Showing posts with label Medical. Show all posts
Showing posts with label Medical. Show all posts

Sunday, March 19, 2023

சிறுநீரக கற்கள் இருப்பதை கண்டறிதல்..!!!

சிறுநீரக கற்கள் இருப்பதை கண்டறிதல்..!!!


சிறுநீரக கற்கள் என்பது தற்போது, பொதுவான பிரச்சனை ஒன்றாக மாறிவருகின்றது. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க வேண்டும். அதிலும் பெண்கள் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள்.

முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கல்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்தலும், சிறுநீரக கற்கள் உருவாகும்.

சிறுநீரக கற்கள் இருந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படும் எனவே, அவற்றைக் இனங்கண்டு உடனே கரைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் ஆனது, சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறி ஆகும். அதிலும் அந்த எரிச்சலானது சிறுநீர் கழித்து 5-6 நிமிடங்கள் வரை இருக்கும்.

திடீரென்று அதிகப்படியான காய்ச்சல், குமட்டல் இருந்தால் உங்கள் சிறுநீரகங்களில் கற்கள் உள்ளது என்று அர்த்தம். சிறுநீர் தெளிவின்றி இருந்தல், சிறுநீரக கற்களுக்கான அறிகுறி ஆகும். மேலும், அது சிறுநீர் பாதையில் தொற்று இருப்பதையும் குறிக்கும்.

அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் இந்த உணர்வு ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.

சிறுநீர் கழிக்கும் போது, அத்துடன் இரத்தம் வெளியேறினால், சிறுநீரக கற்கள் சிறுநீரகங்களில் காயங்களை ஏற்படுத்தி, அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

அடிக்கடி தெளிவற்ற சிறுநீருடன், அடிவயிற்றில் கடுமையான வலி, பிறப்புறுப்பைச் சுற்றி அடிக்கடி கடுமையான வலி, வழக்கத்திற்கு மாறாக பிறப்புறுப்பைச் சுற்றி மற்றும் முகத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுதல் அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.

எனவே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தை போக்கிக் கொள்ளுங்கள்.

Sunday, February 26, 2023

தோல் அழற்சி நோயிற்கான நிவாரணம்..!!!

தோல் அழற்சி நோயிற்கான நிவாரணம்..!!!


சரும நோய் என்றாலே தோல் அரிப்பு நோய், தோல் அரிக்காத படர் தாமரைப் போன்ற நோய் மற்றும் அரிக்கும் ஆனால் கண்ணுக்குப் புலப்படாத நோய் என பலவாறு பிரித்துக் கூறினாலும், பொதுவாக தோல் நோய்கள் வந்தாலே மனதளவில் தளர்ச்சி ஏற்பட்டுவிடும்.

இதற்காக சரும நோய்கள் ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவார்கள்.

அதிலும் ஆண்களை விடவும் பெண்கள் இவ்விடயத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்கிறார்கள்.

அரிக்கும் தோல் நோய்கள் பெரும்பாலும் ஒவ்வாமையின் பக்கவிளைவாகவேப் பார்க்கப்படுகிறது.

ஒரு சிலருக்கு அவர்கள் உட்கொள்ளும் மருந்தின் பக்க விளைவாகவும், வேறு சிலருக்கும் அவர்கள் சாப்பிடும் உணவின் வகைகளால் ஏற்படும் பின்விளைவாகவும், வேறு சிலருக்கு மட்டுமே இது மரபு வழி காரணிகளால் ஏற்படும் நோயாகவும் இருக்கிறது.

ஆஸ்துமா பாதித்துள்ள ஒரு குடும்ப உறுப்பினரின் பரம்பரையில் வருவோர்களுக்கு இது மரபு வழி பாதிப்பாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. அதிலும் தடிப்புடன் கூடிய அரிப்பு, தலை அரிப்பு தலைப் பகுதி அரிப்பு கழுத்து, கை, மூட்டுகளின் உள்பக்கம், கால், முழங்கால் மற்றும் பிட்டங்கள் ஆகிய பகுதிகளில் இவர்களுக்கு தோல் அரிப்பு நோய் தாக்குவது உறுதி என்று கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் மிகுந்த கவனத்துடன் தொடக்க நிலையிலேயே மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனைப் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஒரு சிலருக்கு வியர்வைக் கட்டி விரல் ஓரங்களில் கொப்புளம்,தொப்புள், உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற பகுதிகளில் தோலழற்சி நோய் பாதிக்கும். இது பெரும்பாலும் பெண்களையே அதிகமாகப் பாதிப்பதால் இவ்வகையான அரிப்புக்கு இல்லத்தரசி அரிப்பு நோய் என்றும் சில மருத்துவர்கள் குறிப்பிடுவதுண்டு. இது பொதுவாக கோடை மற்றும் வெப்பம் மிகுந்த காலங்களில் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஒரு சிலருக்கு அவர்களின் குருதி ஓட்டம் இயல்பான அளவை விட மிகக்குறைந்த அளவேயிருந்தால் அவர்களுக்கு நரம்பிய அரிப்பு தோலழற்சி (Venous Eczema). புவியீர்ப்பு அரிப்பு தோலழற்சி ( Gravitational Eczwma) , மந்த சருமவழல் ( Statis Dermatitis), சிரைத் தளர்ச்சி அரிப்புத் தோலழற்சி (Vericose Eczema) ஆகிய சரும நோய்கள் வரக்கூடும்.அத்துடன் இத்தகைய பாதிப்புகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கணுக்கால் பகுதியில் ஏற்படுகிறது. இப்பகுதியில் தோல் சிவந்து காணப்படும். ஒரு சிலருக்கு கணுக்காலின் அளவு சுருங்கியோ அல்லது கருத்தோக் காணப்படும். இது காலில் புண் கள் வருவதற்கு முந்தைய நிலை என்று கூட கூறலாம். அதனால் இந்நிலையில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைப் பெற்று நிவாரணத்தைத் பெற்றுக்கொள்ளவேண்டும்.

பொதுவாக எம்முடைய சருமப் பாதுகாப்பு தடையானது பாதிக்கப்படும் போது (அதாவது தோல் வறண்டு போதல் அல்லது வெடிப்பு விடுதல்) எம்முடைய புறச்சூழலில் உள்ள நோயை உருவாக்கக்கூடிய பாக்டீரியக்கள் தோலின் வழியாக உடலில் உள் நுழைகின்றன. அத்துடன் நாம் மேலும் சரும பாதிப்பை உணராமல் சொறிவதால் அதனை மேலும் பல இடங்களுக்கு பரவ அனுமதிக்கிறோம். இதனை தடுக்கவேண்டும் என்றால் சரும பாதுகாப்புப் படைக்கு தேவையான நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருளை உணவாகவோ அல்லது மருந்தாகவோ எடுத் துக்கொள்ளவேண்டும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் அல்லது தோல் அரிப்பால் சருமம் வறண்டு போன வர்கள் இருவர்களும் தோலை ஈரப்பதமாக வைத்திருக்கக்கூடிய சிகிச்சைகள் மீது கவனத்துடன் இருக்கவேண்டும். தோல், தேவையான நீர்ச்சத்துடன் இருந்தால் தான் தோல் பாதுகாப்பாக இருக்கும். அத்துடன் தோல் அரிப்பு மற்றும் தோலழற்சிக்கு இடம் கொடாமல் இருக்கும். இதற்கு நீங்கள் உங்களின் சவர்க்காரத்தை கவனமாகத் தெரிவு செய்யவேண்டும். ஏனெனில் தோல் அழற்சிக்கு சவர்க்காரம் முக்கிய காரணமாக இருக்கிறது. அத்துடன் முகப்பூச்சுகளையும், வாசனை திரவியங்களையும் தவிர்க்கவேண்டும். அதற்கு மாற்றாக கூழ்ம நிலையில் கிடைக்கும் ஓட்ஸ் உணவு வகைகளைப் பயன்படுத்தி குளிக்கலாம் அல்லது இயற்கையான சரும பாதுகாப்பு எண்ணெயை தேய்த்து குளித்து தோலை வறட்சியடையச் செய்யாமல் தேவையான அளவிற்கு ஈரப்பதத்துடன் வைத்துக்கொண்டால் தோல் அழற்சி நோய் தீண்டாது.


டாக்டர் எஸ். அனூஜ் சிங்
தொகுப்பு அனுஷா.

Sunday, February 19, 2023

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வழிகள்..!!!

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வழிகள்..!!!


தினமும் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

தினமும் 2 இலிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

பட்டினிக் கிடத்தல், கூல் ட்ரிங்ஸ் மற்றும் அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது.

உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும்.

இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்

தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-4)

இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்துங்கள்.

அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.

தமது எடையை அடிக்கடி பார்த்து அதற்குத் தகுந்தவாரி உணவுப் பழக்கங்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

Sunday, January 29, 2023

குறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு..!!!

குறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு..!!!


நாள்தோறும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாள்தோறும் குறைவாக தூங்குபவர்களின் சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4238 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை மருத்துவர் ஜோசப் மெக்மில்லன் கூறினார்.

மேலும், மனிதர்களின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வழக்கமான காலமுறையை பின்பற்றுகின்றன. அதாவது சில உறுப்புகள் நாம் தூங்கும்போதும் மட்டும் இயங்கும். நாம் தூங்கும் நேரத்துக்கும் சிறுநீரக செயல்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.

Monday, October 3, 2022

நீரிழிவு நோயை ஓட ஓட விரட்டும் இஞ்சி..!!!

நீரிழிவு நோயை ஓட ஓட விரட்டும் இஞ்சி..!!!




இஞ்சி சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர் நிபுணர்கள்.

இஞ்சி என்பது நமது சமையலறையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் பொருள் ஆகும்.

இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இதை சாப்பிடுவதால் பல நோய்கள் குணமாகும். இஞ்சி ஒன்றல்ல பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

இஞ்சியை சரியான அளவில் உட்கொள்ளும் போது, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.நாள் ஒன்றுக்கு 4 கிராம் இஞ்சியை சாப்பிட்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.

எனினும், அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

இஞ்சியில் அடங்கியுள்ளஆரோக்கிய நன்மைகள்

கொலஸ்ட்ரால்

நீரிழிவு நோயாளிகளைப் போலவே இதய நோய் உள்ளவர்களுக்கும் இஞ்சி ஒரு அரு மருந்தாகும்.கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதிலும் இஞ்சி மிகவும் நன்மை பயக்கும்.

அதாவது மாரடைப்பு அபாயமும் இதன் மூலம் குறையும். தேநீருடன் கூட பயன்படுத்தலாம்.

காய்கறிகளை சமைக்கும் போதும் பயன்படுத்தலாம்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி அதிகம் உள்ளவர்களும் இதனை உட்கொள்ளலாம்.குறிப்பாக பச்சையாக இஞ்சியை உட்கொள்வதன் மூலம், அதிக பலனை பெறுவீர்கள்.

வயிறு தொடர்பான பிரச்சனைகள்

பச்சை இஞ்சி வயிற்றுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இஞ்சி செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது.

வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன பிரச்சனைகள் உள்ளவர்கள், பச்சையாக இஞ்சியை சாப்பிட, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.

Wednesday, September 28, 2022

தினமும் ஒரு கொய்யா சாப்பிடுவதால் என்ன பயன்கள்..!!!

தினமும் ஒரு கொய்யா சாப்பிடுவதால் என்ன பயன்கள்..!!!




கொய்யா பழத்தில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை போக்குவதில் கொய்யா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

கொய்யா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். கண் பார்வை கோளாறுகளை சரி செய்கிறது.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கொய்யாவில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது.
உடலின் இரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்யுமா பீட்ரூட் ஜூஸ்..!!!

உடலின் இரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்யுமா பீட்ரூட் ஜூஸ்..!!!




ஒவ்வொரு காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. இதில் உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் காய்கறி எது என்று கேட்டால் அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அதிலும் பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும்.பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம், அதில் உள்ள குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும்.

அத்தகைய டாக்ஸின்களை பீட்ரூட்டில் உள்ள பீட்டாலயின் என்னும் பொருள் வெளியேற்றச் செய்யும். உங்களுக்கு உடலை சுத்தம் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடல் சுத்தமாகும்.பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

Sunday, June 5, 2022

இலங்கையை தாக்குமா குரங்கு அம்மை? JMA யாழ் மருத்துவச் சங்கம்....!!! (Video)

இலங்கையை தாக்குமா குரங்கு அம்மை? JMA யாழ் மருத்துவச் சங்கம்....!!! (Video)