Sunday 12 September 2021

கடலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக உலகின் மிகப்பெரிய பெரிய காற்றாலை..!!!

SHARE

காற்றாலை தயாரிப்பில் தற்போது சீனா முன்னணிக்கு வந்து இருக்கிறது. அமெரிக்காவின் ஜி.ஈ. நிறுவனம் தயாரித்த “ஹாலியாடே – எக்ஸ்” என்ற இராட்சத காற்றாலையை விட “மைசே” (Myse) என்ற பெரிய காற்றாலையை சீனாவின் “மிங்யாங் ஸ்மார்ட் எனர்ஜி” நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரு “மைசே” காற்றாலை 16 ” மெகாவொட்ஸ் “மின்சாரத்தை தயாரித்து 20 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கும் திறன் கொண்டதாக காணப்படுகிறது.

இது கடலில் மிதந்தபடி கடற்காற்றில் மின்சாரம் தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்பகுதியில் இருந்து 242 மீட்டர் உயரம் எழுந்து நிற்கும் மைசே காற்றாலையின் ஆயுள் காலம் 25 ஆண்டுகள் என தெரிவித்துள்ளனர்.

வரும் 2022ல் ஒரு “மைசே” காற்றாலை வெள்ளோட்டத்திற்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது வெற்றி கண்டதும், அடுத்தடுத்த ஆண்டுகளில், பிரம்மாண்ட காற்றாலைகளை கடலில் மிதக்கவிடவுள்ளது.

அப்படி மிதக்கும்போது, 118 மீட்டர் நீளமுள்ள மூன்று விசிறிகளும் சுழலும்போது, அவற்றின் பரப்பளவு மட்டும் ஆறு கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பரந்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சீன ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, கடலில் மிதக்கும் காற்றாலைகளின் அளவு பெரியதாக இருக்கும் பட்சத்தில், அவற்றில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு, படிப்படியாக குறையும் என்று தெரியவருகிறது.

இதனால் தான் கடல்பரப்பை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் கடல் மிதவைக் காற்றாலைத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
SHARE