காய்ச்சல் மற்றும் ஏனைய நோய் காரணங்களினால் PCR பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தற்சமயம் அதிக எண்ணிக்கையிலானோர் PCR பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு நோய்தொற்றுக்குள்ளாகி இறுதி அறிக்கை கிடைக்க முன்னர் தொழிலுக்குச் செல்பவர்களினால் பாரிய பாதிப்பு ஏற்படலாம் என்றும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பல இடங்களிலும் தற்சமயம் எழுமாறான முறையில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news