Showing posts with label Rasi Palan. Show all posts
Showing posts with label Rasi Palan. Show all posts

Wednesday, 4 October 2023

இன்றைய ராசிபலன் - 04.10.2023..!!!

இன்றைய ராசிபலன் - 04.10.2023..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் அதிக ஈடுபாடு இருக்கும். ஒரு வேலையை பொறுப்பாக செய்து முடிப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சுற்றி இருப்பவர்களிடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரப் போகின்றது. சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும். அதாவது ஃபிரண்டுடன் சினிமா பார்க்க செல்வது, பீச், பார்க் செல்வது என்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் கையில் இருக்கும் பணம் கொஞ்சம் செலவும் ஆகத்தான் செய்யும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பின்னடைவு ஏற்படும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. அதையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. சொந்த தொழிலில் புதிய ஆட்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் அடுத்தவர்களை எக்காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. அடுத்தவர்கள் மீது பழி போடும் போது உங்களுக்கு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மற்ற படி வேலை செய்யும் இடம் சொந்த தொழிலில் எதிர்பார்த்த நல்லது நடக்கும். பிரச்சனைகள் இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை அதிகம் செலவு செய்வீர்கள். அதனால் அலுவலக வேலையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். சொந்த தொழிலில் கவனக்குறைவு காரணமாக சிலர் உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீங்க பெரிய நஷ்டம் இருக்காது. அனுபவரீதியாக நிறைய பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். என்னதான் கேலியும் கிண்டலும் சேர்ந்து நாள் நகர்ந்தாலும் உங்களுடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் செய்யக்கூடிய நல்ல காரியங்களை பற்றி உங்கள் ஊர், உங்கள் தெருவே பேசக்கூட வாய்ப்புகள் உள்ளது. அந்த அளவுக்கு உங்களுடைய எண்ணங்களும் செயல்பாடும் உயர்வாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே பெயர் புகழ் பதவி உங்களை தேடி வரும் பாருங்க. கணவன் மனைவிக்கிடையே சண்டை வர வாய்ப்பு உள்ளது. வாக்குவாதம் செய்யாதீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும். எந்த வேலையிலும் மனசு ஈடுபடாது. கொஞ்ச நேரம் கண்களை மூடி தூங்கலாம் என்று மனசு சொல்லும். ஆனால் வேலை பளு தூங்கவிடாமல் தடுக்கும். இப்படி சின்ன சின்ன தடுமாற்றம் இருப்பதால் சின்ன சின்ன தோல்விகளும் இருக்கும். கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும். வாய்ப்பு கிடைத்தால் லீவு போட்டு விட்டு வீட்டிலேயே தூங்கி ஓய்வு எடுக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது. உணர்ச்சிவசப்பட்டு யாரையும் திட்டவும் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அமைதியாக சென்றால் பிரச்சனை இல்லை. வாக்குவாதம் செய்வதன் மூலம் உங்கள் மனசு தான் கஷ்டப்படும். மற்றபடி செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளை போராடி ஜெயிக்கவே சரியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன எதிரிகள், சொந்த தொழிலில் போட்டியாளர்கள் என்று எல்லோரும் உங்களை விரட்டுவார்கள். வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் கூட சண்டை போடுவார்கள் என்றால் பாருங்கள். அந்த அளவுக்கு நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். வேறு வழி கிடையாது. எதிரிகளை எப்படியாவது சமயத்தில் கொள்ளுங்கள். எதிர்த்து சண்டை மட்டும் போடாதீங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகமாக இருக்கும். அதே சமயம் செலவும் அதிகமாக இருக்கும். வந்த சம்பளத்தை பத்திரமா வச்சுக்கோங்க. மாத கடைசி வரை அதை வைத்து தான் ஓட்ட வேண்டும். யார் யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக பணத்தை வாரி இறைக்காதீங்க. புத்தி மயங்கி போக வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது நபர் பேச்சை முழுசாக நம்பினால் நஷ்டம் உங்களுக்கே.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் வந்த சிக்கல் வந்த வழி தெரியாமல் உடனே சரியாகிவிடும். கவலைப்படாதீங்க கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. இன்று வெளியே செல்வதற்கு முன்பு குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு சென்றால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். மனதை சரி செய்ய கொஞ்ச நேரம் உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள். அப்படி இல்லை என்றால் கோவிலுக்கு செல்லுங்கள். வேலை பளு அதிகமாக உள்ள சமயத்தில் முன்கோபம் வரும். உடன் பணிபுரிபவர்களிடம் சண்டை போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை விவசாயிகளுக்கு இந்த நாள் முன்னேற்றத்தை தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த உடல்நிலை பிரச்சினை இன்று சரியாகும். எப்போதும் போல வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். சொந்த தொழிலில் எதிர்பார்த்த நல்லது நடக்கும். வாரா கடன் வசூலாகும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். வீன் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.

Tuesday, 3 October 2023

இந்த வார ராசிபலன் 02.10.2023 முதல் 08.10.2023 வரை..!!!

இந்த வார ராசிபலன் 02.10.2023 முதல் 08.10.2023 வரை..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்பம் மிகுந்த வாரமாக திகழப்போகிறது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பண வரவு எதிர்பார்த்த படி இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நன்மை பயக்கும். உடல் நலம் சீராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதேபோல் குடும்பத்தில் தங்களுக்கு என்று வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

வேலையை பொறுத்தவரை எப்போதும் போல் வழக்கமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும். அலுவலக ரீதியாக வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் எதிர்பார்த்த அளவு லாபத்தை கொடுக்காது. மறைமுக எதிரிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் எடுப்பதை இந்த வாரம் தள்ளி வைப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. அதிக அளவு செலவுகள் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து முடித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய பேச்சு வார்த்தைகள் வீட்டில் நடைபெறும். பயணங்களால் லாபம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வேலையை பொறுத்தவரை புதிதாக வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு திடீர் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இருப்பினும் திட்டம் தீட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். மூன்றாவது நபர் தலையிடுவதை தவிர்த்தால் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் சற்று காலதாமதமாக வெற்றி கிடைக்கும்.

வேலையை பொறுத்தவரை பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விற்பனையில் லாபம் அதிகமாகவே இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையுடன் இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. வீண்விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஆதலால் பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு ஏற்படும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து எடுப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்குள் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

வேலையை பொறுத்தவரை பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றமும் ஏற்படக்கூடும். வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சிக்குரிய முதலீடுகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதியை வழிபட வேண்டும்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றியடையும் வாரமாக திகழப் போகிறது. வருமானத்திற்கு எந்த வித குறைவும் இருக்காது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பல வகைகளில் பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.

வேலையை பொறுத்தவரை பணி சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். அதனால் பல சலுகைகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் இருக்காது. என்றாலும் நஷ்டமாகாமல் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தொடங்க ஆரம்பிக்க சிறந்த வாரமாக இந்த வாரம் இருக்கும். மேலும் இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாலை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகளை சமாளிக்க கூடிய வாரமாக திகழப்போகிறது. பணவரவை பொருத்தவரை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்திய தனத்தால் சரி செய்து விடுவீர்கள். பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அத்யாவசிய பயணத்தை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்து இருந்த கடன் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. செயல்திறன் அதிகரிக்க கூடிய வாரமாக திகழப் போகிறது.

வேலையை பொறுத்தவரை கடினமாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைப்பது சிரமம் தான். இருப்பினும் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு முடிவெடுக்க வேண்டும். லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விலகிய உறவுகள் விரும்பி வந்து சேரும் வாரமாக திகழப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி அன்போடு அன்யோன்யம் ஏற்படும். வரவிற்கு ஏற்ற செலவு ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். தவறாக புரிந்து கொண்ட அனைவரும் விரும்பி வந்து தங்களை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உயர் அதிகாரிகளின் ஆதரவால் அலுவலகத்தில் பல நல்ல நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயலாற்றுவீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடன் இருப்பவர்களுடன் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வைஷ்ணவி தேவியை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாரமாக திகழப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள முக்கியமான விஷயங்களை இருவரும் பேசி சுமுகமாக முடித்து வைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும் அதற்காக கடன் வாங்குவதை சமாளித்து விடுவீர்கள். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுத்து நன்மை அடைவீர்கள்.

வேலையை பொறுத்தவரை உடன் வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு அதிகமாக கிடைக்கும். இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனமாகவும், நிதானமாகவும் பேச வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்க்க லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வியாபாரத்தை முன்னேற்ற என்ன செய்யலாம் என்ற யோசனை மனதிற்குள் அதிகரிக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு செயலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன் தீவிரமாக யோசித்து செயலாற்றினால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். சலுகைகளும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் சற்று அதிகமாகவே உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்க்காத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் சாதகமான சூழ்நிலையில் இல்லை. எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறுவதற்குரிய சாதகமான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தங்கள் உடல் நலனில் மட்டுமில்லாமல் குடும்பத்தாரின் உடல் நிலையிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

வேலையை பொறுத்தவரை பணி சுமை சற்று அதிகமாகவே இருந்தாலும் அவை அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வேலை எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்துடன் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை விட சற்று அதிகமாகவே லாபம் கிடைக்கும். வியாபாரத்தை பற்றி இதுவரை இருந்து வந்த கவலை நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாரமாக திகழப் போகிறது. இதுவரை ஏற்பட்டிருந்த தேவையில்லாத செலவுகள் குறைவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் சேமிப்பு என்பது ஏற்படும். பிறரிடம் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுத்தால் அது சாதகமாக இருக்கும். வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொறுத்தவரை அதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றம் ஆகியவை கிடைக்கவும் வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரம் நல்ல முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல ஆரம்பிக்க போகிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதற்கு தீவிரமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும் இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மாரியம்மனை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும் கூடிய வாரமாக திகழப் போகிறது, எதிர்பார்த்த வருமானத்தை விட கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சில சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சுப செய்தி விரைவிலேயே கிடைக்கும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் அலட்சியப் போக்கை தவிர்த்து கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் தென்படும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை விட அதிகமாகவே கிடைக்கும். எந்த அளவுக்கு அதிகமாக கிடைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அதனால் வியாபாரத்தை மேலும் விரிவாக்க முயற்சிப்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
சனி பெயர்ச்சி பலன் 2023; 30 ஆண்டுகளுக்குப் பின் தேடி வரும் கோடீஸ்வர யோகம்..!!!

சனி பெயர்ச்சி பலன் 2023; 30 ஆண்டுகளுக்குப் பின் தேடி வரும் கோடீஸ்வர யோகம்..!!!


ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்ற முதுமொழி ஒன்றும் உண்டு.

சனி பகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.

அந்தவகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவானால் 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு பதவி பட்டம், கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார்.

அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார். சனிபகவான் கும்ப ராசியான தனது சொந்த வீட்டில் பயணம் செய்கிறார்.

இந்த சனி பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார்? அதேபோல 12 ராசிகளிலும் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என பார்க்கலாம்.

மேஷம்:

லாப சனி மேஷ ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகிறார். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம்.

அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

ரிஷபம்:

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனியால் சச யோகம் செயல்படும். இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புது பதவி கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது.

புதிய கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

மிதுனம்:

அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். ஏனெனில் இது தர்ம சனி காலம். பதவியில் உயர்வு புரமோசன் கிடைக்கும். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். கோடி கோடியாக கொட்டித்தரப்போகிறார் சனி பகவான்.

கடகம்:

எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும்.

வரக்கூடிய பணத்தை கவனமாக கையாளுங்கள். பேராசை பெரு நஷ்டமாகிவிடும்.

சிம்மம்:

உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனியால் மிகப்பெரிய சச யோகம் தேடி வரப்போகிறது. சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பல வழிகளிலும் வரப்போகிறது. வீண் செலவுகளை தவிர்த்தால் சேமிக்கலாம்.

கன்னி:

சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.

கன்னி ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இனி இரண்டரை ஆண்டு காலம் ராஜயோக காலம் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

துலாம்:

உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இனி வளர்ச்சிதான். ஏற்றம் தரும் சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரப்போகிறார்.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் சச யோகம் தேடி வரப்போகிறது. இனி உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆசைகளை குறிக்கோள்களை சனி பகவான் நிறைவேற்றுவார்.

விருச்சிக ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது.

தனுசு:

ஏழரை சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கப்போகிறது. காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது. கோடி கோடியாக வரப்போகும் செல்வத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

மகரம்:

ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. இரண்டரை ஆண்டு காலங்கள் கஷ்டங்களைக் கடந்து விடுவீர்கள். உங்களின் புதிய பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும்.

எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும். நிதானமாக அடி எடுத்து வைப்பது அவசியம்.

கும்பம்:

சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். ஜென்ம சனி காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு அதிகரிக்கும். குருவின் பயணம் சாதகமாக இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். 2024ஆம் ஆண்டு முதல் பண விசயங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.

மீனம்:

ஏழரை சனி ஆரம்பம் என்பதால் எதிலும் கவனமும் நிதானமும் தேவைப்படும். மீன ராசியில் பிறந்தவர்களுக்கு முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. இந்த கால கட்டத்தில் சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தருகிறார்.

அரசியல்வாதிகளுக்கு சனிபகவானின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரப்போகிறது என்றாலும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இரண்டரை ஆண்டுகளுக்கு பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.
இன்றைய ராசிபலன் - 03.10.2023..!!!

இன்றைய ராசிபலன் - 03.10.2023..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரும் நாளாக அமையும். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்ய வங்கிகளின் கடனை முயற்சி செய்யலாம். சுலபமாக கடன் தொகை கிடைக்கும். மாமியார் வீட்டு உறவுகளோடு கொஞ்சம் கவனமாக இருங்கள். சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இருவரும் வாக்குவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷராக இருக்கவும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். எந்த விஷயத்திலும் உங்கள் கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். மற்றபடி தினசரி வேலையை ஆர்வத்தோடு செய்யும்போது வெற்றி நிச்சயம். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். இன்று மாலை நடக்கக்கூடிய நல்ல நிகழ்ச்சி உங்களுடைய வீட்டில் குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று பேசும் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு அனாவசியமாக வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் அடுத்தவர்களுக்கு நல்லது செய்வதாகவே இருந்தாலும் சொல்லாதீங்க. அதை செஞ்சிடுங்க. அதுதான் நன்மையை தரும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பிடிவாத குணத்தை விட்டுக் கொடுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. உங்களுடைய முன்கோபத்தாலும் சண்டையாலும் குடும்பத்தின் நிம்மதி இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உறவுகளை விட்டுக் கொடுத்து செல்லவும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் அனுசரணியாக பேசவும். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள பார்ப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் உண்டு. நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். விவசாயிகளுக்கு இது நல்ல முன்னேற்றம் தரும் நாள். கமிஷன் தொழில் செய்பவர்கள் தங்களுடைய வேலையில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும். முன்பின் தெரியாதவர்களுக்கு எந்த வேலையும் நடத்திக் கொடுக்காதீங்க.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக தான் அமையும். ஆனாலும் அடுத்தவர்கள் உங்களுடைய மனதை காயப்படுத்தும் படி சில சம்பவங்கள் நடக்கும். அதனால் பிரச்சனை இருக்காது. ரொம்பவும் பிடித்தவர்கள் உங்களை வெறுக்கும் படியான சூழ்நிலை ஏற்படும். ஆனால் ஒரு சில நாட்களில் இந்த பிரச்சனை சரியாகிவிடும். இன்று நடக்கக்கூடிய பிரச்சனையை மனதில் போட்டு குழப்பிக்காதீங்க ஃப்ரீயா விடுங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இத்தனை நாள் செய்யாமல் போட்டு வைத்த வேலைகளை கூட இன்று சுறுசுறுப்பாக செய்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ரோட்டு கடையில் வியாபாரம் செய்பவர்களுக்கு இத்தனை நாள் இல்லாத பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சின்ன சின்ன தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம். உங்களுக்கு வெற்றி பக்கத்தில் தான் இருக்கிறது. விடா முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று அழகு நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் முகத்தை நீங்களே கண்ணாடியில் பார்த்து பெருமிதம் அடைந்து கொள்வீர்கள். உற்சாகமாக வேலையை செய்வீர்கள். உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உற்சாகத்தோடு மாறும் அளவுக்கு உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரியும். அழகும் அறிவும் சேர்ந்து இன்று உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சந்தோஷமான இந்த நாளை சந்தோஷமாக கடந்து செல்லலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பாராட்டும் புகழும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் செய்த வேலைக்கு உண்டான பலனை கடவுள் கொடுக்கப் போகின்றார். உங்களுடைய கஷ்டத்திற்கு இன்று நிச்சயம் பலன் கிடைக்கும். அது எந்த வகையில் வேண்டும் என்றாலும் உங்களை வந்து சேரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். குழந்தைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சி வெற்றியைத் தரும். புதுசா இன்டர்வியூக்கு போன, அதில் நிச்சயம் சக்சஸ் தான். குலதெய்வத்தை நினைத்து விட்டு புது முயற்சியை மேற்கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும். இன்று மாலை கோவிலுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க வாய்ப்புகளும் உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்த சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் சரியாகிவிடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அடுத்தவர்களுடைய உணர்ச்சிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தன்னுடைய சுயநலத்திற்காகவே யோசித்து செயல்படுவது ரொம்ப ரொம்ப தவறு. மனைவி குழந்தைகளோடு சேர்த்து பெற்றோரையும் அக்கறையாக பார்த்துக் கொள்வதன் மூலம் நிம்மதி அடையலாம். செய்யும் தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. குறுக்கு வழியில் போகாதீங்க. அரசாங்கத்தை எதிர்த்து இல்லிகளாக எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். வேலையை சரிவர செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். ஓய்வு எடுக்கும் படி மனசு சொல்லும். சில பேருக்கு கொட்டாவி வந்து கொண்டே இருக்கும். இந்த சோம்பேறித்தனமான நாளை சுறுசுறுப்பாக நகர்த்திச் செல்ல நீங்கள் புத்துணர்ச்சியாக உங்களுக்கு பிடித்த பாடல், பிடித்த விஷயங்களை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்த்துக் கொண்டே இருங்கள். அப்போதுதான் மனசு சுறுசுறுப்பாக இருக்கும். சோம்பேறித்தனமான இந்த நாளை நகத்தைச் செல்வதில் சில சிரமங்கள் இருக்கும் ஜாக்கிரதை.

Monday, 2 October 2023

இன்றைய ராசிபலன் - 02.10.2023..!!!

இன்றைய ராசிபலன் - 02.10.2023..!!!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தர்ம சங்கடமான சூழ்நிலை நிலவும். யாராவது உங்களிடம் காசு வந்து கேட்பாங்க. ஆனா, அதை கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அதை உங்களால் பூர்த்தி செய்ய முடியாது. இப்படி சில சங்கடங்களை எதிர்கொள்ளும்போது, சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சொந்த தொழிலில் லாபமும் வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். வாரத்தின் தொடக்க நாளே சுறுசுறுப்பாக தொடங்கும். சந்தோஷம் நிறைவாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் பாராட்டும் கிடைக்கும். சொந்த தொழிலை விரிவுபடுத்த புதிய முதலீடு கிடைக்கும். சந்தோஷம் நிறைந்த இந்த நாள் இனிமையாக நகர்ந்து செல்லும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் கொஞ்சம் குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க வேண்டும். பிள்ளைகள், மனைவி, இவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள். ஒரேடியாக வேலையில் உங்களுடைய கவனத்தை செலுத்தினால் மன அழுத்தம் தான் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் குடும்ப உறவினர்களுடன் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்துக்கு இரண்டு நாள் லீவு போட்டு குடும்பத்தோடு வெளியூர் பயணம் செய்து ரிலாக்ஸ் செய்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளும் சரியாக நடக்கும். நீங்கள் பிளான் பண்ண படி, முயற்சிகளில் வெற்றி அடையப் போகிறீர்கள். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்குது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் நாளாக அமையும். ரோட்டு கடை வியாபாரிகளுக்கு எதிர்பாராத பெரிய வியாபாரம் கிடைக்கும். பண வரவால் மனது பெருமிதம் கொள்ளும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியம் எல்லாம் சுகமாக முடியும். வீட்டில் தடைபட்டு வந்த நல்ல காரியம் பேச்சுக்களை மீண்டும் பேச தொடங்க விடுவீர்கள். புரட்டாசி மாதம் முடிந்ததும் கெட்டிமேல சத்தம் கேட்கும். குழந்தை பாக்கியம் வேண்டி எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி எட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புது சிந்தனை உயர்ந்த இடத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் சிரமமான வேலையை கூட சுலபமாக முடிப்பீங்க. வராத கடன் வசூலாகும். தெரிந்தவர்கள் மூலமாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ நல்ல செய்தி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்கள் வெற்றியை கொடுக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நேர்மறை சிந்தனை அதிகமாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையையும், பிரச்சனையாக பார்க்க மாட்டீங்க. அது உங்களுக்கான அனுபவப்பாடம் என்று ஏற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வாழ்க்கைத் துணையிடம் பணத்தைப் பற்றி பேசக்கூடாது. முன்கோபத்தை குறைத்து விட்டு கொடுத்து செல்வது குடும்பத்தில் நிம்மதியை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுக்கான நாளாக இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கொஞ்சம் கரையும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இதனால் அலுவலக வேலையை ஒழுங்காக செய்ய முடியாது. அலுவலகத்துக்கு போக முடியாது. மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்க வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அலட்சியம், நஷ்டத்தை உண்டு பண்ணிவிடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். குறிப்பாக மாமியார் வழி உறவுகளின் மூலம் ஆதாயம் உண்டு. உங்களை தவறாக நினைத்துக் கொண்ட உறவுகள், இன்று சரியாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். அங்காளி பங்காளிகளுடன் சேர்ந்து நேரத்தை கழிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப் போடுங்கள். முன்கோபம் பட வேண்டாம். உறவுகளாக இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். அடம் பிடிக்கக்கூடாது. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று ஒற்றைக்காலில் நிக்காதீங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றம் இருக்கப் போகின்றது. எதிர்ப்பாலின நட்பு கூடாது. ஆதரவாக பேசுகிறார்கள், என்று நம்பி உங்களுடைய அந்தரங்க விஷயங்களை வெளியே நிச்சயம் சொல்லக்கூடாது. புது நண்பர்களுடன் பழகாதீங்க. தேன் ஒழுக்க பேசி, ஏமாற்றி விடுவார்கள். இன்று அனைவரையும் சந்தேக கண்ணோடு பார்த்து உஷாராக இருந்துகோங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நியாயமற்ற நிறைய விஷயங்கள் கண்முன்னே தெரியும். புரட்சி செய்ய வேண்டும் என்று மனசு சொல்லும். ஆனால் சூழ்நிலை உங்களை எதையுமே செய்ய விடாது. உணர்ச்சிவசப்படாதீங்க. நிதானத்தோடு இருந்தால் நல்லது நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையில் கவனத்தோடு இருந்தால் பிரச்சனை இல்லை.

Sunday, 1 October 2023

இன்றைய ராசிபலன் - 01.10.2023..!!!

இன்றைய ராசிபலன் - 01.10.2023..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சவுகரியமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தபடி எல்லா வேலைகளும் நல்லபடியாக நடக்கும். வீட்டில் பிள்ளைகள் விடுமுறையில் இருப்பார்கள். அவர்களுடைய ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நீங்க உதவி செய்வீர்கள். மனநிறைவோடு இன்றைய நாள் கடந்து செல்லும். ஞாயிற்றுக்கிழமை அல்லவா. குடும்பத்தோடு நேரத்தை கழிப்பதில் ரொம்ப சந்தோஷம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். காலை கண்விழித்து காபி குடிப்பது முதல், இரவு தூங்கும் வரை குடும்பத்தோடு நேரத்தை சந்தோஷமாக செலவழிப்பீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல விளையாட்டு நல்ல பொழுதுபோக்கு, என்று நாள் மெல்லமாக நகர்ந்து செல்லும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு என்று கொஞ்சம் வேலைகள் இருக்கும். விடுமுறை நாளாக இருந்தாலும் உங்களால் ஓய்வு எடுக்க முடியாது. கொஞ்சம் சிரமப்பட்டு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து விட்டால் திங்கட்கிழமை நலம் பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை சாப்பிடுங்கள். வயிறு உபாதைகளை தவிர்க்க காரத்தை குறைத்து சாப்பிடுவது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பிசியான நாளாக இருக்கும். ஓய்வு எடுக்க நேரமே இருக்காது. காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை யாராவது ஒருத்தர் உங்க கூடவே இருந்து உங்களை தூங்க விடாமல் செய்வார்கள். குடும்பத்தோடு இன்று மாலை நேரத்தில் வெளியே செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷத்திற்கு எந்த குறைபாடும் வராது. இருந்தாலும் இந்த நாள் இறுதியில் அசந்து போவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகம் வரும். எந்த வேலையை தொட்டாலும் அதில் பின்னடைவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொந்த பந்தங்கள் இவர்களின் மூலம் பிக்கல் பிடுங்கள் ஏற்படும். மன நிம்மதியை இழக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மன நிம்மதி தேவை என்றால், அடுத்தவர்களை அட்ஜஸ்ட் செய்து போவது தான் ஒரே வழி. பிடிவாத குணத்தை விட்டுக் கொடுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடனை கூட, கைநீட்டி வாங்கியவரே வீடு தேடிக் கொண்டு வந்து கையில் கொடுக்கும் அளவுக்கு நல்லது நடக்கும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையை இன்று தாராளமாக மேற்கொள்ளலாம். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்றாக பசி எடுக்கும். நன்றாக தூக்கம் வரும். ஆரோக்கியமான சாப்பாடு அமைதியான தூக்கமும் இந்த ஞாயிற்றுக்கிழமையை சிறப்பாக மாற்றும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முதலீடு செய்ய ஏற்ற நாள். ரியல் எஸ்டேட் சொந்த தொழில் செய்பவர்கள் தங்களுடைய முதலீட்டை விரிவுபடுத்தலாம். முதலீட்டை விரிவு படுத்துவதற்கு தேவையான கடன் உதவிகளை முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்து தொலைபேசியில் இருந்து சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். மேலதிகாரிகளை பற்றி சக ஊழியர்களிடம் புறம் பேசுதல் வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு இட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சம்பள உயர்வோடு இடமாற்றம் வந்தால் அதை ஏற்றுக் கொள்வது நல்லது. நீண்ட தூர பயணத்தின் போது கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வீண் செலவுகள் அதிகரிக்கும். வந்த சம்பளம் எல்லாம் கரைந்தது போல ஒரு உணர்வு ஏற்படும். சுபகாரிய செலவும் கூட சேர்ந்து விடும். செலவை சமாளிக்க கையில் இருக்கும் சம்பள பணம் எல்லாம் போதாது. பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவது நல்லது. மற்றபடி பிரச்சினைகள் இல்லாத இன்றைய நாள் நிம்மதியாக நகர்ந்து செல்லும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக அமையும். நீண்ட நாட்களாக செய்யாத வேலைகளை இன்று செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். காலையிலேயே சமைத்து முடித்துவிட்டு வீட்டை அழகுப்படுத்தி மன நிம்மதியை பெறுவீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு அல்லது ஹோட்டலுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க வாய்ப்புகள் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த மன தைரியத்தோடு செயல்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அதனால் சில எதிர்ப்புகள் ஏற்படும். சில சிக்கல்கள் ஏற்படும். இருப்பினும் அதையெல்லாம் சமாளிக்க தன்னம்பிகையும் தைரியமும் உங்களுக்கு கை கொடுக்கும். எதுவாக இருந்தாலும் குறுக்கு வழியில் யோசிக்க கூடாது. நேர்வழியில் சென்றால் பிரச்சனை இல்லை அதிகமாக கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் பிசியான நாளாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை தான், இருந்தாலும் தொலைபேசி மூலம் கான் கால் போட்டு, தொல்லை கொடுக்க ஒரு கூட்டம், விடுமுறை நாட்களிலும் மீட்டிங் போட ஒரு கூட்டம், என்று உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். குடும்பத்திற்காக நேரத்தை செலவழிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். என்ன செய்வது வேலை முக்கியம் தானே. ஆகவே இந்த ஞாயிற்றுக்கிழமையை வேலை நாளாக கழித்து என்ஜாய் பண்ணுங்க.

Saturday, 30 September 2023

இன்றைய ராசிபலன் - 30.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 30.09.2023..!!!



மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மாலை நேரம் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும். காலையிலிருந்து கஷ்டப்பட்டு செய்த வேலைகளுக்கு எல்லாம் ரிலாக்ஸாக இன்று மாலை மனைவி குழந்தைகளோடு வெளியில் சென்று சந்தோஷமாக இருப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். விவசாயிகளுடைய புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். அதிக பண வரவிற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிரந்தர பண வரவை தரும் ஐடியாக்கள் இன்று உங்கள் வசப்படும். நன்மைகள் நடக்கக்கூடிய நாள் இது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் அக்கறை காட்டவும். அலட்சியமாக செய்யக்கூடிய வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளின் கண்பார்வை நேரடியாக உங்கள் மீது விழும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். வீண்விரய மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யாருக்கும் உங்கள் கையால் கடன் கொடுக்காதீங்க. இன்று கடன் கொடுத்தால் திரும்பி வராமலேயே போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எப்போதும் போல சுமூகமான சூழ்நிலை நிலவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வழிபாட்டில் மனது ஈடுபடும். குடும்பத்தோடு கோவில்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை அலட்சியமாக வைக்காதீங்க.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று செய்த தவறை நினைத்துப் பார்த்து கஷ்டப்படுவீர்கள். தவறுக்கு மனது வருந்தி சண்டை போட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் உங்களுடைய மனது லேசாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சொந்த தொழிலில் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அட்ஜஸ்ட் செய்து நடக்கவும். முன்கோபம் வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் நேர்மையாக நடப்பதால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் காத்துக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் செல்லும்படி யார் சொன்னாலும் அதை கேட்காதீங்க. போலீஸ் கேஸ் வழக்குகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அனாவசியமாக தலையிடக்கூடாது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். ஆனால் உடல் சோர்வு ஓய்வு எடுக்கும்படி சொல்லும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முடிந்தால் ஒரு நாள் லீவு போட்டு விட்டு நன்றாக தூங்கினாலும் தவறு கிடையாது. ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டாம். ஆர்வம் இல்லாமல் வேலை செய்வதில் சிக்கல்கள் வந்தால் பின்னாடி பிரச்சனை பார்த்துக்கோங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிட்டும். யாராவது வந்து உதவி என்று கேட்டால் அதை நீங்கள் மறுக்காமல் செய்யுங்கள். நீங்கள் செய்யும் உதவி உங்களுடைய பிரச்சனைக்கு உண்டான தீர்வை கொடுக்கும். உங்கள் கையால் இன்று நீங்கள் நாலு பேருக்கு செய்யக்கூடிய நல்லது நாளை உங்களுக்கு புண்ணியத்தை தேடி தரும். யாரையும் உதாசீனப்படுத்தாதீங்க. அடம் பிடித்து நிறைய விஷயத்தில் சாதிக்கக்கூடாது. விட்டுக் கொடுப்பது நன்மையை தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று நிம்மதியாக இருப்பீர்கள். உங்கள் நிம்மதியை கிடைக்க நாலு பேர் வருவாங்க. இல்லாதது பொல்லாததை சொல்லி உங்கள் மனசை கலைக்க பாப்பாங்க. மூன்றாவது மனிதர்கள் சொல்வதைக் கேட்டு ஆடாதீங்க. வாழ்க்கை துணை சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் சொல்லக்கூடிய பேச்சுகளை கேட்டு நடங்கள். மனதை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். நீண்ட நாள் நோய் நொடி பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரை சாப்பிடுவது குறையும். வீட்டில் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நிறைய சுப செலவுகள் ஏற்படும். திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பேராசை படுவீர்கள். எல்லா நல்லதும் இன்னைக்கே நடந்து விட வேண்டும் என்று அவசரப்படுவீர்கள். ஆனால் அது தவறு. கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். நினைத்த நல்லது, நினைத்தபோதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் ருசி இருக்காது. சின்ன சின்ன தோல்விகளும் வாழ்க்கையில் தேவை. அவசரப்பட்டு குறுக்கு வழியில் போகாதீங்க. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அலட்சியமாக கையாளாதீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும். மன நிம்மதி ஏற்படும். இரவு நிம்மதியான தூக்கம் வரும். இதுநாள் வரை இருந்த அலட்சியம் எல்லாம் இனிமேல் அக்கறையாக மாறும். வாழ்க்கை என்றால் என்ன. பணம் இல்லாததால் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை எல்லாம் இந்த மாத இறுதியில் உணர்ந்திருப்பீர்கள். சம்பளம் வந்த உடன் செலவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

Friday, 29 September 2023

இன்றைய ராசிபலன் - 29.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 29.09.2023..!!!



மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய அத்தனை திறமைகளையும் ஆயுதமாக பயன்படுத்துவீர்கள். எதிரிகளை ஜெயிக்க இன்று சாதகமான நாள். போட்டி, சவால் விட்ட விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனநிறைவும் சந்தோஷமும் இன்று நிறைவாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபகாரிய பேச்சுக்களை தொடங்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் வேண்டாம். புதுசாக நிலம் வீடு வாங்கும் பேச்சு வார்த்தைகளை தள்ளிப் போடுங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. பர்ஸை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தம் தொழிலில் எதிர்பாராத மாற்றம் நல்ல வரவை கொடுக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஜங்க் ஃபுட் சாப்பிடக்கூடாது. கூடுமானவரை ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கலைத்துறையினருக்கு வெற்றிக்கான நாள் இது. விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும். முடியாத காரியத்தை கூட முயற்சி செய்து வெற்றி அடைகிறார்கள். உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். தெரியாத விஷயத்தை கற்றுக் கொள்ள நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் திறமை வெளிப்படும். சம்பள உயர்வு பதவி உயர்வு கொடுக்கக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல நிறைய விதைகளை போடக்கூடிய நாள் இந்த நாள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த நபரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. பிரிந்த கணவன் மனைவி சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தோடு கோயில் சென்று இறை வழிபாட்டில் மனதை ஈடுபடுத்துவீர்கள். மாமியார் வழி சொந்தத்தின் மூலம் ஆதாயம் கிட்டும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் தாமதம் இருக்கும். வேலைக்கு செல்வதாக இருந்தால் கொஞ்சம் சீக்கிரமே வீட்டில் இருந்து கிளம்புங்கள். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் கொஞ்சம் சீக்கிரமே உங்களுடைய வேலையை செய்ய வேண்டும். தாமதம் ஆவதன் மூலம் நிறைய வாய்ப்புகள் கைவிட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுதல் கவனம் எடுத்து அக்கறையோடு செயல்பட்டால் இன்றைய நாள் நன்மை உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆக்டிவாக உங்களுடைய வேலையை பார்ப்பீர்கள்‌. உங்களை பார்க்கும் போது அனைவரும் வியப்படைவார்கள். உடல் சோர்வு இல்லாமல் பம்பரம் போல சுழன்று வேலை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டை வெல்வீர்கள். நாளைய வேளையை கூட சில பேர் இன்றே செய்து விடுவீர்கள் என்றால் பாருங்கள். கணவன் மனைவிக்கிடையே மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சமயோஜித புத்தியோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதை நீங்கள் முன்கூட்டியே தீர்மானித்து வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். எதிரிகள் நீங்கள் சவாலாக விளங்குவீர்கள். மேலதிகாரிகள் முதல் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு திறமை வெளிப்படும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். அதற்காக அடம் பிடிக்க செய்யாதீங்க. அது அழிவை கொடுத்து விடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி செய்து கடன் தொகை அப்ரூவல் ஆகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாக்கெட்டில் காசு இருக்காது. செலவுக்கு மேல், செலவு வந்து கழுத்தை நெரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீங்க. கூடுமானவரை செலவை குறைப்பது தான் உத்தமம். மற்றபடி செய்யும் வேலை தொழிலில் சுமுகமான போக்கு நிலவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனதில் பதற்றம் இருக்கும். நம்மால் எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற தடுமாற்றம் ஏற்படும். சில வேலைகளை செய்ய முடியாமல் பின்னடைவு ஏற்படும். கவலைப்படாதீங்க, தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பதை மனதில் ஆழ பதிய வையுங்கள். மற்றபடி கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேற்படும் ‌

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும். ஆனால் அந்த சின்ன சின்ன தோல்விகள் தான் உங்களுடைய பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும். அதை பற்றி கவலைப்படாதீங்க. விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க இன்னும் கொஞ்சம் கூடுதல் முயற்சியை போட வேண்டும். சேல்ஸ்மேன் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டார்கெட்டை அச்சீவ் செய்வதில் ரொம்ப கஷ்டம் இருக்கும். வேலை பளு அதிகமான நாள்தான் இது.

Thursday, 28 September 2023

இன்றைய ராசிபலன் - 28.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 28.09.2023..!!!



மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிட்டால் நிறைய நன்மைகள் நடக்கும். நினைத்ததை வெளியே சொல்லாமல், தேவையானதை அடுத்தவர்களிடம் வாய்விட்டு கேட்காமல் இருந்தால், சில நல்ல வாய்ப்புகளைத் தவிர விட வாய்ப்பு உள்ளது. ஆகவே கூச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு போல்டா இன்னிக்கு எல்லா வேலையும் செய்யுங்கள். வெற்றி நிச்சயம். நீங்கள் வாய்விட்டு கேட்டதை விட இரண்டு மடங்கு நன்மைகள் கூடுதலாக கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு உங்களை திக்கும்கு ஆட செய்யும். வீண் செலவை குறைக்கவும், சேமிப்பை அதிகப்படுத்தவும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுடைய கஷ்டத்தை புரிந்து கொள்வார்கள். வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். மன நிம்மதியை பெறுவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். எல்லா வேலையிலும் ஒரு பதட்டம் இருக்கும். காலையில் எழுந்தவுடன் மனதை அமைதி படுத்த ஐந்து நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது நன்மை தரும். மற்றபடி முக்கியமான முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெரியவர்களின் ஆலோசனை என்ன என்பதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாதவர்கள் நட்பு வேண்டாம். ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை வைக்காதீங்க.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையும். நீண்ட நாள் விற்காத சொத்து விற்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல லாபத்தோடு பேச்சு வார்த்தை முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கலைஞர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செல்வாக்கு கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். திறமை வெளிப்படக்கூடிய நாள். உற்சாகமாக செயல்படக்கூடிய நாள். சுப செலவுகள் ஏற்படும். கையில் இருக்கும் காசு பணம் செலவாக கொஞ்சம் வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது அலட்சியம் வேண்டாம். கவனமாக இருக்கவும். ஹெல்மெட் அணிந்து செல்லவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று அவசரப்பட்டு எந்த விஷயத்தையும் பேசக்கூடாது. நாலு பேர் சேர்ந்து இருக்கும் சபையில் நீங்கள் பேசக் கூடிய விஷயம் தவறாக போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே வார்த்தையில் கவனம் தேவை. எதுவாக இருந்தாலும் நன்றாக புரிந்துவிட்டு பிறகு பதில் பேசவும். புதிய எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்காதீங்க. நேர்மறை கண்ணோட்டம் இன்று நிறைவான மன நிறைவு கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனசு கொஞ்சம் குழப்பமாக இருக்கும். எதிலும் ஒரு தெளிவு பிறக்காது. முக்கியமான முடிகளை நாளை தள்ளிப் போடுங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்லவும். சொந்த தொழிலில் கூடுமானவரை எல்லா கணக்கு வழக்குகளையும் நீங்களே பாருங்க. அடுத்தவர்களை கண்மூடித்தனமாக நம்பாதீங்க.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்க கூட வாய்ப்புகள் உள்ளது. யாராலும் முடியாத வேலையை நீங்கள் செய்து காண்பிப்பீர்கள். மன உறுதியோடு செயல்படுவீர்கள். நிறைய பேரிடமிருந்து பாராட்டும் புகழும் கிடைக்கும். நிறைய பாசிடிவ் எனர்ஜி உங்களுக்குள் உள்வாங்கிக் கொள்வீர்கள். சந்தோஷம் நிறைந்த இந்த தருணத்தில் குடும்பத்தோடு குலதெய்வத்திற்கு வீட்டிலிருந்த படி நன்றி தெரிவியுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. குறிப்பாக இரண்டு பேர் மத்தியில் போய் பஞ்சாயத்து செய்ய நிக்கவே கூடாது. உங்க மூக்கு உடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் பாடகர்கள் இப்படி பட்டவர்களுக்கு என்று நிறைய நல்லது நடக்கும். அலுவலகத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். என்னதான் கஷ்டப்பட்டாலும் நல்ல பெயர் கிடைப்பதில் சிரமம் இருக்கும். சொந்தத்தொழிலில் நல்ல லாபம் வரும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையை சமாளிக்கும் அளவுக்கு வரவு இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். சின்ன சின்ன வேலைகள் கூட பெரிய மலை போல தெரியும். சுறுசுறுப்பாக எந்த வேலையும் நடக்காது. அலுவலக வேலையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். மேல் அதிகாரிகளிடம் சின்ன சின்ன திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழிலில் ஆர்வம் கொஞ்சம் குறையும். எது நடந்தாலும் பரவாயில்லை என்று ஓய்வு எடுக்க தோணும். இன்று எந்த விஷயத்திலும் அதிக ரஸ்க் எடுக்காதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள். வரும் மனைவியை எதிர்த்து பேசாமல் இருப்பது நல்லது. நிதி நெருக்கடி உண்டாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தலைவலி வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். எதையுமே ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக செய்வதும், போகப்போக அந்த செயல்பாட்டில் மந்தம் வருவதையும் தவிர்க்க வேண்டும்.

Wednesday, 27 September 2023

இன்றைய ராசிபலன் - 27.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 27.09.2023..!!!



மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் முன்னேற சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். சொந்த தொழிலில் புதுப்புது ஐடியாக்களை அறிமுகம் செய்யலாம். எல்லாம் உங்களுக்கு சக்ஸஸ் தான்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நிறைய நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தப்பு தப்பாக செய்யக்கூடிய வேலைகள் கூட, இறுதியில் நன்மையில் போய் முடியும். அதற்காக தப்பு பண்ணாதீங்க. உதாரணத்திற்காக சொன்னது அது. இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு இன்றைக்கு நிறைவாக கிடைக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் தொடங்கும். புரட்டாசி முடிந்த உடன் கெட்டி மேல சத்தம் தான்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டுப் பெண்களுக்கு உடல் அசதி ஏற்படும். ஆகவே சுறுசுறுப்பாக இருக்க நிறைய பழச்சாறுகள் கொடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத வேலை பளு வந்து தலை மேல் நிற்கும்‌. அவர்கள் கொடுத்த வேலையை முடிக்கவே இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அந்த வேலையை இன்றைக்கு முடிக்க சொல்லி மேல் அதிகாரிகள் பிரஷர் போடுவாங்க. வேறு வழி கிடையாது முடித்து தான் ஆக வேண்டும். ஓவர் ஓவர் டைம் பண்ணுவீங்க.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவழிப்பீர்கள். சந்தோஷம் நிறைந்த நாள் இது. வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சொந்த தொழிலில் புதிய முதலீடு இன்று செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையை நாளை வைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் கொஞ்சம் சோர்வாக காணப்படும். எந்த வேலையையும் முழுசாக செய்து முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். கூடுமானவரை அடுத்தவர்களுடைய உதவியை நாடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். மற்றபடி எல்லாம் நல்லதாக தான் நடக்கும். குறிப்பாக கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புகள் வரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். வீடு தேடி மகாலட்சுமி வருவாள். வீன் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை இரட்டிப்பாக்குங்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் நிறைய எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் நட்புறவு பலம்பெறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று விழிப்புணர்வு கொஞ்சம் அதிகம் தேவைப்படும். சந்தேகப்படும் படி எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க. உங்களுக்கு மனதுக்கு திருப்தி கிடைக்கவில்லை என்றால் அந்த இடத்தில் இருந்து ஒதுங்கி வந்து விடுங்கள். சந்தேகத்தோடு செய்யக்கூடிய வேலை இறுதியில் பிரச்சனையை தான் கொண்டு போய் விடும். நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் கூட உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நண்பர்களின் கூட்டு முயற்சி இன்று வெற்றியை கொடுக்கும். 10 பேர் ஒன்றாக சேர்ந்து தொழில் தொடங்குவதாக இருந்தால் அதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கலாம். வேலை செய்யும் இடத்தில் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டில் தாய் மாமன் உறவால் நல்லது நடக்கும். உறவினர்களின் வருகை சந்தோஷத்தை கொடுக்கும் சுப செலவு ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு எல்லா வேலையும் பம்பரம் போல செய்வார்கள். சிக்கலான விஷயங்களை கூட சுலபமாக தீர்த்து வைப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சில பேருக்கு பதவி உயர்வு கிடைக்க கூட வாய்ப்புகள் உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வீண்விரய செலவுகள் அதிகரிக்கும். சில பேர் ஆடம்பரப் பொருள் வாங்கி செலவு செய்வீர்கள். சில பேர் மருத்துவமனைக்கு செலவு செய்வீர்கள். எதுவாக இருந்தாலும் பணம் கரைவது உறுதி. வேலையில் எந்த அளவுக்கு ஆர்வத்துடன் கவனத்தோடு இருக்கிறீர்களோ, அதோ அளவு குடும்பம் குழந்தை மனைவி இவர்களிடமும் உங்களுடைய அக்கறையை காட்ட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நட்பு மணமகிழ்ச்சியை கொடுக்கும். சந்தோஷமாக நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். சந்தோஷம் நிறைந்த நாள் இது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கொஞ்சம் திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. அதிகமா லீவு, அதிகமாக பர்மிஷன் போடாதீங்க. சொந்த தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டால் எதிர்காலத்துக்கு நல்லது. இன்று கைநீட்டி யாரிடமும் கடன் வாங்காதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத வந்த பிரச்சனையை சூப்பராக சமாளித்து விடுவீர்கள். வரக்கூடிய நஷ்டத்தில் இருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய தோலை நீங்களே தட்டி சபாஷ் சொல்லிக் கொள்ளுங்கள். இன்று மன தைரியம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். பிரச்சனைகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

Tuesday, 26 September 2023

இன்றைய ராசிபலன் - 26.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 26.09.2023..!!!



மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி, மகிழ்ச்சியை கொடுக்கும். எதையோ சாதித்தது போல நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். பெருசாக விரிவும் படுத்தலாம். லாபம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த ஒரு வேலையையும் தொடங்கக்கூடாது. புதிய நண்பர்களின் நட்பில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய பொறுப்புகள், உங்களுடைய கடமைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்காதீங்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. மனது நிறைய நிம்மதி இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை கழிப்பீர்கள். கொஞ்சம் வேலையிலும் அக்கறை காட்ட வேண்டும். கவனம் இல்லாமல் செய்யும் வேலையில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காததால் கொஞ்சம் மனம் சோர்வடையும். நம்பிக்கையை இழக்காமல் செயல்படுபவர்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுவது நன்மை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாது. இருந்தாலும் சில கடமைகளை முடித்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். அதை மட்டும் முடித்துவிட்டு ஓய்வு எடுப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை தரும். உத்வேகத்தோடு வேலையை செய்து முடிப்பீர்கள். பாராட்டும் பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளை செயல்படுத்தி வெற்றிக்கான உகந்த நாள் இது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிகாரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். வங்கியில் சேமிப்பு உயரும். வாழ்க்கைத் துணைக்கு விலை உயர்ந்த பொருளை வாங்கி பரிசாக கொடுப்பீர்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சிக்கலான பிரச்சனைகளுக்கு கூட சுலபமாக தீர்வு காண்பீர்கள். யாரிடமும் சண்டை போடாமல், பொறுமையாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். கட்டுமான தொழில் செய்பவர்கள், சேல்ஸ்மேன் இவர்களுக்கு இந்த நாள் லாபகரமான நாளாக அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்கும். சொத்து பிரச்சனை கோர்ட் கேஸ் வழக்குகளை இன்று தூசி தட்டலாம். பிரச்சனைகள் உங்களை விட்டு விலகாதது போல தான் தெரியும். ஆனால் இறுதியில் வெற்றி உங்களுக்கே. விடாமுயற்சியோடு வேலைகளை நம்பிக்கையோடு செய்யுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். எல்லா வேலையும் நாளை தள்ளி போடலாம் என்று சிந்திப்பீர்கள். ஆனால் அப்படி இருக்காதீங்க. இன்றைக்கான வேலையை இன்றைக்கு முடித்தால்தான் நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் ஏற்படும். நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், இறுதியில் அந்த நல்லது உங்கள் கையை வீட்டு விலகி செல்லும். கவலைப்படாதீங்க, எல்லாம் நன்மைக்கே. மீண்டும் ஒரு சில நாட்களில் உங்களுடைய கஷ்டங்களுக்கெல்லாம் விமோசனம் கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாடு தினமும் செய்வது நல்லது.

Monday, 25 September 2023

இன்றைய ராசிபலன் - 25.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 25.09.2023..!!!



மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். கேலி கிண்டல் இப்படியே நேரம் ஓடிவிடும். அதனால் அலுவலக வேலை சொந்த தொழிலில் கவனம் இருக்காது. கவனக் குறைவின் காரணமாக சின்ன சின்ன நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். பேருந்தில் செல்லும் போது தேவையற்ற பிரச்சனைகள் வரும். இருசக்கர வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வழக்கத்தைவிட இன்றைய நாளில் கொஞ்சம் சிரமம் இருக்கும். அவசரப்படாமல் கொஞ்சம் முன்கூட்டியே எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்ளவும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது. உறவுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டு.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் அசதி ஏற்படும். ஆரோக்கிய குறைபாடு உண்டாக வாய்ப்பு உள்ளது. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நன்மை தரும். ஆசிரியர் தொழிலில் வேலை செய்பவர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். யாரை நம்பியும் பணம் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. யாருக்கும் முன் நின்று ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. முன்பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். குழந்தை மனைவிகளோடு சந்தோஷமாக நேரத்தை கழிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். யாரை கண்டும் பயப்பட மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் உங்களது பேச்சு அனைவரையும் வியக்க வைக்கும். உங்களுடைய ஆளுமை திரன் வெளிப்படும். சாது மிரண்டால் காடு கொள்வது என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல என்று உங்கள் வாழ்க்கை இருக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்க போகின்றது. வார தொடக்கத்திலேயே நிறைய விஷயங்களை சாதித்து விடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சொந்தத் தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை சிந்திக்கவும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. சிக்கல்களை சமாளிக்கும் அளவுக்கு மன தைரியமும் திறமையும் உங்களுக்கு இருக்கும். ஆனால் உஷாராக இருந்துக்கோங்க எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கு வழியில் போகாதீங்க.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரும் நாளாக அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கலைத்துறையினருக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும். வக்கீல் தொழில் செய்பவர்கள் வாத்தியார் தொழில் செய்பவர்கள் எல்லோருக்கும் இன்று அனுகூலம் நிறைந்த நாள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளை எதிர்க்கக் கூடிய நாளாக இருக்கும். நீங்கள் சின்ன முயற்சி எடுத்தாலும் அதை பார்த்து நிறைய பேர் பொறாமைப்படுவார்கள். நண்பர்கள் கூட பகைவர்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவலைப்படாதீங்க எல்லாம் நல்லதற்கே. சில மனிதர்களின் உண்மையான முகத்தை கண்டு கொள்ள வாய்ப்புகள் என்று கிடைக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு என்று சந்தோஷமான நாளாக அமையும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். பிரிந்த கணவன் மனைவி உறவில் நெருக்கம் ஏற்படும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்ற பாதையில் செல்லும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் எல்லாம் இனி வரக்கூடிய காலகட்டத்தில் சரியாகிவிடும். அதற்கான முயற்சிகளை இன்று மேற்கொள்வீர்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதையோ நினைத்து வீட்டில் இருந்து கிளம்புவீங்க. ஆனால் உங்களுக்கு நடப்பது ஒன்றாக இருக்கும். கெட்ட விஷயம் கிடையாது. எல்லாம் நல்ல விஷயம்தான். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி மூலம் நல்ல செய்தி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

Friday, 22 September 2023

இன்றைய ராசிபலன் - 22.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 22.09.2023..!!!



மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்றுன்று உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த நட்பு, நீண்ட நாள் பிரிந்த உறவுகள், ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக நீண்ட நாள் பிரிவுக்கு பின் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குறுக்கு வழியில் யோசனை தோன்றும். நேர் வழியில் சென்றால் சாதிக்க ரொம்பவும் நேரமாகிறது. குறுக்கு வழியில் சென்றால் சீக்கிரம் பணம் சம்பாதிக்கலாம் என்று அடுத்தவர்கள் சொல்லி உங்களை குழப்பலாம். ஆனால், அப்படி எதுவும் முட்டாள்தனமாக செய்து விடாதீர்கள். நேர்மையாக சம்பாதிக்கும் பணமே நிலைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் வரலாம். சோர்ந்து போய் உட்கார்ந்து விடக்கூடாது. விடாமல் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். கமிஷன் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். கட்டுமான தொழிலில் விற்பனையாளர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூன்றாவது மனிதர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். செய்யக்கூடிய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. அரைகுறை மனதோடு எந்த வேலையும் செய்யாதிங்க. முடியவில்லை என்றால் ஒரு நாளைக்கு லீவு போட்டுட்டு ஓய்வு எடுப்பது நன்மை தரும். சொந்த தொழிலில் நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக பேசாத உறவுகளோடு பேசலாம். பிரிந்திருக்கும் உறவுகளை புரிந்து கொள்ளக்கூடிய நேரம் காலம் வரும். உங்களுடைய மனது பக்குவப்படும். மற்றபடி வேலை செய்யும் இடம், அலுவலகத்தில் எப்போதும் போல சுமூகமான நிலை காணப்படும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக சிரித்த முகத்துடன் வலம் வருவீர்கள். யார் திட்டினாலும் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. போனது போகட்டும் என்று உங்கள் வாழ்க்கை பாதையை தெளிவாக கடந்து செல்வீர்கள். இருந்தாலும் எல்லா விஷயத்திலும் அலட்சியம் இருக்கக் கூடாது. மேலதிகாரிகளை மதித்து தான் ஆக வேண்டும். சொந்த தொழிலில் சிக்கல்கள் வரும்போது விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது ஜாக்கிரதை.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று துயரங்கள் இல்லை. உங்களை சுற்றி இருப்பவர்களே பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். தலைவலி என்றால் தைலம் வாங்கி கொடுக்க நாலு பேர், பசிக்குது என்றால் சாப்பாடு வாங்கி கொடுக்க நாலு பேர் என்று உங்கள் மீது அக்கறை காட்ட சில உறவுகளும் சில நண்பர்களும் இருப்பார்கள். மனது நிம்மதி பெறும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எல்லாம் தலைகீழாக நடக்கப்போகிறது. பிரச்சனை என்று சொல்லி கவலைப்பட்டால், அந்த பிரச்சனையின் மூலம் பாதிப்பு இருக்காது. சின்ன விஷயம் தானே என்று கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் அது பெரிய அளவில் பாதிப்பை கொடுத்து விடும். உடல்நல பிரச்சனையில் இருந்து, பண பிரச்சனை வர எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வழிவழியான பிரச்சனை தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதாவது பங்காளிகள் சண்டை சொத்து பிரச்சனை போன்ற விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கும். இதனால் சொந்த பந்தத்திற்குள் பிரச்சனை வரும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த வேலையிலும் ஈடுபாடு இருக்காது. வேலை செய்யும் இடத்தில் தூக்கம் தூக்கமாக வரும். சொந்தத் தொழிலில் கல்லாப்பெட்டியில் அமர முடியாமல் கஷ்டப்படுவீர்கள். கண் திருஷ்டி தான். வீட்டில் பெரியவர்களை திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கள். சரியாகிவிடும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நல்ல ஐடியாக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல நிறைய பேர் உதவுவார்கள். சந்தோஷம் நிறைந்த இந்த நன்னாளில் குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனம் ஈடுபடும். நேர்வழியோடு செல்லுங்கள். குறுக்கு வழியில் பயணம் செய்வது எப்போதும் ஆபத்துதான்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க அடுத்தவர்கள் உதவியாக இருப்பார்கள். ஆனால் அதையே சாக்காக வைத்துக் கொண்டு சுமையை அடுத்தவர்கள் தலை மேல் சுமத்தக்கூடாது. உங்களுடைய பொறுப்பு என்ன என்று உனர்ந்த செயல்பட வேண்டும். இல்லை என்றால் வீண்பேச்சுக்கும், பழிப்பேச்சிக்கும் ஆளாகிர்கள். உங்கள் கடமைகளை தவறாமல் செய்ய அயராது உழைக்க வேண்டும்.

Wednesday, 20 September 2023

இன்றைய ராசிபலன் - 20.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 20.09.2023..!!!



மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக தான் அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மனதில் குழப்பம் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கிறது. இதை செய்தால் சரி வருமா, என்ற சந்தேகம் இருந்தாலும் அதை நீங்கள் நிராகரித்து விடுங்கள். முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே முழு வெற்றியும் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் இருக்கும். எந்த ஒரு வேலையையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். கமிஷன் பிசினஸ் செய்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புகள் உள்ளது. தாய் மாமன் உறவால் நல்லது நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பாதகமான சூழ்நிலை இருக்கும். மனதளவில் பயம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளுடன் பேசும்போது பயத்தை வெளி காட்ட வேண்டாம். ஒரு கான்ஃபிடன்டோடு பேசும்போது தான் உங்களுக்கான மரியாதை கிடைக்கும். மன பயத்தையோ கோழைத்தனத்தையோ வெளியே காட்டாதீங்க.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கூடுதல் பொறுப்பு தேவை. எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை அனாவசியமாக கையாள வேண்டாம். ஏதாவது ஒரு பொருளை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதி நிறைந்த நாளாக இருக்கும். கூடுமானவரை ஓய்வு எடுக்க பாருங்கள். மற்றபடி செய்யும் வேலை, செய்யும் தொழில் எல்லாவற்றிலும் நன்மையே நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. செலவுகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படும் உங்களுக்கு, எந்த ரூபத்திலாவது மகாலட்சுமி வரவை கொடுக்கப் போகின்றாள். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். சொந்த தொழிலில் படிப்படியாக முன்னேற்றமும் ஏற்படும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு வரக்கூடிய வாய்ப்புகளை தட்டி கழித்து விடக்கூடாது. நீங்கள் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அந்த ஒரு விஷயம் உங்களுக்கு பல நன்மையை கொடுக்கும். ஆகவே, பொறுமையாக எல்லா விஷயத்தையும் கையாளுங்கள். யாரையும் உதாசீனப்படுத்தாதீங்க. சின்ன துரும்பாக இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் என்று மனநிம்மதியோடு வேலைகளை செய்யப் போகிறீர்கள். எந்த ஆர்ப்பாட்டமும் உங்களிடத்தில் இருக்காது. ஆனால் காரியத்தில் கண்ணாக நடந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். சில பேருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய விடா முயற்சி வெற்றியை கொடுக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று விரும்பியதை அடையக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் ஆசைப்பட்டதை சுலபமாக அடைந்து விடுவீர்கள். அதற்காக எல்லா விஷயத்திற்கும் அடம் பிடிக்கக் கூடாது. கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடப்பதும் நல்லது. குறிப்பாக கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். சின்ன சின்ன முயற்சிகளில் தடை ஏற்படும். மேல் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். சிக்கல்களை சரி செய்ய அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். பொறுமை அவசியம் தேவை.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாம் நல்லதாக நடக்கும். நீங்க கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தால். சொந்த தொழிலில் புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களை முழுமையாக நம்பாதீங்க. உஷாரா இருந்துக்கோங்க. நண்பர்கள் கூட உங்களை மேலதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருக்கணும் அவ்வளவுதான்.

Tuesday, 19 September 2023

இன்றைய ராசிபலன் - 19.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 19.09.2023..!!!

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். காலையில் எப்படி போனீங்களோ, அதே மாதிரி மாலையில் வீட்டுக்கு பிரெஷ் ஆக திரும்பி வருவீர்கள். சோர்வு கொஞ்சம் கூட இருக்காது. உங்களை பார்ப்பவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு முகத்தில் மலர்ச்சி இருக்கும். இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றியை தெரிவிப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அக்கறை தேவைப்படும். எந்த ஒரு விஷயத்திலும் முன்பின் யோசிக்காமல் முடிவு செய்யக்கூடாது. அது மட்டுமில்லாமல் அதிக பணத்தை செலவு செய்யக்கூடிய பழக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று செய்யக்கூடிய வீண் செலவை உங்களால் திரும்பவும் ஈடுகட்ட முடியாத அளவுக்கு ரொம்பவும் அதிகமாக இருக்கும். ஆகவே பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருங்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இன்று நேரத்தை வீணாக செலவு செய்வீர்கள். காலம் பொன் போன்றது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இருப்பினும் உங்களுடைய தவறை நீங்கள் தான் உணர வேண்டும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமமான நாளாக தான் இருக்கும். பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மன அழுத்தம் ஏற்படும். உடல் சோர்வு ஏற்படும். இரவின் நிம்மதியான தூக்கம் இருக்காது. மனதை அமைதி படுத்த கொஞ்சம் நேரம் பிடித்த தெய்வத்தின் நாமத்தை சொல்லி தியானத்தில் அமரவும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். இருந்தாலும் வேலையின் முக்கியத்துவத்தை கருதி சிரமப்பட்டாவது உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். உங்களை நினைத்து நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய சில சம்பவங்கள் இன்று நடக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுடைய அறிவுத்திறன் வெளிப்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சந்தோஷமாக சேர்ந்து நேரத்தை செலவழிப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பல வகையில் இருந்து வருமானம் வரும். வாரா கடன் வசூலாகும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழில் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலாளர்களுக்கு தேவையான ஊதியத்தை உயர்த்தி கொடுத்து சந்தோஷம் அடைவீர்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுடைய நம்பிக்கைக்கு எந்த ஒரு மோசடியும் இல்லாமல் நடந்து கொள்வீர்கள். உங்களை நம்பி ஒப்படைக்க கூடிய பணிகளை உயிரைக் கொடுத்தாவது முடிப்பீர்கள். அந்த அளவுக்கு சின்சியாரிட்டி உங்களிடம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் சொந்தத் தொழிலிலும் நல்ல பெயரை சம்பாதித்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களே இன்று அவசியமான வேலைகளை மட்டும் பார்க்கவும். அனாவசியமான வேலைக்கு போகாதீங்க. அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடாதீங்க. இரண்டு பேருக்குள் சண்டை என்றால் அந்த இடத்தில் நீங்கள் நிற்பதே தவறு. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அழகான நாளாக இருக்கப் போகின்றது. நீங்களும் பார்ப்பதற்கு அழகாக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் வேலை, நீங்கள் எடுக்கும் முயற்சியிலும் அழகான வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிகுள்ளிருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அன்னியோன்யம் அதிகரிக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். பர்ஸ் ஹேண்ட்பேக் இவைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பிக்பாக்கெட் அடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை இன்று பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணம் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் சிரிக்க சிரிக்க இந்த நாளை கழிக்க போகிறீர்கள். எந்த பிரச்சனையும் இருக்காது. நகைச்சுவை உணர்வோடு இந்த நாளில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மன அழுத்தம் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்கள் கூட சரியாகும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கலான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள். சின்ன சின்ன சண்டை குடும்பத்தில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வார்த்தைகளில் கவனம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உறவுகள் ரொம்பவும் மென்மையானவை. அவை உடைந்து விட்டால் ஒட்ட வைப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Monday, 18 September 2023

இன்றைய ராசிபலன் - 18.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 18.09.2023..!!!



மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகளுக்கு உண்டான வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் கையால் பிள்ளையாருக்கு இன்று அருகம்புல் மாலை சாத்தினால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சாதனைகள் படைக்கக்கூடிய நாளாக இந்நாள் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சொந்த தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். இன்று உங்கள் கையால் பிள்ளையாருக்கு செம்பருத்தி பூ வாங்கி கொடுப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.



மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் என்று மன தைரியத்தோடு செயல்படுவீர்கள். யாரை கண்டும் பயப்பட மாட்டீர்கள். முகத்திற்கு நேராக பதில் சொல்லிவிட்டு, உங்கள் வேலையை பார்ப்பீர்கள். இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இன்று உங்கள் கையால் பிள்ளையாருக்கு 11 மோதகம் செய்து நிவேதியம் வைத்து ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் நன்மை நடக்கும்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை சுமையும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். இன்ற பிள்ளையாருக்கு உங்கள் கையால் எருக்கன் பூ மாலை வாங்கி போடுவது சிறப்பு.


சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குறிப்பாக சொந்த தொழிலில் வரவு செலவு கணக்கை நீங்களே பாக்கனும். மற்றபடி பெரிய பிரச்சனை இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். இன்று மாலை குடும்பத்தோடு பிள்ளையார் கோவிலுக்கு செல்லுங்கள் 2 மண் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான நாளாக இருக்கும். உங்களுக்கு எது நன்மை தரும். எது தீமையை தரும் என்று அறிந்து செயல்படுவீர்கள். திறமை வெளிபடக்கூடிய நாள் இது. இந்த விடுமுறை நாளை உறவினர்களோடு சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடப் போகிறீர்கள். இன்று விநாயகருக்கு உங்கள் கையால் வாசம் நிறைந்த பூக்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்யுங்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். எதிரிகளால் சின்ன சின்ன பிரச்சனை இருக்கும். கடன் தொல்லை இருக்கும். வாங்கிய கடனை சில பேர் திருப்பி தர முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்ய இன்று பிள்ளையாருக்கு உங்கள் கையால் அருகம்புல் மாலை கட்டி போடுங்கள். சீக்கிரம் பணக்கஷ்டம் தீரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து வைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகள் குவியும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் நன்மையை கொடுக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். இந்த நன்மை தரக்கூடிய நாளில் பிள்ளையார் கோவிலுக்கு சென்று ஐந்து தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல் வையுங்கள். பசியோடு இருக்கும் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்வது நல்லது. நன்மை நடக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக தான் இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கட்டுமான தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும். இன்று விநாயகருக்கு சுண்டல் கொழுக்கட்டை செய்து வைத்து வழிபாடு செய்யுங்கள் நன்மை பெறலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆனந்தமாக நாளை கழிப்பீர்கள். உங்களுடைய பெண் குழந்தைகளின் மூலம் சந்தோஷம் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஜாமின் கையெழுத்து போடாதீங்க. இன்று பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைப்பது நன்மையை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் இன்று உருப்படியாக சில காரியங்களை செய்வீர்கள்‌. நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று கிடப்பில் போட்டு வைத்த வேலைகளை என்று எடுக்கலாம். எதிர்காலத்தை பற்றி சிந்தித்து சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். இன்று பிள்ளையாருக்கு உங்கள் கையால் மாதுளம் பழம் நிவேதனமாக வாங்கி வைத்து பூஜை செய்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

Sunday, 17 September 2023

இன்றைய ராசிபலன் - 17.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 17.09.2023..!!!


மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை இருக்கக் கூடாது. பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். நேர்வழியில் நடக்க வேண்டும். சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற நோக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிரான எந்த காரியத்திலும் ஈடுபடக் கூடாது. அதே சமயம் சூதாட்டமும் வேண்டாம். நேர்மையாக இருந்தால் இன்று வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

ரிஷபம்:
ரிஷப ராசிகாரர்கள் இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். நேரத்திற்கு சாப்பிட்டு விட வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். உடலுக்கு சூட்டை தரும் அசைவ சாப்பாட்டை தொடக்கூட வேண்டாம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் நிறைய நேரம் ஓய்வு எடுப்பீர்கள். நல்ல சாப்பாடு இருக்கும். குழந்தைகளோடு மனநிறைவோடு விளையாடி நேரத்தை கழிப்பீர்கள். சொந்தத் தொழிலில் எந்த சிக்கலும் இருக்காது. எப்போதும் போல லாபம் கிடைக்கும்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட இன்னைக்கு ஓய்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.‌ சில பேருக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து தொலைபேசியின் மூலமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். ஆனால் அது எல்லாம் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. சொந்த தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபடலாம்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்று புன்னகையோடு வலம் வருவீர்கள். எல்லா விஷயத்திலும் நல்லது நடக்கும். வீட்டில் சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையில் பெண்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். பணப்பிரச்சினை தீரும். வாரா கடன் வசூல் ஆகும். சந்தோஷத்தில் மனது நிம்மதியாக இருக்கும். வீட்டில் மனைவிக்கு தேவையான பொருளை வாங்கி கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை அல்லவா. குடும்பத்தோடு சென்று வெளியே சாப்பிட்டு நேரத்தை குதூகலமாக கழிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று விடுமுறை நாளாக இருந்தாலும் வேலைகள் கொஞ்சம் பரபரப்பாக தான் இருக்கும். எந்த வேலையை முதலில் செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். அந்த அளவுக்கு தலை மேல் பாரம் இருக்கும். கவலைப்படாதீங்க உங்களுடைய முயற்சிகளில் வெற்றி இருக்கும். நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு உண்டான பலனும் கிடைக்கும். சிரமப்படாமல் அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தியை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்றால் இன்றைக்கான பிரச்சினைகளை முடிப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அக்கம் பக்கம் வீட்டாரிடம் அனுசரித்து செல்லுங்கள். முன்பின் தெரியாத நபரிடம் பழக வேண்டாம். எதிர்பாலின நட்பு கூடாது. இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக தான் இருக்கும். இன்று மாலை நேரத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பொழுது சாய்வதற்குள் வீடு திரும்புவது நன்மையைத் தரும். உங்களுடைய பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் எப்படி படிக்கிறாங்க. அவங்களுடைய பள்ளிக்கூட பையில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு முயற்சிகள் வெற்றி பெறும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசை நிறைவேறும். பணம் சம்பந்தப்பட்ட சிக்கலில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். கெட்ட நண்பர்கள் உங்களை விட்டு தானாகவே பிரிந்து செல்வார்கள். ஆகவே எதை நினைத்தும் கவலைப்படாதீங்க. குலதெய்வ வழிபாடு நீண்ட நாள் பிரச்சனையை சரி செய்து விடும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்று மனது போன போக்கில் வேலையை செய்யப் போகிறீர்கள். எதையுமே பிளான் பண்ண மாட்டீங்க. ஆனால் மனசு சொல்லும் விஷயம் உங்களுக்கு சரியாக அமையும். அந்த ஆண்டவனின் ஆசிர்வாதம் இன்று உங்களுக்கு முழுமையாக இருக்கிறது. நேர்வழியில் செல்லுங்கள். நல்லதை மட்டுமே நினையுங்கள். முன்கோபத்தை குறைத்து நிதானமாக சிந்தித்தால் வெற்றி நிச்சயம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோசம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நேற்று செய்த வேலை, போன மாதம் செய்த வேலைக்கு எல்லாம் இன்று வெற்றி கிடைக்கப் போகின்றது. மன மகிழ்ச்சியுடன் மனைவியுடன் பிள்ளையுடன் இந்த நாளை கழிக்க போகிறீர்கள். உடன்பிறந்தவர்களோடு சேர்ந்து நிறைய விஷயங்களை பேசக்கூடிய நேரம் காலம் அமையும். சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த சண்டே, சூப்பர் சண்டே.

Saturday, 16 September 2023

இன்றைய ராசிபலன் - 16.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 16.09.2023..!!!


மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்று நல்லது கெட்டதை உணர்ந்து, எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வோடு செயல்படுவார்கள். உங்களுடைய அணுகுமுறை அனைவரையும் ஈர்க்கும் அளவில் இருக்கும். இந்த பக்குவம் உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். உங்களுடைய ஒழுக்க குணமும் அடுத்தவர்களை புரிந்து கொள்ளக்கூடிய இந்த மனோபாவம், பல நல்லதை இன்றைக்கு உங்களுக்கு காட்டிக் கொடுக்கப் போகின்றது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முக்கிய முடிவை எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளிப் போடுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் மனது ஈடுபடாது. எதையோ இழந்தது போல யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். காலையில் எழுந்தவுடன் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றி தரும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்வீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நல்ல நல்ல ஐடியாக்களும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக அமையும். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். பணம் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். செலவை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளுடன் சண்டை போடவே நேரம் சரியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நாலு பேர், வீட்டுக்கு பக்கத்தில் நாலு பேர், என்று உங்களை பிரச்சனைக்காக கூப்பிடவே காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களிடம் முட்டி மோதி ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டம். யார் என்ன பேசினாலும் காதில் வாங்காதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை இல்லை.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம் நிறைந்த நாளாக தான் இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பிள்ளைகள் டீச்சரிடம் திட்டு வாங்குவீங்க. வேலை செய்பவர்கள் உங்களுக்கு மேலே வேலை செய்பவர்களிடம் திட்டு வாங்குவீங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் பொறுமையை காக்க வேண்டும். உறவினர்களிடம் கோபப்பட்டு பேசக்கூடாது.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு என்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்ட வேண்டாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கப் போகிறது. எல்லா விஷயத்திலும் வளர்ச்சி சீராக இருக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் வீட்டிற்கு வருவாங்க. சொந்த பந்தங்கள் வருவாங்க. நண்பர்கள் வருவாங்க, கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும். மற்றபடி சந்தோஷத்திற்கு எந்த குறைவும் இருக்காது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் சந்திக்காத நண்பரை சந்தித்து பேசி நேரத்தை கழிப்பீர்கள். மனது ஒரு கிலோ பாரத்தை இறக்கி வைத்தது போல இருக்கும். நிம்மதியான இந்த நாளை கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தது காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதுசாக ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. வீட்டை பராமரிப்பது ஓடாத சைக்கிள் பைக் இவைகளை சரி செய்வது போன்ற விஷயங்களில் ஆர்வம் வரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். சொந்த தொழிலில் புதுசா ஐடியாவை கண்டுபிடித்து புரட்சி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. நல்ல லாபம் நிறைந்த நாள் இது. வாரா கடன் வசூல் ஆகும். பணத்திற்கு எந்த கஷ்டமும் இருக்காது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வு தேவை. உடல் அசதி இருக்கும். மன அசதி இருக்கும். சோர்வாக காணப்படுவீர்கள். கொஞ்சம் ராத்திரியில் சீக்கிரம் தூங்குங்கள். காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதுமே காதில் ஹெட்போன் போடும் பழக்கம் இருந்தால் அதை இன்றோடு விட்டிடுங்க. குறிப்பா வண்டி ஓட்டும் போது காதுல பாட்டு கேக்காதீங்க. வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

Friday, 15 September 2023

இன்றைய ராசிபலன் - 15.09.2023..!!!

இன்றைய ராசிபலன் - 15.09.2023..!!!


மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்க போகிறது. எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை சுலபமாக முடித்துவிட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வாரா கடன் வசூல் ஆகும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய தொழில் தொடங்கலாம். புதுசாக முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மனநிறைவான நாளாக அமையும். வேலை செய்யும் பெண்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சொந்த தொழிலில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். யாரையும் நம்ப வேண்டாம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. நிறைவு ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். பழசை நினைத்து பார்த்து சந்தோஷம் அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தாய் மாமன் உறவு வலுப்பெறும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லதே நடக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்து மனநிறைவை அடைவீர்கள். பிறவி பலனை அடைந்தது போல ஒரு உணர்வு ஏற்படும். ஆன்மீக சிந்தனை நிறைந்த இந்த நாளில் கடவுளின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியான நிலைமையில் இருக்கும். எதை நினைத்தும் அலைபாயாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று அமைதியாக எல்லா காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நலம் தரும் நாளாக அமையும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். மனதில் சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் எந்த பிரச்சனையும் வராது. எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. அடுத்தவர்கள் உங்களை பாராட்டும் அளவுக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து முடிப்பீர்கள். தற்பெருமை கூடாது. அடம்பிடித்து சில விஷயங்களை சாதித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சக ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. வாழ்க்கை துணை உங்களது மனதை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். வருமானம் அதிகரிக்கும். வாரா கடன் வசூல் ஆகும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கப் போகின்றது. கவனத்தோடு உங்களுடைய வேலையை செய்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. மூன்றாவது மனிதர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும் வேலைக்கு சென்றாலும் அரட்டை அடிப்பீர்கள். வீட்டில் இருந்தாலும் அரட்டை அடிப்பீர்கள். நண்பர்கள் கூடி நேரத்தை வீணாக செலவு செய்யப் போகிறீர்கள். யாரிடமும் திட்டு வாங்காமல் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட முன்கோபம் வரும். உறவுகளை உதாசீனப்படுத்தாதீங்க. பொறுமையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க அதிகாரிகளை தர குறைவாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். உடன் வேலை செய்பவர்களுடன் சண்டை போட வேண்டாம். சொந்த தொழிலை விரிவு படுத்தலாம். சொந்த தொழிலுக்கு தேவையான உதவிகளை நண்பர்களிடம் கேட்கலாம். வாகனங்களை செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.