட் போவி, அந்த ஓவியத்தை வரைந்ததாகத் தெரிகிறது.

2001 இல் இணையம்வழி அந்த ஓவியம் விற்கப்பட்டது. பிறகு, நன்கொடையாகப் பெறப்படும் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைக்கு அது எப்படியோ சென்று சேர்ந்தது. அங்கு அதை ஒருவர் 4 டொலருக்கு வாங்கினார்.! டேவிட் போவியின் கையொப்பம் உள்ள அந்த ஓவியம் உண்மையானது என்று பின்னர் தெரியவந்தது. அது 7,000 இலிருந்து10,000 டொலர் வரை ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதை விட 9 மடங்கு அதிகமாக ஏலம் போயிருக்கிறது அந்த ஓவியம்.
SHARE