வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அவ்வாறு ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களுடன் இணைந்து ஒரே ராசியில் பயணிக்க நேரிடும். இந்நிலையில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மீன ராசிக்கு வக்ர நிலையில் நுழைந்து பயணிக்கவுள்ளார். இந்நிகழ்வானது ஏப்ரல் 09 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த மீன ராசியில் ஏற்கனவே சுக்கிரனும், சூரியனும் பயணித்து வருகின்றனர். இதனால் மீன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் 5 ஆண்டுகளுக்கு பின் இந்நிகழ்வு மீனத்தில் நிகழவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக எடுத்த காரியங்களில் வெற்றிகளையும், நல்ல லாபத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த காலத்தில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதனால் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். மேலும் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் வருமானத்தை அதிகரிக்க பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். மாணவர்கள் இக்காலத்தில் தேர்வுகளை சிறப்பாக எழுதுவார்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலனைப் பெறக்கூடும். உங்களின் வேலைக்கு சரியான அங்கீகாரம் பணியிடத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
Tags:
Rasi Palan
