Showing posts with label Jaffna News. Show all posts
Showing posts with label Jaffna News. Show all posts

Tuesday, May 24, 2022

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் - பொலிசாரின் கண் முன்னே முறைகேடு..!!!

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் - பொலிசாரின் கண் முன்னே முறைகேடு..!!!


யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி - கஸ்தூரியார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு குழப்ப நிலை ஏற்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகள் , முறைகேடுகள் குழப்பங்கள் இன்றி விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போலீசாருக்கு முன்பாகவே , பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலை மீறி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20 லீட்டர் கொள்வனவு உடைய கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எரிபொருள் விநியோகித்தவர்கள் , நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள்களில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு 500 ரூபாய்க்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்க முடியும் என அறிவித்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டது.



பெற்றோல், டீசலின் விலைகள் 400 ரூபாயைத் தாண்டியது..!!!

பெற்றோல், டீசலின் விலைகள் 400 ரூபாயைத் தாண்டியது..!!!


நாட்டில் அனைத்து வகையான எரிபொருளும் 400 ரூபாயைத் தாண்டியது.

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து வகையான எரிபொருள்களும் 400 ரூபாயைக் கடந்துள்ளது.

இதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் 82 ரூபாயினால் அதிகரித்து 420 ரூபாயாகவும், 95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் 77 ரூபாயினால் அதிகரித்து 450 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 111 ரூபாயினால் அதிகரித்து 400 ரூபாயாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 116 ரூபாய் அதிகரித்து 445 ரூபாயாகவும் உள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை அதிகரிப்பை அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், இவ்வாறு விலைகளை உயர்த்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இறக்குமதி, இறக்குதல், வரி உள்பட நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் செய்யும் போது ஏற்படும் அனைத்து செலவுகளும் இந்த விலைத் திருத்தத்தில் உள்ளடங்குவதாகத் தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, இலாபங்கள் கணக்கிடப்படவில்லை அல்லது உள்ளடக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இதேவேளை, போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை திருத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சூத்திரம் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை அல்லது மாதந்தோறும் பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்துத் துறையிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்ததுடன், 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

மேலும், நிறுவனங்களின் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் இன்று (24) முதல் அரச துறை ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படுவார்கள் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருளைப் பயன்படுத்துவதைக் குறைக்கவும், எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


Monday, May 23, 2022

யாழில் இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் ஒலி பெருக்கி பாவனைக்கு தடை..!!!

யாழில் இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் ஒலி பெருக்கி பாவனைக்கு தடை..!!!


யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயித் என் பி லியனகே தெரிவித்தார்.

க.பொ.தர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளதன் காரணமாக, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், க.பொ.த. சாதாரண பரீட்சை இன்று ஆரம்பித்தள்ளது. யாழ் மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


சாவகச்சேரியில் மினிவான் விபத்து..!!!

சாவகச்சேரியில் மினிவான் விபத்து..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வான் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான், வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Sunday, May 22, 2022

 23.05.2022 - 01.06.2022 வரை மின்வெட்டு விவரம் வெளியீடு..!!!

23.05.2022 - 01.06.2022 வரை மின்வெட்டு விவரம் வெளியீடு..!!!


நாளை முதல்(23.05.2022 - 01.06.2022) வரை  மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் மின்வெட்டு இடம்பெறும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.