Showing posts with label Sports News. Show all posts
Showing posts with label Sports News. Show all posts

Tuesday, January 17, 2023

புதிய விடியல் உதைபந்தாட்டம் சாம்பியனானது நாவாந்துறை சென். மேரிஸ் அணி..!!! (Video)

புதிய விடியல் உதைபந்தாட்டம் சாம்பியனானது நாவாந்துறை சென். மேரிஸ் அணி..!!! (Video)

சென். மேரிஸ் அணி

இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்திய புதிய விடியல் உதைபந்தாட்டப் போட்டியில் சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசையும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி கைப்பற்றியது.

டான் தொலைக்காட்சி குழுமம் நிப்பொன் அனுசரணையில் 8ஆவது ஆண்டாக புதிய விடியல் உதைபந்தாட்ட தொடரை நடத்தியது. யாழ்ப்பாணம் லீக் இந்தத் தொடரை ஒருங்கிணைத்து நடத்தியது.

யாழ். துரையப்பா பொது விளையாட்டரங்கில் நடந்த இந்தப் போட்டியின் இறுதியாட்டத்துக்கு நாவாந்துறை சென். மேரிஸ், சென். நீக்கிலஸ் அணிகள் தகுதிபெற்றன. நேற்று மாலை 3.30 மணிக்கு மைதானம் நிறைந்த ரசிகர்களுடன் போட்டி ஆரம்பமானது.

போட்டியின் ஆரம்பத்தில் அசத்தலாக ஆடிய சென். நீக்கிலஸ் அணி கோல் ஒன்றை அடித்து முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்களே இருக்கையில் சென். மேரிஸ் அணி அதிரடியாக கோல் ஒன்றை போட்டது. இதனால், முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தபோது 1 - 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன.

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே சென். மேரிஸ் அணி தனது இரண்டாவது கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து அந் அணி தற்காப்பில் கவனம் செலுத்தியது.

ஆனாலும், சற்றும் சளைக்காத சென். நீக்கிலஸ் அணி அரைமணி நேரத்தில் பதில் கோலை அடித்தது. இதைத் தொடர்ந்து போட்டி நிறைவடையும் வரை இரு வீரர்களும் எவ்வளவோ முயன்றும் கோல் எதையும் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. முதல் சமநிலை தவிர்ப்பு உதையில் 4 - 4 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன. இரண்டாவது வாய்ப்பில் 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது நாவந்துறை சென். மேரிஸ் அணி.

வெற்றி பெற்ற சென். மேரிஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடத்தைப் பெற்ற சென். நீக்கிலஸ் அணிக்கு 4 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.

தொடரில் சிறந்த கோல் காப்பாளராக சென். மேரிஸ் அணியின் சிந்துஜன், சிறந்த வீரராக சென். நீக்கிலஸ் அணியின் ஜெரோம், சிறந்த கோல் அடிப்பாளராக சென். நீக்கிலஸ் அணியின் டெனோசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், விருந்தினர்களாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே. பி. எம். குணரத்ன, யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் டி. பி. எஸ். என். போதொட்ட, நிப்பொன் பெயின்ற் பிராந்திய விற்பனை முகாமையாளர் மகேந்திரன் பெருமாள், டான் தொலைக்காட்சி குழுமத் தலைவர் எஸ். எஸ். குகநாதன், டான் தொலைக்காட்சி குழுமத்தின் பணிப்பாளர் தே. ஜொனி ஆகியோர் பங்கேற்றனர்.

Wednesday, December 21, 2022

யாழ். மைந்தன் வியாஸ்காந்த் ஆட்டநாயகன் : 2 தடவைகள் சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் 3 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில்..!!!

யாழ். மைந்தன் வியாஸ்காந்த் ஆட்டநாயகன் : 2 தடவைகள் சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் 3 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில்..!!!


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் 3 ஆவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஜெவ்னா கிங்ஸ் முதலாவது அணியாக தகுதிபெற்றது.

முதல் இரண்டு எல் பி எல் அத்தியாயங்களில் சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (21) நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் கண்டி பெல்கன்ஸை எதிர்த்தாடிய ஜெவ்னா கிங்ஸ், டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

யாழ். மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த், தெற்கு வீரர் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி கண்டி பெல்கன்ஸுக்கு நெருக்கடியைக் கொடுத்து தமது அணிக்கு இலகுவான வெற்றி கிடைக்க வழிவகுத்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கண்டி பெல்கன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க (35), கமிந்து மெண்டிஸ் (26), நஜிபுல்லா ஸத்ரான் (22), சாமிக்க கருணாரட்ன (14ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

ஜெவ்னா கிங்ஸ் பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றி தனது விக்கெட் எண்ணிக்கையை 13ஆக உயர்த்திக்கொண்டார்.

மஹீஷ் தீக்ஷனவும் திறமையாகப் பந்துவீசி 4 ஒவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

144 ஓட்டங்களை வெற்றி இலகக்காகக் கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ், ஆட்டம் மழையினால் தடைப்படலாம் என்பதை அறிந்து அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தது.

ஜெவ்னா கிங்ஸ் 5.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 63 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது மழைபெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருக்க வெண்டிய ஜெவ்னா கிங்ஸ் 16 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது இரண்டாவது தடவையாகவும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டது.

அப்போது ஜெவ்னா கிங்ஸ் 11 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால், டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி ஜெவ்னா கிங்ஸுக்கு 11 ஓவர்களில் 75 ஒட்டங்களே வெற்றி இலக்காக தேவைப்பட்டிருந்தது. இதற்கு அமைய ஜெவ்னா கிங்ஸ் 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 21 ஓட்டங்களையும் துனித்வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர். வைட்களாக 19 உதிரிகள் கிடைத்தன.

வியாஸ்காந்த் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.Thursday, December 8, 2022

Colombo Stars அணி 9 ஓட்டங்களால் வெற்றி..!!!

Colombo Stars அணி 9 ஓட்டங்களால் வெற்றி..!!!
இன்று இடம்பெற்ற LPL போட்டித் தொடரின் 5 ஆவது போட்டியில் Colombo Stars அணி Dambulla Aura அணியை 9 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற Colombo Stars முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.

இதற்கமைய, Colombo Stars அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றனர்.

Colombo Stars அணி சார்பில் Niroshan Dickwella 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

Dambulla Aura அணி சார்பில் பந்துவீச்சில் Lahiru Kumara, 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Dambulla Aura அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்கள மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் Tom Abell 33 ஓட்டங்களையும், அணித்தலைவர் Dasun Shanaka ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் Suranga Lakmal, Dominic Drakes மற்றும் Karim Janat ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Thursday, November 24, 2022

தேசிய உதைபந்தாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 17 வயது பெண்கள் அணி சம்பியன்..!!!

தேசிய உதைபந்தாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 17 வயது பெண்கள் அணி சம்பியன்..!!!


அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியது.

இன்று (நவம்பர் 24) கொழும்பு களணி பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்ற 17 வயது பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலயம் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி அணிகள் மோதின.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் உதைத்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.


Wednesday, October 19, 2022

உலகக்கோப்பை டி20 பயிற்சி ஆட்டம்: மே.இ.தீவுகள் அபார வெற்றி..!!!

உலகக்கோப்பை டி20 பயிற்சி ஆட்டம்: மே.இ.தீவுகள் அபார வெற்றி..!!!
உலக கோப்பை டி20 போட்டியில் இன்று ஜிம்பாவே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தன

இதனையடுத்து ஜிம்பாவே அணியை 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, October 18, 2022

T20 யில் முதல் சாதனை படைத்த தமிழன்..!!!

T20 யில் முதல் சாதனை படைத்த தமிழன்..!!!
ஐக்கிய அரபு ராச்சியத்தின் கிரிக்கட் அணிக்காக விளையாடும் சென்னையை சேர்ந்த தமிழ் இளைஞரான கார்த்திக் மெய்யப்பன் இன்று சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

அடுத்தடுத்து விக்கெட்

22 அகவையைக் கொண்ட கார்த்திக் உலக கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் இன்று இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறும் போட்டியில் மூன்று விக்கட்டுக்களை அடுத்தடுத்து கைப்பற்றி ஹெட்ரிக் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இது 2022, 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது ஹெட்ரிக் சாதனையாகும். கார்த்திக் 2019 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கட் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, October 16, 2022

இலங்கை அணியை வீழ்த்தி நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

இலங்கை அணியை வீழ்த்தி நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.


 ருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 55 ஓட்டங்களால் நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஜான் ஃப்ரைலிங்க் அதிகபட்சமாக 44 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்..

இந்நிலையில் 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக அதிகபட்சமாக 29 ஒட்டங்களையும், பானுக்க ராஜபக்ஷ 20 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.பந்து வீச்சில் ஜான் ஃப்ரைலின்க், டேவிட் வைஸ், பென் ஷிகோங்கோ மற்றும் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Monday, September 26, 2022

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு புதிய சாதனைகள்

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு புதிய சாதனைகள்


 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் (22.09.2022) இடம்பெற்ற போட்டியிலேயே இந்த புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.இதற்கமைய இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை இலக்காக கொண்டு, அதனை எவ்வித விக்கெட் இழப்புக்களுமின்றி முறியடித்த முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளதுகராச்சி மைதானத்தில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களுகளை பெற்றுக்கொண்டது.இதனை தொடர்ந்து, 200 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 பந்துகளுக்கு 203 ஓட்டங்களை பெற்று வெற்றி ஈட்டியது.

இந்நிலையில் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலையை இந்த அணிகள் பெற்றுள்ளன.

இரண்டாவது சாதனை

இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் ஹஷாம் 110 ஓட்டங்களையும், முகமது ரிஸ்வான் 88 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக இவர்கள் இருவரும் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையிலான போட்டியில், இணைப்பாட்டம் ஊடாக 197 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.இன்றைய போட்டியில் பாபர் ஹஷாம் மற்றும் முகமது ரிஸ்வான் தங்களது சாதனையை அவர்களே முறியடித்து இணைப்பாட்டம் ஊடாக 203 ஓட்டங்களை பெற்று இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இணைப்பாட்டம் ஊடாக அதிக ஓட்டங்களை பெற்றவர்களாகவும் சாதனை படைத்துள்ளனர். 

மீண்டும் வெற்றி வாகை சூடிய இந்திய அணி!

மீண்டும் வெற்றி வாகை சூடிய இந்திய அணி!


 இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியானது இந்தியாவின் ஹைதராபாத் மைதானத்தில்  இடம்பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீன், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். பிஞ்ச் 7 ஓட்டங்களில் வெளியேற அடுத்த வந்த ஸ்டீவன் சுமித் 9, மேக்ஸ்வெல் 6 ஆகியோரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 52 ஓட்டங்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.கடைசி கட்டத்தில் களமிறங்கிய டேனியல் சாம்ஸ், டிம் டேவிட் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். எனினும் டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

இதன்படி,நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி குவித்தது.இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் (1) மற்றும் ரோகித் சர்மா (17) ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடியது.ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை திணறடித்த சூர்யகுமார் 36 பந்துகளில் 69 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

பின்னர், மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் கடைசி 5 பந்துகளில் இந்திய அணி வெற்றிபெற 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.இறுதியாக ஒரு பந்து மீதமிருக்க ஹர்த்திக் பாண்டியா நான்கு ஓட்டங்களை பெற்று இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.

பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வென்றது. 

Sunday, September 18, 2022

வனிந்து ஹசரங்க குறித்து கவனமாக இருங்கள்! முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள தகவல்..!!!

வனிந்து ஹசரங்க குறித்து கவனமாக இருங்கள்! முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள தகவல்..!!!
அவுஸ்திரேலிய ஆடுகளங்களில், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர், வனிந்து ஹசரங்கவுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹசரங்க ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியை ஆசிய கிண்ண பட்டத்தை வென்றெடுக்க உதவியுள்ளார்.

எனவே டி20 உலகக்கிண்ணத்தின் போது, கவனிக்க வேண்டிய ஒருவராக அவர் இருப்பார் என்றும் முரளிதரன் கூறியுள்ளார்.அவர் ஒரு சிறந்த டி 20 பந்துவீச்சாளர். கடந்த 2-3 ஆண்டுகளாக, அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

"அவுஸ்திரேலியாவில், கண்டிப்பாக லெக் ஸ்பின்னருக்கு (இடது முறை சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ) அதிக வாய்ப்புகள் இருக்கும். எனவே அவருக்கு எதிராக துடுப்பாடுவது கடினமான இருக்கும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேசிய சாதனை படைத்துள்ள யாழ்ப்பாணத்தின் வீரர்..!!!

தேசிய சாதனை படைத்துள்ள யாழ்ப்பாணத்தின் வீரர்..!!!அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு நடாத்தப்படுகிற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின், கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.15M உயரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு 5.11 மீட்டர் உயரத்தைத் தாவிய இலங்கை விமானப்படை வீரர் இஷார சந்தருவன் நிலைநாட்டிய ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் தேசிய சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்துள்ளார்.

கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் அண்மைக்காலமாக தேசிய ரீதியில் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான அருந்தவராசா புவிதரன், எதிர்காலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து சர்வதேச போட்டிகளில் சாதிக்க வாழ்த்துகிறேன்.Friday, September 16, 2022

இலங்கை கிரிக்கெட் அணி நிச்சயம் உலக கிண்ணத்தை வெல்லும் - மஹேல உறுதி..!!!

இலங்கை கிரிக்கெட் அணி நிச்சயம் உலக கிண்ணத்தை வெல்லும் - மஹேல உறுதி..!!!இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானகவின் தலைமைத்துவம் குறித்து தான் பெரும் மகிழ்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ சி சி இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சவாலான போட்டிகள்

மேலும்,“ பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுடன் விளையாடுவது மிகவும் சவாலான விடயம். ஆப்கானிஸ்தான் உடனான முதலாவது போட்டியில் தோற்றாலும் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மாபெரும் வெற்றியை நம் அணியினர் பதிவு செய்தனர்.தசுன் சானகவின் நம்பிக்கை நிச்சயமாக வளர்ச்சியடையும். விளையாட்டு மைதானத்திற்குள் வீரர்கள் தசுன் சானகவின் தலைமைத்துவத்தை நம்புகின்றார்கள்.

அது மிகவும் சிறந்த விடயம். நான் அவரை குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தலைவர் என்ற ரீதியில் கடந்த சில வருடங்கள் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது.ஆனால் இறுதியில் ஆசிய கிண்ணத்தை வெற்றி கொண்டார். அது மிகவும் விசேடமானது.

உலக கிண்ண போட்டியிலும் இலங்கை அணி நிச்சயமாக கிண்ணத்தை வெல்லும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Thursday, September 15, 2022

ஐசிசி நடுவராக பணியாற்றிய ஆசத் ரவூஃப் காலமானார்..!!!

ஐசிசி நடுவராக பணியாற்றிய ஆசத் ரவூஃப் காலமானார்..!!!ஐசிசி நடுவராக பணியாற்றிய ஆசத் ரவூஃப் என்பவர் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசத் ரவூஃப் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் அதன் பிறகு ஓய்வு பெற்றபின் நடுவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2000 ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை 98 ஒருநாள் போட்டிகளிலும் 2007ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை 23 டி20 போட்டிகளில் அவர் நடுவராக பணிபுரிந்துள்ளார் இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மறைந்த ஆசத் ரவூஃப் அவர்களுக்கு வயது 66 என்பது குறிப்பிடத்தக்கது
டி20 உலகக்கோப்பை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?

டி20 உலகக்கோப்பை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில் இந்தியா உள்பட பல அணிகள் வீரர்கள் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது

இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை சற்றுமுன் அறிவித்திருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டனாக நிக்கோலஸ் பூரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணி வீரர்களின் முழு விவரங்கள் இதோ

நிக்கோலஸ் பூரன் (கேட்ச்), ரோவ்மேன் பவல், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ரெய்மோன், ரெய்மான் ஒடியன் ஸ்மித்.

Wednesday, September 14, 2022

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு அணிகள் முதலிடம்

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு அணிகள் முதலிடம்


 2022 ஆம் ஆண்டுக்கான வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரண்டு அணியினரும் வடமாகாணத்தில் முதலிடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்கள் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. 

மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தினை சேர்ந்த 5 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர், யுவதிகள் அணியினர் பங்குகொண்டிருந்தார்கள்.ஆண்கள், பெண்கள் அணிகளில் இரண்டு போட்டிகளிலும் முல்லைத்தீவு மாவட்டம் முதலிடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்கள்.

அணிகள் பெற்ற இடங்கள் 

முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணியினர் 7 தங்க பதக்கங்களையும், 5 வெள்ளி பதங்கங்களையும், 3 வெங்கல பதக்கங்களையும் பெற்று மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்கள்.

மாகாணத்தில் இரண்டாம் இடத்தினை வவுனியா மாவட்ட அணி 2 தங்கப்பதங்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும்,1 வெங்கல பதக்கத்தினையும் பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்கள்.மூன்றாம் ஆம் இடத்தினை யாழ். மாவட்ட அணியினர் 2 தங்கப்பதக்கங்களையும்,2 வெள்ளி பதக்கங்களையும்,1 வெங்கலப் பதக்கத்தினையும் பெற்று மூன்றாம் இடத்தினையும் கிளிநொச்சி மாவட்ட அணியினர் பெற்றுள்ளனர். 

பெண்கள் அணியில் முல்லைத்தீவு மாவட்டம் 3 தங்கப்பதக்கங்களையும்,4 வெள்ளி பதக்கங்களையும், 2 வெங்கல பதக்கங்களையும் பெற்று மாகாணத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளனர். இரண்டாம் இடத்தினை வவுனியா மாவட்ட பெண்கள் அணியினர் 2 தங்கப்பதக்கங்களையும் 1வெங்கலப்பதக்கத்தினையும் பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்கள்.

மூன்றாம் ஆம் இடத்தினை யாழ். மாவட்ட பெண்கள் அணியினர் 1 வெள்ளி பதக்கத்தினை பெற்றுள்ளார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அணிக்காக முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு, உண்ணாப்பிலவு, இரணைப்பாலை, உடையார்கட்டு, வள்ளிபுனம், முள்ளியவளை, அளம்பில், திம்பிலி, கோவில் குடியிருப்பு, செல்வபுரம் கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் மாவட்ட அணி சார்பாக போட்டியில் பங்கு பற்றி முல்லைத்தீவு மாவட்டத்தினை வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வெற்றிகாக பங்காற்றியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, September 11, 2022

ஆசிய கிண்ணத்தினை 6வது தடவையாகவும் கைப்பற்றியது இலங்கை..!!!

ஆசிய கிண்ணத்தினை 6வது தடவையாகவும் கைப்பற்றியது இலங்கை..!!!


ஆசியக்கிண்ணத்தினை இலங்கை அணி 06வது தடவையாகவும் கைப்பற்றியுள்ளது.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் 45 பந்துகளில் 06 நான்கு ஓட்டங்கள் 03 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 171 என்ற வெற்றியிலக்கிரனை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஒட்டங்களை பெற்று 23 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

1986,1997, 2004, 2008 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

அத்துடன், பாகிஸ்தான் அணி இதுவரையில் இரண்டு முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

1997 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றது.
பாகிஸ்தான் அணிக்கு 171 ஓட்டங்கள் வெற்றி இலக்கு..!!!

பாகிஸ்தான் அணிக்கு 171 ஓட்டங்கள் வெற்றி இலக்கு..!!!


2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு 171 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இவர் பெற்ற 03ஆவது அரைச்சதம் இதுவாகும்.

இவர் 45 பந்துகளில் 06 நான்கு ஓட்டங்கள் 03 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் 21 பந்துகளில் 05 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் 21 பந்துகளில் 04 நான்கு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் முதல் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பெத்தும் நிஸ்ஸங்க 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 4ஆவது இடத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்த போது அமைதியாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணித்தலைவர் தசுன் சானக்க 02 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், வனிந்து ஹசரங்க களமிறங்க பானுக ராஜபக்ஷவுடன் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்துவதற்கு உருதுணையாக இருந்தார்.

6ஆவது விக்கெட்டுக்கான இவர்களின் இணைப்பாட்டத்தில் 58 ஓட்டங்களை அணிக்காக இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்து சென்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் ரவூப் 04 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

ஷதாப் கான் 04 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இப்திகார் ஹகமட் 03 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

மொஹம்மட் ஹஸ்னைன் 04 ஓவர்கள் பந்துவீசி 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.

நசீம் ஷா 04 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரையில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 11முறை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள இலங்கை அணி 5 முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

1986,1997,2004,2008 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்மை குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றால் 6ஆவது முறையாக ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற பெருமையை இலங்கை அணி பெற்றுக்கொள்ளும்.

அத்துடன், பாகிஸ்தான் அணி இதுவரையில் இரண்டு முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

1997 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றது.

இந்நிலையில், இம்முறை பாகிஸ்தான் அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றால் 3ஆவது முறையாக ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற பெருமையை பாகிஸ்தான் அணி பெற்றுக்கொள்ளும்.

இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு 5ஆவது இறுதிப் போட்டியாகும், அத்துடன் இன்றைய போட்டி இலங்கை அணிக்கு 12ஆவது இறுதிப் போட்டியாகும்.
ஆசிய வலைப்பந்து சம்பியனானது இலங்கை..!!!

ஆசிய வலைப்பந்து சம்பியனானது இலங்கை..!!!


ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இதனூடாக இலங்கை வலைப்பந்து அணி 6ஆவது முறையாக ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 63-53 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண போட்டி..!!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண போட்டி..!!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி 05 தடவைகளும் பாகிஸ்தான் அணி 02 தடவைகளும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரையிறுதிச் சுற்றில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை வலைப்பந்தாட்ட அணி, ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் இன்று சிங்கப்பூரை எதிர்கொள்கின்றது.

நேற்றைய வெற்றியின் மூலம் இலங்கை அடுத்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் வலைப்பந்தாட்ட உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Friday, September 9, 2022

இலங்கை அணி அபார வெற்றி..!!!

இலங்கை அணி அபார வெற்றி..!!!


இலங்கை - பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று மோதி ஆசிய கிண்ண இருபதுக்கு -20 சுப்பர் 4 கடைசிப் போட்டி இரண்டு அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கு முந்தைய ஒத்திகையாக அமைந்தன

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டம், பெத்தும் நிஸ்ஸன்கவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

3 விக்கெட்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க 2 பிடிகளை எடுத்ததுடன் ஒரு ரன் அவுட்டிலும் பங்காற்றியிருந்தார். துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை துடுப்பெடுத்தாடியபோது முதல் இரண்டு ஓவர்களில் குசல் மெண்டிஸ் (0), தனுஷ்க குணதிலக்க (0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். (2 - 2 விக்.)

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய சரித் அசலன்கவுக்கு பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட தனஞ்சய டி சில்வா 9 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் பெத்தும் நிஸ்ஸன்கவும் பானுக்க ராஜபக்ஷவும் 4ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நம்பிக்கை ஊட்டினர்.

பானுக்க ராஜபக்ஷ 24 ஓட்டங்களைப் பெற்றார்.

பெத்தும் நிஸ்ஸன்க 5ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் தசுன் ஷானக்கவுடன் 33 ஓட்டங்களைப் பகர்ந்ததன் பலனாக இலங்கை வெற்றி இலக்கை அண்மித்தது.

தசுன் ஷானக்க 21 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டமிழந்த பின்னர் பெத்தும் நிஸ்ஸன்கவும் வனிந்து ஹசரங்க டி சில்வாவும் வெற்றி இலக்கை அடைய உதவினர்.

பெத்தும் நிஸ்ஸன்க 55 ஓட்டங்களுடனும் வனிந்து ஹசரங்க டி சில்வா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் ஹஸ்நய்ன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

14ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அதன் பின்னர் கடைசி 7 விக்கெட்களை 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

ஆரம்ப வீரர்களான மொஹமத் ரிஸ்வானும் அணித் தலைவர் பாபர் அஸாமும் 3.3 ஓவர்களில் 23 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இந்த சுற்றுப் போட்டியில் திறமையாக விளையாடிவந்த ரிஸ்வான் இன்றைய போட்டியில் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து பாபர் அஸாமுடன் 2ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்த பக்கார் ஸமான் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பாபர் அஸாம் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார். (68 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 82 ஓட்டங்களாக இருந்தபோது குஷ்தில் ஷா 4 ஓட்டங்களுடன் களம்விட்டகன்றார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

மததிய வரிசையில் இப்திகார் அஹ்மத் (13), மொஹமத் நவாஸ் (26) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 4 ஓவர்களில் 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 2 விக்கெட்களையும் அறிமுக வீரர் ப்ரமோத் மதுஷான் 2.1 ஓவர்களில் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். மூவரும் தலா 21 ஓட்ங்களைக் கொடுத்திருந்தனர்.

இலங்கையும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் ஆசிய சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதவுள்ளன.