வவுனியா விபத்தில் வைத்தியர் உயிரிழப்பு..!!!


வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மருத்துவ நிர்வாக முதுமாணிப் பட்டதாரியான இவர் வவுனியா வைத்தியசாலை மற்றும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் முன்னாள் பணிப்பாளரும் ஆவார்.



Previous Post Next Post


Put your ad code here