Friday 25 March 2022

அவுஸ்திரேலிய அணி 115 ஓட்டங்களால் வெற்றி..!!!

SHARE

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 115 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

லாஹூர், கடாபி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 391 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களையும் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து 351 என்ற வெற்றியிலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி லாஹூரில் நடைபெறவுள்ளது.
SHARE