Saturday 10 September 2022

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!!

SHARE



இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களும் ஒப்பீட்டளவில் 15 கிலோமீட்டர் ஆழத்தில், அபேபுரா நகரத்திலிருந்து 272 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அல்லது சேதங்கள் எதுவும் உடனடியாக அதிகாரிகளால் அறிவிக்கப்படவில்லை.

எனினும் இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BKMG) மிதமான நடுக்கம் மற்றும் லேசான சேதம் குறித்து எச்சரித்துள்ளது. இந்தோனேசியாவில் பசிபிக் நெருப்பு வளையம் மீது அதன் நிலை காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது.

இது டெக்டோனிக் தகடுகள் மோதும் தீவிர நில அதிர்வு செயல்பாட்டின் ஒரு வளைவு என்பதுடன் இது ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் நீண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 2021 இல் சுலவேசி தீவை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 100 க்கும் மேற்பட்ட மக்களைக் பலியெடுத்தது. அத்துடன் ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக ஆக்கியமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
SHARE