யாசகர் ஒருவர் கத்தியால் குத்தியதில் பத்தரமுல்லையில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பத்தரமுல்லை பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து வௌியில் சென்ற ஆயுர்வேத வைத்தியர் ஒருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட யாசகர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் மாலபேயை சேர்ந்த 57 வயதான ஆயுர்வேத வைத்தியர் உயிரிழந்துள்ளார்.
யாசகர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news