Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Friday, 7 July 2023

புதிதாக வந்த Thread இற்கு எதிராக Twitter சட்ட நடவடிக்கை..!!!

புதிதாக வந்த Thread இற்கு எதிராக Twitter சட்ட நடவடிக்கை..!!!


ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் புதிதாக அறிமுகப்படுத்திய ட்விட்டர் போன்ற Thread செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த செயலியில் தனது சொந்த ட்விட்டர் செயலியில் உள்ளதைப் போன்ற பல அம்சங்கள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ட்விட்டரில் இருந்து வெளியேறிய ஊழியர்களை பயன்படுத்தி ஜுக்கர்பெர்க் இந்த அப்ளிகேஷனை தயாரித்துள்ளதாக எலோன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (06) அறிமுகம் செய்யப்பட்ட Threads செயலியில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை தற்போது 30 மில்லியனைத் தாண்டியுள்ளது விசேட அம்சமாகும்.

Friday, 3 March 2023

18 வயதுக்குட்பட்டவர்கள் குறித்து TikTok எடுத்துள்ள முக்கிய தீர்மானம்..!!!

18 வயதுக்குட்பட்டவர்கள் குறித்து TikTok எடுத்துள்ள முக்கிய தீர்மானம்..!!!


18 வயதுக்குட்பட்ட TikTok உறுப்பினர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்ட உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மட்டுமே TikTok கை பயன்படுத்த முடியும்

அடுத்த சில வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று TikTok தெரிவித்துள்ளது.

Tuesday, 25 October 2022

WhatsApp மீண்டும் வழமைக்கு ..!!!

WhatsApp மீண்டும் வழமைக்கு ..!!!


மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப் செயலி இலங்கை உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் கடந்த ஒரு மணி நேரமாக முற்றிலுமாக செயலிழந்திருந்தது.

இதனால் வட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும், குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் வாட்ஸ்அப் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

Wednesday, 28 September 2022

மீண்டும் நோக்கியா 2660 ப்ளிப் போன்: எப்படி?

மீண்டும் நோக்கியா 2660 ப்ளிப் போன்: எப்படி?




நோக்கியா 2660 ப்ளிப் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

நோக்கியா 2660 ப்ளிப் சிறப்பம்சங்கள்:

# 2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே

# 1.77 இன்ச் 160x128 பிக்சல் QVGA இரண்டாவது டிஸ்ப்ளே

# அதிகபட்சம் 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி107 சிங்கில் கோர் பிராசஸர்

# 48 MB ரேம், 128MB மெமரி மெமரி

# டூயல் சிம் ஸ்லாட்

# எஸ்30 பிளஸ் ஒஎஸ்

# விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எப்எம் ரேடியோ,

# MP3 பிளேயர் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 4.2, மைக்ரோ யுஎஸ்பி 2.0

# 1450 எம்ஏஹெச் பேட்டரி

# நிறம்: பிளாக், ரெட் மற்றும் புளூ
அறிவிக்கப்படாத விலையில் சத்தமின்றி சாம்சங் ஸ்மார்ட்போன்..!!!

அறிவிக்கப்படாத விலையில் சத்தமின்றி சாம்சங் ஸ்மார்ட்போன்..!!!




சாம்சங் நிறுவனம் சத்தமின்றி கேலக்ஸி A04s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

சாம்சங் கேலக்ஸி A04s சிறப்பம்சங்கள்:

# 6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD 90Hz டிஸ்ப்ளே

# எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர், மாலி G52

# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி/ 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி

# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ கோர் 4.1

# டூயல் சிம் ஸ்லாட்

# 50 MP பிரைமரி கேமரா

# 2 MP டெப்த் கேமரா

# 2 MP மேக்ரோ கேமரா

# 5 MP செல்பி கேமரா

# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்

# பக்கவாட்டில் கைரேகை சென்சார்

# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி

# 5000 எம்ஏஹெச் பேட்டரி

# நிறம்: பிளாக், கிரீன், வைட் மற்றும் ஆரஞ்சு காப்பர்

Saturday, 17 September 2022

சூரியனின் உண்மையான நிறம் என்ன..!: வெளியாகியுள்ள வியதகு தகவல்கள்..!!!

சூரியனின் உண்மையான நிறம் என்ன..!: வெளியாகியுள்ள வியதகு தகவல்கள்..!!!




சூரியனின் உண்மையான நிறம் தொடர்பில் நாசா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, சூரியனின் உண்மையான நிறம் வெண்மையானது என்று அமெரிக்க தேசிய விண்வௌி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஸ்கொட் கெலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,“சூரியனின் உண்மையான நிறம் வெண்மை, அது பூமியில் இருந்து பார்க்கும் போது மஞ்சளாக இருப்பதற்கு காரணம் நமது வளிமண்டலம் தான்.

விண்வெளியில் சூரியனை படம் எடுக்கும் போது, அது வெண்மையாக தான் இருக்கிறது. சூரிய ஒளிக்கற்றையில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான நிறங்களும் ஒன்றிணைந்து அது வெண்மையாக தோற்றமளிக்கும்.சூரியன் பூமியில் மஞ்சளாக இருப்பதற்கு நமது வளிமண்டலம் தான் காரணம் என்றும், நீண்ட அலைவரிசை ஒளியான சிவப்பால் தான் அது மஞ்சளாக தெரிகிறது என்றும் “Latest in space” என்ற அறிவியல் பக்கம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.இந்த பதிவு உண்மையானது என்பதுடன் மக்கள் மத்தியில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

சாதாரண கண்களுக்கு சூரியனின் உண்மையான நிறத்தை கண்டறிவது கடினம். புவியின் வளிமண்டலத்திற்கு வௌியே சூரியனின் உண்மையான நிறத்தையும், நிறங்கள் மாற்றமடையும் சூட்சுமத்தையும் கண்டறிய முடியும்.இதேவேளை, 100 ஔியாண்டுகள் தொலைவில் "சுப்பர் எர்த்" (super earth)என்றழைக்கப்படும் உயிர் வாழ்வதற்கு உகந்ததாக கருதப்படும் இரட்டை கிரகங்களில் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் இதனை கண்டறிந்துள்ளதுடன், அதற்கு ஸ்பெகியூலோஸ் -2 என்று பெயரிடப்பட்டுள்ளது.குறித்த கிரகம் பூமியை விட 30 மடங்கு வரை விசாலமானது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். நாசாவின் டெஸ் விண்கலத்தின் ஊடாக குறித்த கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.”என தெரிவித்துள்ளார்.

Tuesday, 13 September 2022

ஆப்பிள் ஐபோன் 13 - ஐபோன் 14 இரண்டுக்கும் விலை மட்டுமே வித்தியாசம்: பயனர்கள் அதிருப்தி..!!!

ஆப்பிள் ஐபோன் 13 - ஐபோன் 14 இரண்டுக்கும் விலை மட்டுமே வித்தியாசம்: பயனர்கள் அதிருப்தி..!!!


ஆப்பிள் ஐபோன் 14 வெளியாகியுள்ள நிலையில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு மாடல்களிலும் ஒரே ஒரு வித்தியாசம் விலைதான் என்றும் வேறு எந்த மாற்றமும் இல்லை என்றும் பயனர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் மகள் ஈவ் ஜாப்ஸ் அவர்கள் கூட ஆப்பிள் 14 மாடலை கேலி செய்து தனது இன்ஸ்டாகிரமைல் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆப்பிள் ஐபோன் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய மாடலில் எந்தவிதமான புதிய அம்சம் இல்லை என்றும் அதே போல் தான் ஆப்பிள் 14 மாடலிலும் உள்ளது என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஐபோன் 14 விலை 128ஜிபி மாடல் ரூ.79,900 எனவும், ஐபோன் 14 பிளஸ் மாடல் விலை ரூ.89,900 என்றும், ஐபோன் 14 ப்ரோ மாடலின் விலை ரூ.1,29,900 என்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,39,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Friday, 1 July 2022

இன்ஸ்டாகிராமில் இனி வயதை ஏமாற்ற முடியாது..!!!

இன்ஸ்டாகிராமில் இனி வயதை ஏமாற்ற முடியாது..!!!


இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் அதிகளவில் பயனர்கள் தங்கள் கணக்குகளை நிர்வகித்து வருகின்றனர்.

பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் இன்றைய உலகின் முக்கியமான தொடர்பு சாதனங்களாக ஆகியுள்ளன. உலகின் கால்வாசி பேராவது தற்போது இதுபோன்ற சமூகவலைதளங்களில் தங்கள் கணக்குகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சதவீதம் கணக்குகளாவது போலி கணக்குகளாக இருக்கும்.

இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் வயதை மறைத்து போலிக் கணக்குகளை உருவாக்குவதை தவிர்க்க, புதிய வசதியை இணைத்துள்ளது. புதிதாக கணக்கு திறக்கும்போது பயனர்கள் இனிமேல் தங்கள் செல்பி புகைப்படங்களை பதிவிட்டுதான் கணக்கைத் தொடங்க முடியும். இதன் மூலம் கணிசமாக போலிக் கணக்குகளை குறைக்கலாம் என சொல்லபப்டுகிறது.

Tuesday, 21 June 2022

முடிவுக்கு வந்தது 27 ஆண்டுகளாக இயங்கி வந்த “Internet Explorer”..!!!

முடிவுக்கு வந்தது 27 ஆண்டுகளாக இயங்கி வந்த “Internet Explorer”..!!!


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ச்சிங் பிரவுசரான internet explorer தன் சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்ரோசாப்ட் இறுதியாக அதன் பழமையான உலாவியான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை (IE) நிறுத்துகிறது. ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய உலாவி இப்போது அதிகளவு பயனர்களால் பயன்படுத்தப்படுவதில்லை.

விண்டோஸ் 95 க்கான கூடுதல் தொகுப்பாக 1995 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. 2003 இல் உலாவி 95 சதவீத பயனர்களை எட்டியிருந்தாலும், புதிய மற்றும் வேகமான போட்டியாளர்கள் தொழில்நுட்ப சந்தையில் நுழைந்ததால் நிலை படிப்படியாகக் குறைந்தது. பல பயனர்கள் IE மெதுவாக இருப்பதாகவும், செயலிழக்கக்கூடியதாகவும், ஹேக்குகளுக்கு ஆளாகக்கூடியதாகவும் இருப்பதாக புகார் கூறத் தொடங்கினர்.

Saturday, 11 June 2022

வாட்ஸ் அப்பில் புதிய மாற்றம்..!!!

வாட்ஸ் அப்பில் புதிய மாற்றம்..!!!


உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதுப்பித்தல்களில் ஒரே வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 2ஜிபி வரையிலான புகைப்படம், காணொளி போன்றவற்றையும் பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஒரே நேரத்தில் வாட்ஸ்-அப் குரல் அழைப்பில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Sunday, 8 May 2022

நியாயமான விலையில் ZTE ஸ்மார்ட் போன்கள்..!!!

நியாயமான விலையில் ZTE ஸ்மார்ட் போன்கள்..!!!


ZTE இன் உயர்-நடுத்தர வகுப்பு வரிசையில் முன்னணியில் திகழும், ZTE Blade V30 ஆனது கறுப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களிலும் கிடைப்பதுடன், இந்த நேர்த்தியான பாணியிலான சாதனம் நாம் செலுத்தும் விலையை விட அதிக விலைப் பெறுமதி கொண்டது. இருப்பினும், ரூபா 69,999/- என்ற விலையை மட்டுமே கொண்டுள்ள இந்த கண்ணைக்கவரும் அழகான சாதனம் பயனர்களுக்கு நடுத்தர வகுப்பு தொலைபேசி சாதனங்கள் வழங்கும் அனைத்து சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களையும் மிகவும் கட்டுபடியான விலையில் வழங்குகிறது. தொலைபேசி சாதனத்தின் பின்புறத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பல்துறை ஆற்றல் மற்றும் திறன் கொண்ட 4 கேமரா அமைப்பு, தலைசிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ திறன்களுக்கு வழிகோலியுள்ளதுடன், இதில் 64 MP பிரதான கேமராவும், 8 MP அதிவிசால லென்ஸ் வில்லை மற்றும் 5 MP மெக்ரோ லென்ஸ் வில்லை, 2 MP ஆழமான உணர்திறன் கொண்ட கேமரா ஆகியவற்றின் பக்கபலத்தைக் கொண்டுள்ளது. சாதனத்தின் முன்புறம் 16 MP கேமராவைக் கொண்டுள்ளதுடன், இது எத்தருணத்தையும் நேர்த்தியாக வசப்படுத்த உதவுகிறது.

இத்தொலைபேசி சாதனம் மிகவும் தாராளமான 128 GB சேமிப்பகத்தையும், 4 GB RAM மற்றும் சக்திவாய்ந்த octa-core செயலியையும் கொண்டுள்ளதுடன், இது மிகவும் திறமையான மற்றும் சக்திவாய்ந்த தொலைபேசி சாதனத்திற்கு இடமளிக்கின்றது. ZTE Blade V30 இன் 5,000 mAh பேட்டரி, நீங்கள் நாள் முழுவதும் நீடித்து நிலைக்கும் பேட்டரியை அனுபவிக்க முடியும். அதே நேரத்தில் சாதனங்களின் சக்திவாய்ந்த GPU மற்றும் 6.67-அங்குல 1080p IPS முகத்திரை மூலம் எங்கிருந்தும் சில மொபைல் கேமிங்கிற்காக அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்னும் கூடுதலான அளவில் கட்டுபடியாகும் விலையில் ஆற்றல் மற்றும் திறன் கொண்ட கேமராக்களைத் தேடும் நுகர்வோருக்கு, ZTE Blade V30 Vita ஏவைய ஆனது 128GB சேமிப்பகம் மற்றும் 4GB RAM உடன் மிகச் சரியான தெரிவாகும். வெறும் ரூபா 53,999/- என்ற விலையில், வாடிக்கையாளர்கள் 48MP பிரதான கேமரா, 5MP மெக்ரோ கேமரா மற்றும் 2MP ஆழமான உணர்திறன் கேமரா ஆகியவற்றைக் கொண்ட மிகவும் திறமையான மூன்று பின்புற கேமரா கட்டமைப்பை அனுபவிக்க முடியும். நீலம், சாம்பல் மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும், ZTE Blade V30 Vita ஒரு சிறந்த, நேர்த்தியான மற்றும் நவீன பாணியிலான தெரிவாகும். மேலும், மிகப்பெரிய 5,000 mAh பேட்டரி நாள் முழுவதும் அதனை முழுமையாகப் பயன்படுத்த இடமளிக்கின்றது.

Sunday, 17 April 2022

வட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்..!!!

வட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்..!!!


உலகில் உள்ள அனைத்து கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கும் வட்ஸ்அப் செயலியானது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

சமூக வலைத்தளங்களிலேயே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப்பில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டேதான் இருக்கிறது மெட்டா நிறுவனம்.

அந்த வகையில் தற்போது புதிய அம்சங்கள் அதில் இணையவிருக்கின்றன.

அதாவது, பேஸ்புக், இஸ்டாகிராம் போன்றவற்றில் இருப்பது போல, சொட் பொக்ஸில், பயனாளர்கள் தங்களது பாவனைகளை வெளிப்படுத்தும் எமோஜிகளை அனுப்பும் புதிய வசதி அறிமுகமாகிறது.

வட்ஸ்அப்பில் விரைவில் பயனாளர்கள் எமோஜிகளை, தோலின் நிறத்தை தேர்வு செய்து அனுப்பும் வகையில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, வட்ஸ்அப்பில் அனுப்பும் கோப்புகளின் அளவை அதிகரிக்கவும் முன் வந்துள்ளது. தற்போது வெறும் 100 MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும். இது இனி 2 GB ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

ஒரே நேரத்தில் 32 பேருடன் குரல் அழைப்பு செய்யும் வசதியும் வருகிறது. தற்போது குரல் அழைப்பில் வெறும் 8 பேரை மட்டுமே சேர்க்க முடியும்.

ஒரு குழுவில் ஏதேனும் ஒரு பயனாளர், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தகவலை அனுப்பினால் அதனை குரூப் அட்மினே அழிக்கும் வசதி விரைவில் வரவிருக்கிறது. இதனால் குரூப் அட்மின்களுக்கு தொல்லை தீர்ந்தது.

ஒரு பயனாளரின் பெயரை நமது வட்ஸ்அப் பட்டியலில் சேர்க்காமலேயே, அவருக்கு குரல் பதிவில் தகவல் அனுப்பும் வசதியும் வருகிறது.

இவையெல்லாம் எதிர்வரும் வாரத்தில் அப்டேட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, 13 February 2022

ஸ்மார்ட்போன் உலகை மாற்றப்போகும் கூகுள்..!!!

ஸ்மார்ட்போன் உலகை மாற்றப்போகும் கூகுள்..!!!


சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 2016 முதல் தனது வெற்றிகரமான எண்ட்ராய்ட் தளத்திற்கு மாறாக ஒரு ஓப்பன் சோர்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது.

இதற்குப் பெயர் Fuchsia OS, இந்தத் தளத்தை இதுவரை யாரும் முழுமையாகப் பயன்படுத்தத் ஆரம்பிக்காத நிலையில் சம்சங் முதல் ஆளாக முன்வந்து தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு Fuchsia OS-ஐ பயன்படுத்தத் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான ஆலோசனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2021 மே மாதம் அனைத்து முன்னணி எலக்ட்ரானிக்ஸ் (Electronics companies) நிறுவனமும் விரைவில் Fuchsia OS-ஐ பயன்படுத்த முன்வரும் எனத் தகவல் வெளியானதில் இருந்து Fuchsia OS இணையதளத்தில் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.

இந்நிலையில் சம்சங் தனது ஸ்மார்ட்போனில் எண்ட்ராய்ட்க்கு பதிலாக Fuchsia OS பயன்படுத்த முன்வந்துள்ளது. கூகுள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தைக்கும் முக்கியமான விஷயமாக உள்ளது. அப்படி இந்த Fuchsia OS என்ன ஸ்பெஷல்.

கூகுள் நிறுவனத்தின் நீண்ட காலக் கனவு தான் இந்த Fuchsia OS. அதாவது அனைத்து கருவிகளுக்கும் ஏரே ஓஎஸ் உதாரணமாக ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட்வாட்ச், கம்ப்யூட்டர், டேப்லெட், embedded systems வரையில் அனைத்திற்கு ஒரே ஓஎஸ்.

இந்த எண்ணம் கூகுள்-க்கு வர காரணம், எண்ட்ராய்ட் தளத்தில் இருக்கும் பழைய போன்களுக்குப் புதிய அப்டேட் மற்றும் பாதுகாப்புகளை அளிக்க முடியாமல் உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் உருவானது தான் Fuchsia OS. அதனாலேயே இதை ஓப்பன் சோர்ஸ் தளத்தில் புதிய Zircon கெர்னல் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சாம்சங் தனது Tizen OS உடன் கூகுள் நிறுவனத்தின் Wear OS உடன் இணைத்து ஒற்றைத் தளமாக மாற்றி அமைத்தது. இதைத் தொடர்ந்து Fuchsia OS-ஐ முதல் ஆளாகப் பயன்படுத்த சாம்சங் முன்வந்துள்ளது. எப்படி வியர் ஓஎஸ் தளத்தில் சாம்சங் உதவி செய்ததோ தற்போது Fuchsia OS உதவி செய்து சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த கூகுள் காத்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Saturday, 12 February 2022

Apple Foladable IPhone: அட்டகாசமான லுக்கில் களமிறங்கும் ஐபோன் 15..!!!

Apple Foladable IPhone: அட்டகாசமான லுக்கில் களமிறங்கும் ஐபோன் 15..!!!


ஆப்பிள் நிறுவனமானது புதிய ஐபோனை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது.

அதன்படி லீக்கான தகவலில், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் எப்படி இருக்கும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது.

இதில், ஐபோனின் திரை அளவு 7.7" அங்குலம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹிஞ்சஸ் டிஸ்ப்ளேகளை இணைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எல்ஜி நிறுவனத்தின் எல்டிபிஓ LED டிஸ்ப்ளே இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரை 120Hz ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட் உடன் வரலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இ-சிம் உடன் களமிறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதாவது ‘மேக் ரூமர்ஸ்’ தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களிலும் சிம் ஸ்லாட் இருக்காது என்று தெரியவந்துள்ளது.

மெய்நிகர் தொழில்நுட்பத்தைச் சார்ந்த தகவல் சாதங்களை இயக்குவதற்காக ஆப்பிள் நிறுவனம் ரியாலிட்டி ஓஎஸ் (Reality OS) எனும் பிரத்யேக இயங்குதளம் ஒன்றை வடிவமைத்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

Monday, 29 November 2021

My Huawei App இலங்கையில் வெளியீடு..!!!

My Huawei App இலங்கையில் வெளியீடு..!!!


உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, My Huawei App மூலம் அதன் பயனர்களுக்கு புதிய, ஸ்மார்ட் பயணத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த செயலியானது, வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் உரிய சேவைகளை அவர்கள் கண்டறிவதற்குமான உத்தியோகாபூர்வ, ஒரே இடத்தில் அனைத்தும் ஒருங்கிணைந்த தளமாகும். My Huawei App என்பது Huawei ஸ்மார்ட் போன்களில் முற்கூட்டியே நிறுவப்பட்ட Huawei Support App இனது புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும் என்பதுடன், இது Huawei நிறுவனத்தின் உத்தியோகபூர்வ உதவிக் குழுவுடன் நேரடியாக இணைவதற்கான உத்தியோகபூர்வ தளமாகும்.

பயனர்களுக்கு Huawei உதவிக் குழுவிடமிருந்து நேரடியாக உதவியைக் கோருவதற்கான வாய்ப்பை இந்த செயதில வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளைக் காணலாம்.

Huawei சாதனத்தின் இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், "புதிய Huawei அனுபவம், அதன் முழுத் தொகுதியின் இணைப்பு மற்றும் தொடர்ச்சியான அறிவுப் பகிர்வு ஆகியன, எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில், அவர்களுடனான ஒன்றிணைந்த உரையாடல்கள் மூலம் புத்தாக்கம் கொண்ட புதிய விடயங்களை அவர்கள் அணுகவும் அதனை மேம்படுத்துவதற்கும் முக்கியமாக அமைகின்றன." என்றார்.

MY HUAWEI ஆனது, இதற்கு முன்னர் காணப்பட்ட உதவி வழங்கும் செயலியின் முழு அம்சங்களையும் உள்ளடக்கியதுடன், பயனர்கள் அனைத்தையும் கண்டறிந்து அவை அனைத்திலும் முழு தெளிவைப் பெறும் வகையில் அதில் மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் ஒரே பார்வையில் பெறலாம். சமீபத்திய Huawei தொடர்பான செய்திகள், பிரம்மாண்ட நிகழ்வுகள், தயாரிப்பு வெளியீடுகள் அல்லது மாபெரும் விற்பனை நிகழ்வுகளைப் பற்றி இதன் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். பயனர்கள் ஏற்கனவே தங்களது சாதனங்களில் Huawei Support App செயலியை வைத்திருந்தால், அவர்கள் அதை கைமுறையாக புதுப்பிக்கலாம் அல்லது Huawei AppGallery இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Harmony 2.0 அல்லது அதற்குப் பின்னரான பதிப்புகளைக் கொண்ட எந்தவொரு Huawei சாதனங்களும் MY HUAWEI செயலியை முன்கூட்டியே நிறுவியவாறு வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பயனர்கள் அதைத் தங்கள் திரையில் அல்லது பின்வரும் முறைகளில் ஒன்றைப் பின்பற்றுவதன் மூலம் அதைக் காணலாம்: முகப்புத் திரையை கீழே ஸ்லைட் செய்து, அதைத் தேடுதல் அல்லது MY HUAWEI என டைப் செய்து தேடுதல் அல்லது பயனர்கள் AppGallery இற்குச் சென்று அதனைத் தேடலாம். MY HUAWEI APP இற்கான புதுப்பிக்கப்பட்ட 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட EMUI பதிப்புகளைக் கொண்ட சாதனங்களுக்கு இது கிடைக்கிறது.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, முழுமையாக இணைக்கப்பட்ட, அறிவார்ந்த உலகத்திற்காக ஒவ்வொரு நபருக்கும், வீட்டிற்கும் மற்றும் நிறுவனத்திற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கொண்டுவர உறுதிபூண்டுள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம் எனும் வகையில், Huawei புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகள் தரவரிசையில் தொடர்ந்து முன்னணியில் இடம்பிடித்து வருகிறது. மிக மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகளின் BrandZ 100 இடங்களுக்கான பட்டியலில் Huawei 45ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் 79ஆவது இடத்தையும், சமீபத்திய Brand Finance Global 500 மிக மதிப்புமிக்க தரக்குறீயுடுகள் பட்டியலில் முதல் 10 தரக்குறியீடுகளில் ஒன்றாக Huawei நிறுவனம் இடம்பெற்றுள்ளது. Interbrand இன் சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகளில் 68ஆவது இடத்தைப் பெற்றுள்ள Huawei, Fortune's Global 500 பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு அதிவேக இணைய சேவை..!!!

இலங்கைக்கு அதிவேக இணைய சேவை..!!!


கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் (Elon Musk) ரொக்கெட் நிறுவனமான SpaceX உடன் இணைந்த, அதன் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink உடன் இலங்கை பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ட்விற்றர் பதிவொன்றை இட்டுள்ள TRC இதனைத் தெரிவித்துள்ளது.

 
இலங்கையில் Starlink இணைய சேவைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் SpaceX நிறுவனத்துடன் பூர்வாங்க கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக TRC தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் எதிர்காலத்தில் சேவையை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குபடுத்தல் மற்றும் முன்நிபந்தனைகள் உள்ளிட்ட விடயங்கள் முதல் சுற்று கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக TRC தெரிவித்துள்ளது.

கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் ரொக்கெட் நிறுவனமான SpaceX இன் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink, கடந்த நவம்பர் 01 ஆம் திகதி இந்தியாவில் தனது வணிகத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசாங்கத்திற்கு அந்நிறுவனம் வழங்கியிருந்து ஆவணங்கள் ஊடகங்களுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இணைய சேவைகளை ஆரம்பிப்பதற்கு அந்நிறுவனம் தயாராகி வருகின்றமை தெரிய வந்திருந்தது.

Starlink ஆனது, SpaceX இன் அதிவேக செயற்கைக்கோள் இணையத் திட்டமாகும். இது கிராமப் புறங்கள் உள்ளிட்ட அடைய முடியாமல் உள்ள கஷ்டப் பிரதேசங்களில் நம்பகமான மற்றும் கட்டுப்படியான இணைய சேவையை வழங்குவதன் மூலம் இணை இணைப்பை அடைவதில் உள்ள இடைவெளியைக் குறைப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Sunday, 31 October 2021

புதிய OPPO A16 இலங்கையில் வெளியீடு..!!!

புதிய OPPO A16 இலங்கையில் வெளியீடு..!!!


உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதன வர்த்தகநாமமான OPPO, இலங்கையில் OPPO A16 ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. நேர்த்தியான அம்சங்களுடன், OPPO A16 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் அன்றாட தேவைகளை எவ்வித விட்டுக் கொடுப்பும் இன்றி மேற்கொள்ளும் வகையில், ஸ்டைலான வடிவமைப்பை விரும்புகிறார்கள். OPPO A16 இன் பெரிய 6.52 அங்குல திரை, ஒருவர் தனது விருப்பமான பொழுதுபோக்கை வசதியாகப் பார்க்க உறுதி செய்கிறது. நீண்ட பாவனைக்குரிய 5,000mAh மின்கலம், இணையத்தில் உலாவ, அதன் மூன்று கெமரா மூலம் சிறந்த தருணங்களை மிகத் தெளிவாகப் படம்பிடிக்க வசதியாக எவ்வித தடங்கலுமின்றி செயற்பட உதவுகின்றது.

Xinda Lanka [OPPO Sri Lanka] பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி இது தொடர்பில் தெரிவிக்கையில், “OPPO A16 அதன் பாணி மற்றும் செயல்பாட்டு கலவையில் எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி உருவாக்கப்பட்டுள்ளது. நவநாகரீக வடிவமைப்பு காரணமாக, உங்களின் தேவைக்காக வெளியே எடுக்கும்போது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் உயர்ரக மூன்று கெமராக்கள், மறக்கமுடியாத தருணங்களை கைப்பற்ற உதவுகின்றன. அதன் பாரிய 5,000mAh மின்கலம், OPPO A16 இனது எடையிலும் பார்க்க அதிக பெறுமதியை வழங்குகிறது, எனவே மின்கல ஆயுள் குறித்து தொடர்ந்து கவலைப்படாமல் உங்கள் நாளை அனுபவிக்க முடியும்” என்றார்.

190 கிராம் எனும் மிகக் குறைந்த எடையுடனான கச்சிதமான கட்டமைப்புடன், 163.8 மி.மீ. நீளம், 75.6 மி.மீ. அகலம் மற்றும் 8.4 மி.மீ. தடிப்பம் கொண்ட இச்சாதனம், ஒரு வேலைப்பழுமிக்க நாள் முழுவதும் பயன்படுத்த வசதியானது.

OPPO A16 ஆனது, வெப்பத்தை கடத்தும் அலுமினிய மேற்புற மூடியை கொண்டுள்ளது. அதன் LCD திரை மற்றும் 5,000 mAh மின்கலம் இரண்டையும் தன்னகத்தே கொண்ட OPPO A16 இன் நடுவிலுள்ள சட்டகமானது, வியக்கத்தக்க வகையில் மெல்லியதாக காணப்படுகின்றது.

Friday, 29 October 2021

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றம்..!!!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றம்..!!!


சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்துக்கான மெய்நிகர் உலகத்தை உருவாக்கவே மெட்டா முயற்சிக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட உள்ளது. அதாவது ரீபிராண்ட் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மாநாட்டில் இதற்கான அறிவிப்பை ஜூகர்பெர்க் நேற்று வெளியிட்டார்.

அதேசமயம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலிகளின் பெயர்கள் மாற்றப்படாது. தற்போதிருக்கும் பெயரிலையே தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் காணொலியில் நடந்த மாநாட்டில் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகெர்ப்ர்க பேசியதாவது:

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ரீபிராண்ட் செய்யப்பட்டு, மெட்டா பிளாட்ஃபோர்ம் என்று அழைக்கப்படும் அதாவது சுருக்கமாக மெட்டா என்று அழைக்கப்படும். அதிவேகமாக டிஜிட்டல் உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மெட்டாவர்ஸ் உருவாக்கும்.

மெட்டா எனும் புதிய பெயர் சமூக ஊடக சேவையை விட மெட்டாவர்ஸில் முதலீடு செய்வதைதான் பிரதிபலிக்கிறது. நெருக்கமான தளங்களி்ல் வாழ்ந்து, சமூகப் பிரச்சினைகளுடன் போராடி நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். இப்போது நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்து அடுத்த அத்தியாயத்தை உருவாக்கவும் உதவவும் நேரம் வந்திருக்கிறது.

நம்முடைய நிறுவனம் மெட்டா என்று இன்றிலிருந்து அழைக்கப்படும் என்று பெருமையுடன் தெரிவிக்கிறேன்.
மக்களை ஒன்றாக இணைத்தல் எனும் நம்முடைய இலக்குகள் ஒரே மாதிரியானவைதான். நம்முடைய நிறுவனத்தின் செயலிகள், அதன் பிராண்ட்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்படாது.

ஃபேஸ்புக் நிறுவனத்தை இன்று சமூக ஊடக நிறுவனமாக நாம் அனைவரும் பார்க்கிறோம். ஆனால், நம்முடைய இலக்கு என்பது, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மக்களை இணைப்பதாகும்.

மெட்டாவெர்ஸ் என்பது மெய்நிகர் சூழல். அதற்குள் நீங்கள் சென்று வெறும் திரையைப் பார்ப்பதற்குப் பதிலாக மெய்நிகர் உபகரணங்களான ஹெட்மசெட், ரியாலிட்டி கிளாஸ், ஸ்மார்ட்ஃபோன் அப், உள்ளி்ட்ட பல உபகரணங்கள் மூலம் மக்களுடன் சந்திக்கலாம், உரையாடலாம், விளையாடலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் மெட்டாவெர்ஸ் 100 கோடி மக்களைச் சென்றடையும். இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என நம்புகிறேன்- என்றார்.

அதேசமயத்தில் ஃபேஸ்புக் செயலி தனது பெயரை மாற்றவில்லை, இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப், மெசஞ்சர் ஆகியவற்றின் பெயர்களும் மாறவில்லை. டிசெம்பர் முதலாம் திகதி முதல் புதிய டிக்கர் சிம்பளான எம்பிஆர்எஸ் என்ற எழுத்துடன் செயல்படத் தொடங்கும்.
மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது. ஆங்கிலத்தில் (Beyond) என்ற வார்த்தையைக் குறிக்கும்.
1992ம் ஆண்டு நீல் ஸ்டீபென்சன் என்ற ஆங்கில எழுத்தாளர் தனது “ஸ்னோ கிராஷ்” நாவலில் மக்கள் அனைவரும் மெய்நிகர்(விர்ச்சுவல்) ஹெட்செட், கண்ணாடி போன்றவற்றை அணிந்து இணைந்திருத்தலையும், உரையாடுவதையும், விளையாடுவதையும் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது 1992ம் ஆண்டிலேயே டிஜிட்டல் உலகத்தை விரிவாக எழுதியிருந்தார். அதைத் தழுவியே மெட்டாவெர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

Wednesday, 27 October 2021

கண்களை பாதிக்கும் மொபைல் பிரைட்னஸ்(Brightness) : எவ்வளவு இருக்கணும் தெரியுமா?

கண்களை பாதிக்கும் மொபைல் பிரைட்னஸ்(Brightness) : எவ்வளவு இருக்கணும் தெரியுமா?


கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க மொபைல் பிரைட்னஸ் குறைந்தளவு எவ்வளவு இருக்கணும் தெரியுமா? . பலர் மொபைல் போன், லேப்டாப்பில் குறைந்தளவு பிரைட்ன்ஸ் இருந்தால் கண்ணுக்கு நல்லது என நினைக்கிறோம். ஆனால் மருத்துவர்கள் இதை மறுக்கின்றனர்.

குறைந்தளவு பிரைட்னஸ் இருப்பதால், கண்ணுக்கு அதிகளவு அழுத்தம் உண்டாகிறது. இது பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்றாலும், தலைவலியை ஏற்படுத்தும்.

முழுமையாக வைக்கலாமா...

மொபைலில் 50 சதவீதத்துக்கு அதிமான பிரைட்னஸ் வைக்கும் போது, தற்காலிக பிரச்சனைகளான கண் எரிச்சல், மங்களான பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சரியான அளவு எது?

மொபைல் அல்லது லேப்டாப்பின் பிரைட்னஸ், உங்களை சுற்றியுள்ள வெளிச்சத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். இது தான் கண்ணுக்கு தீங்கை ஏற்படுத்தாத சரியான அளவாகும்.

பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அளவு

குறைந்த பிரைட்னஸ் உங்கள் கண்ணுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் என நினைத்தால், காண்ட்ராஸ்டின் அளவை அதிகரித்துக்கொள்ளுங்கள். இது சமநிலையை உண்டாக்கும்.

இரவில் வேண்டாம்...

இரவு நேரத்தில் மொபைல் அல்லது லேப்டாப் திரையை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உறக்கத்திற்கான ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது.

லேப்டாப் அல்லது மொபைலை 20 நிமிடங்கள் பயன்படுத்துங்கள், பின் 20 வினாடிகள் நிறுத்திவிட்டு 20 அடி தூரத்தில் சுவரை பார்ப்பது கண்களுக்கு நல்லது .

Wednesday, 20 October 2021

‛பேஸ்புக்’ பெயர் மாறுகிறது- 28ஆம் திகதி வெளியாகிறது புதிய பெயர்..!!!

‛பேஸ்புக்’ பெயர் மாறுகிறது- 28ஆம் திகதி வெளியாகிறது புதிய பெயர்..!!!


சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்படவுள்ளதாக ‘தி வேர்ஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் சுக்கர்பெர்க், பெயர் மாற்றுவது குறித்த முடிவை ஆண்டு தொடர்பு மாநாட்டில் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு ஒக்டோபர் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஊகங்கள், வதந்திகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக்கின் வர்த்தக செயல்பாடுகளால் அமெரிக்க அரசு அதன் கெடுபிடிகளை அதிகரித்துள்ள நிலையில், பெயர் மாற்றுவது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

பேஸ்புக் பெயர் மாற்றப்படும் பட்சத்தில், மற்ற சமூக வலைதளம் போல் இதுவும் தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளை நிறுவனமாக மாறும். பேஸ்புக் தாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது இயங்கிவருன்றன.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் இயங்கிவரும் நிறுவனங்கள் பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் புதிதான ஒன்றல்ல. சேவைகளை விரிவுப்படுத்த நினைக்கும் போது பெயரை மாற்றிக் கொள்ளும். தேடல் இயந்திரம் மற்றும் விளம்பர வர்த்தகத்தை தாண்டி வணிகத்தை விரிவுப்படுத்த நினைத்த கூகுள், கடந்த 2015ஆம் ஆண்டு, ஆல்பாபெட் ஐ.என்.சி என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கியது.

ஒட்டோமொபைல் ஆலைகள், சுகாதார தொழில்நுட்பம், தொலைதூர இடங்களில் இணைய சேவை அளிப்பது உட்பட பல்வேறு நிறுவனங்கள் ஆல்பாபெட் ஐ.என்.சி கீழ் இயங்கிவருகிறது.

மெடாவெர்ஸ் என்ற மெய்நிகர் உலகை படைப்பதில் பேஸ்புக் நிறுவனம் கவனம் செலுத்திவருகிறது. இதற்கு மத்தியில், பேஸ்புக் நிறுவனம் பெயர் மாற்றவுள்ளது.

மெய்நிகர் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி ஆகியவற்றில் பேஸ்புக் அதிக முதலீடு செய்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று பில்லியன் பயனர்களை இந்த சாதனங்கள் மற்றும் செயலிகள் மூலம் இணைக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மெய்நிகர் உலகை படைக்கும் திட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.