Thursday 8 September 2022

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு..!!!

SHARE

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணி ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

96 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த புதன்கிழமை ஒரு மெய்நிகர் ஆலோசனையில் கலந்துக்கொண்டதையடுத்து, அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

அத்துடன், அவரது உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் அதிக கரிசனையுடன் இருந்தனர்.

இதேவேளை, பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
SHARE