Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

Sunday, January 29, 2023

முட்டை மீது யோகா: உலக சாதனை படைத்த சகோதரிகள்..!!!

முட்டை மீது யோகா: உலக சாதனை படைத்த சகோதரிகள்..!!!


விருதுநகர் மாவட்டம் சின்ன மூப்பன்பட்டியை சேர்ந்த சின்ன வைரவன் ரோகினி தம்பதியரின் குழந்தைகள் சுகானா (4) மற்றும் வைரலட்சுமி (7).

இவர்கள் விருதுநகர் ஹவ்வா பீவி நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி மற்றும் 2-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

யோகாவில் மிகுந்த விருப்பம் இருந்ததால் கடந்த ஒரு வருடமாக ஸ்ரீநாகா யோகா சென்டரில் திவ்ய பிரபா யோகா மாஸ்டரிடம் யோகா கற்று வருகின்றனர்.

யோகாசனம் மீதான ஆர்வத்தினால் சிறுவயதிலேயே யோகாவில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 6 மாதமாக இருவரும் முட்டைமேல் அமர்ந்து ஹனுமனாசனம், மற்றும் விபத்த பட்ஜிமோத்தாசனம் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை சாத்தூர் அருகிலுள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் சிறுமி சுகானா 120 முட்டை மேல் அமர்ந்து அனுமனாசனம் தொடர்ந்து 30 நிமிடம் செய்தார்.

மேலும் சிறுமி வைரலட்சுமி 30 முட்டை மேல் அமர்ந்து இரு கைகளிலும் தண்ணீர் டம்ளரை பிடித்துக்கொண்டு விபத்த பட்ஜி மோத்தாசனா யோகாவில் தொடர்ந்து 30 நிமிடம் செய்து காண்பித்து உலக சாதனை படைத்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சி.இ.ஒ.அரவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இதற்கான சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.


Wednesday, January 25, 2023

சிவனுக்கு காணிக்கையாக உயிருள்ள நண்டுகளை படைக்கும் பக்தர்கள்..!!!

சிவனுக்கு காணிக்கையாக உயிருள்ள நண்டுகளை படைக்கும் பக்தர்கள்..!!!


பெரும்பாலும் ஆலயங்களில் பணம், பொன், முடி, பழங்கள் என பல்வேறு விதமான பொருள்களை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துவர்.

ஆனால் குஜராத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் உயிருள்ள நண்டை காணிக்கையாக படைக்கும் வினோத நிகழ்வு இடம்பெறும்.

குஜராத்தில் உள்ள சூரத்தில் ராம்நாத் கெலா மகாதேவ் சிவன் ஆலயம் உள்ளது. வருடம் தோறும் இங்குள்ளள சிவலிங்கத்திற்கு உயிருள்ள நண்டுகளை காணிக்கையாக செலுத்த பக்தர்கள் குவிகின்றனர். அந்த அபூர்வ சம்பவம் வியக்கவைக்கும் விதமாக உள்ளது.


Tuesday, January 17, 2023

சென்னை வந்த சேகுவேராவின் மகள், பேத்திக்கு அமோக வரவேற்பு..!!!

சென்னை வந்த சேகுவேராவின் மகள், பேத்திக்கு அமோக வரவேற்பு..!!!


உலக அளவில் இன்று வரை அதிக மக்களால் கொண்டாட்டப்பட்டு வருபவர் புரட்சியாளர் எர்னெஸ்டோ சேகுவேரா. அர்ஜெண்டினாவில் பிறந்த இவர், கியூபாவில் ஏற்பட்ட புரட்சியின் முகமாக அறியப்படுகிறார். முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிரான கடும் போராட்டங்களை முன்னெடுத்த சேகுவேரா, கியூபாவின் தொழில்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

சேகுவேராவின் மறைவிற்குப் பிறகும், உலக நாடுகளில் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் அவரது கொள்கைகளும், கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவிலும் சேகுவேராவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இந்நிலையில் சேகுவேரா மகள் அலைடா குவேரா, பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த நிர்வாகி ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், சாமுவேல் ராஜ், மாவட்ட செயலாளர்கள் சுந்தரராஜன், வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சேகுவேராவின் மகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.







Friday, November 11, 2022

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது.

கடந்த 2000 ஆம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டால் 2014 ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது.

தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது. பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது.

குறிப்பாக 7 தமிழரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது கவர்னர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

பின்னர் பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட்டு தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர்.

இம்மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நளினி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட்டு தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது. அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம்அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Sunday, October 16, 2022

கோதுமை மா ஏற்றுமதிக்கு தடை..! இந்திய அரசாங்கம் அதிரடி

கோதுமை மா ஏற்றுமதிக்கு தடை..! இந்திய அரசாங்கம் அதிரடி


 கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா நேற்று முதல் தடை விதித்துள்ளது.

அத்துடன், இது தற்காலிக தடை மாத்திரமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும், நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ள மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்வனவிற்காக ஏற்கனவே கோரியுள்ள நாடுகளுக்கு மாத்திரம், கோதுமை மாவினை ஏற்றுமதி செய்யவதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Tuesday, October 4, 2022

ராஜராஜ சோழன் எந்த மதம் - தமிழகத்தில் வெடித்தது சர்ச்சை..!!!

ராஜராஜ சோழன் எந்த மதம் - தமிழகத்தில் வெடித்தது சர்ச்சை..!!!




ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பில் தமிழகத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.இது தொடர்பில் திரைக்கலைஞர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை விவாதங்களை நடத்தி வருகின்றனர்.

ராஜராஜ சோழன் இந்து இல்லையென சொல்பவர்கள் முட்டாள், காட்டுமிராண்டியாக இருப்பார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில் கூறுகையில், ராஜராஜ சோழன் இந்து இல்லை என்று சொல்பவன் முட்டாள்! நம்புகிறவன் காட்டுமிராண்டி! பரப்புவன் அயோக்கியன்! என தெரிவித்துள்ளார்.

ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிய கருத்துக்குத்தான் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் எதிர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். அந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில்,

திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கிறார்கள் என விமர்சித்திருந்தார்.இதற்கு வெற்றிமாறனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இதுகுறித்து எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சிவன் கோயில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறிஸ்தவரா இல்லை பௌத்தரா என்பதை அந்த தற்குறியே சொல்லட்டும் என வெற்றிமாறனை கடுமையாக விமர்சித்திருந்தார்.எனினும் நாம் தமிழர் கட்சியின் சீமான், வெற்றி மாறனுக்கு ஆதரவாக பேசியிருந்தார். அவர் கூறுகையில் ராஜராஜ சோழனை இந்து மன்னர் என கூறுவது எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

இது வள்ளுவருக்கு காவி பூசியது போல்தான். அந்த காலத்தில் நாடும் கிடையாது, மதமும் கிடையாது. அவர் சிவனை வழிபட்ட சைவ மரபினர் என்பது உலகிற்கே தெரியும் என தெரிவித்தார்.இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த இயக்குநர் பேரரசு கூறுகையில் ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் இஸ்லாமியரா, இல்லை கிறிஸ்தவரா.

ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்த போது இந்தியா மாகாணங்களாக பிரிந்து கிடந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என சொல்கிறார்கள்.இந்து மதம் ஒரு காலத்தில் சைவம், வைணவம் என பல மதங்களாக சிதறியிருந்தது.

அதை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஆங்கிலேயர் இந்து மதம் என ஒரு பெயர் வைத்தார்கள். நீங்கள் இந்துக்கள் இல்லை என்றால் ஏன் இந்துக்கள் குறித்து பேசுகறீர்கள். சாமி கும்புடுறவங்க மட்டும் இதைப் பற்றி பேசட்டும் என கடுமையாக பேரரசு விமர்சித்துள்ளார்.
தமிழர்களுக்கு தைரியம் இல்லை  - சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு..!!!

தமிழர்களுக்கு தைரியம் இல்லை - சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு..!!!




தமிழர்களுக்கு அறிவு உள்ளது, ஆனால், தைரியம் இல்லை

தமிழர்களுக்கு அறிவு இருப்பதாகவும், ஆனால், தைரியம் இல்லை எனவும் மதுரையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்து இருக்கிறார்.

மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமியின் 83 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.கருணாநிதி என்னிடம் திராவிடம் என்று கூறினார். அது சமஸ்கிருத மொழி என்று, உங்கள் பெயரிலும் 40% சமஸ்கிருதம் இருக்கிறது என்று கூறி ஒரு புத்தகத்தை விளக்கினேன். உதயசூரியன் என்ற உங்கள் கட்சியின் பெயரும் சமஸ்கிருதம் என்று தெரிவித்தேன். திராவிடம் என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடம் என்று பொருள்.

சேது சமுத்திர திட்டம் கொண்டு வர முயன்றபோது ராமர் யாரென்று கருணாநிதி என்னிடம் கேட்டார். மறுநாளே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரிடம் "கெட் வெல் சூன்" என்று கூறி ராமர் யார் என தெரிகிறதா என்று கேட்டேன்.இந்திய ,இராணுவத்தினரை கொலை செய்த விடுதலை புலிகளுக்கு இங்கே சிகிச்சை அளிக்க கூடாது என சொன்னேன். உதவினால் ஆட்சி கலைக்கப்படும் என்று எச்சரித்தேன். இரத்த ஆறு ஓடும் என்றார் கருணாநிதி. 1991 ல் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஒரு சைக்கிள் கூட எரியவில்லை. அடுத்த தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது திமுக.

கருணாநிதி தனது மகனுக்கு தமிழில் பெயர் வைக்காமல் ஸ்டாலின் என ரஷ்ய பெயரை வைத்துள்ளார். தமிழ் தாய்மொழி. இந்தியை கற்றுக்கொள்வதில் என்ன தவறு உள்ளது. கற்றுக்கொள்பவர்களை ஏன் தடுக்கிறீர்கள்? தமிழர்கள் அறிவு உள்ளவர்கள். ஆனால் தைரியம் இல்லாதவர்கள். எனவே புதிய தமிழர்களை உருவாக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Wednesday, September 21, 2022

கணவனை பிரிந்து காதலனுடன் செல்ல பெண் போட்ட நாடகம்: கர்ப்ப  ஸ்கேன் ரிப்போர்ட் மூலம் சிக்கிக்கொண்ட சம்பவம்..!!!

கணவனை பிரிந்து காதலனுடன் செல்ல பெண் போட்ட நாடகம்: கர்ப்ப ஸ்கேன் ரிப்போர்ட் மூலம் சிக்கிக்கொண்ட சம்பவம்..!!!

வைப்பகப்படம்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் செல்ல திட்டமிட்டு, திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்தது போல் ஸ்கேன் ரிப்போர்டில் திருத்தம் செய்தார். ஆனால் அதை கணவருக்கு அனுப்புவதற்கு பதில் டாக்டருக்கு அனுப்பியதால் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

தேனியை சேர்ந்த சுமார் 30 வயது பெண் ஒருவர் தனது கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்தது. திருமணத்துக்கு பிறகு அந்த பழக்கம் கள்ளக்காதலாக தொடர்ந்தது.

கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட நெருக்கத்தால், அந்த பெண் தனது கணவரை பிரிந்து செல்ல திட்டமிட்டார். ஆனால், தானாக செல்வதை விடவும், கணவர் மூலம் பிரச்சினையை உருவாக்கி பிரிந்து செல்ல நூதன முறையில் திட்டமிட்டார்.

இதற்காக அவர் திருமணத்துக்கு பிறகு கர்ப்பமாகி பரிசோதனைக்காக எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்தார். அப்போது ‘போட்டோ-ஷாப்’ மூலம் அதில், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்தது போல் கர்ப்ப காலத்தை திருத்தம் செய்ததாக கூறப்படுகிறது.

கண்டுபிடித்த டாக்டர்

போலியாக திருத்தப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை தனது கள்ளக்காதலனுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் அனுப்பி வைத்தார். அதை தனது கணவரின் செல்போன் எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் அனுப்பி வைத்து, திருமணத்துக்கு முன்பே தாங்கள் நெருங்கி பழகி கர்ப்பமாகி விட்டதாகவும், பிறந்த குழந்தைக்கு தான் தான் தந்தை என்று சித்தரித்து அனுப்புமாறு கூறியுள்ளார்.

ஆனால், அந்நபர் திருத்தம் செய்த ஸ்கேன் ரிப்போர்ட்டை கள்ளக்காதலியின் கணவருக்கு அனுப்பவில்லை. மாறாக ஸ்கேன் ரிப்போர்ட்டில் இருந்த டாக்டரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி விட்டார்.

டாக்டர் இதைப் பார்த்தவுடன், ஸ்கேன் ரிப்போர்ட் திருத்தப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து விட்டார். தனது பெயரில் உள்ள ரிப்போர்ட்டை திருத்தியதை அறிந்த அந்த டாக்டர் தேனி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து பொலிஸார் அந்த பெண்ணையும், அவருடைய கள்ளக்காதலனையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தவறுதலாக அனுப்பியதாக கூறி மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து 2 பேரையும் மன்னித்து, எச்சரித்து அனுப்புமாறு டாக்டர் கேட்டுக்கொண்டார். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Thursday, September 15, 2022

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனைக்கு இதுதான் காரணம்: அண்ணாமலை..!!!

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனைக்கு இதுதான் காரணம்: அண்ணாமலை..!!!




முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்வதற்கும் திமுக ஆட்சி மேல் மக்களின் அவநம்பிக்கையை திசை திருப்புவது ஒன்றே காரணம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருவதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

இதற்கு முன்னர் செய்த சோதனைக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலிருக்கும்போது புது சோதனைகளின் அடிப்படை நோக்கம் என்ன ? திமுக அமைச்சர்கள் மீது குவியும் ஊழல் புகார்களை இருட்டடிப்பு செய்ய அரசு இயந்திரங்களை ஏவல் இயந்திரங்களாக மாற்றி இருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு என்று அந்தப் பதிவுகளில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
வருமானவரி சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் - சீமான்..!!!

வருமானவரி சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் - சீமான்..!!!




எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரி சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என சீமான் கண்டனம்.

இது குறித்து அவர் அறிக்கையில் வாயிலாக கூறியதாவது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பாஜக அரசின் எதேச்சதிக்காரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தன்னாட்சி அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருவது நாட்டினை பேரழிவினை நோக்கி இட்டுச்செல்லவே வழிவகுக்கும்.

இதுபோன்ற அதிகார அத்துமீறல்களைத் தொடர்வதை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நிறுத்திக்கொள்வதோடு, அதலபாதாளத்திற்குப் போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும், அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாடத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்இல்லையேல், இலங்கையில் மக்கள் புரட்சியினால், அந்நாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசாங்கமும் எதிர்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Monday, August 1, 2022

குரங்கு அம்மையால் முதல் மரணம்..!!!

குரங்கு அம்மையால் முதல் மரணம்..!!!




 உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.

குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த நபர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா தெரிவித்துள்ளார்.

மேலும், குரங்கு அம்மை அறிகுறி இருந்த நபருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Wednesday, July 13, 2022

பார்ட்டியில் வெடித்த துப்பாக்கி

பார்ட்டியில் வெடித்த துப்பாக்கி


 உரகஸ்மன்ஹந்திய, கோரகீன பிரதேசத்தில் துப்பாக்கியொன்று இயங்கியதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்து நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளது.

கோரகீன பிரதேசத்தில் மூன்று பேர் இணைந்து விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த இடத்திற்கு வந்து நபர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பரிசோதித்த போது துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

கோரகீன, உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவ தொடர்பில் துப்பாக்கி மற்றும் துப்பாக்கியை கொண்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, May 31, 2022

குரங்கு அம்மை எதிரொலி- தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு..!!!

குரங்கு அம்மை எதிரொலி- தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு..!!!


குரங்கு அம்மை பரவியுள்ள நாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்கா , லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் இருந்து சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு அறிகுறிகள் உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட பயணி 21 நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தங்களுக்குட்பட்ட பகுதிகளை தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Monday, May 16, 2022

கோதுமை ஏற்றுமதிக்கு தடை

கோதுமை ஏற்றுமதிக்கு தடை

 


கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.


இதனால் உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் அதகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Sunday, May 15, 2022

டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் பலி: இருவர் கைது..!!!

டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் பலி: இருவர் கைது..!!!


இந்தியாவின் புது டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

பல வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த நான்கு மாடி கட்டட வளாகத்தில் நேற்று மாலை பற்றிய தீ அனைத்து தளங்களுக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை துணை தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலையும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன

40க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

வணிக வளாகத்தில் தீ பிடித்த நிலையில் தப்பிக்க நினைத்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தீ பரவிய வேளையில், கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்ததாகவும் அத்தளத்திலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவும் வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இக்கட்டடத்தில் இயங்கிய நிறுவனமொன்றின் உரிமையாளர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி கட்டடம் பாதுகாப்பு அனுமதியை பெற்றிருக்கவில்லை எனக் கூறும் பொலிஸார், கட்டடத்தின் உரிமையாளரை பொலிஸார் தேடி வருகின்றனர். இக்கட்டடத்தில் ஒரேயொரு படிகட்டு மாத்திரமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




Sunday, May 8, 2022

குழந்தைகளைக் குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்: கேரளத்தை மிரட்டும் புதுவைரஸ்; மருத்துவர்கள் கூறுவது என்ன?

குழந்தைகளைக் குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்: கேரளத்தை மிரட்டும் புதுவைரஸ்; மருத்துவர்கள் கூறுவது என்ன?


இந்திய கேரளா மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் என்னும் புதுவகையான வைரஸ் பரவிவருகிறது. குழந்தைகளை குறிவைக்கும் இந்த வைரஸால் த் சுமார் 86 குழந்தைகள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் சற்று தணிந்து மக்களின் இயல்பு வாழ்க்கைத் திரும்பியிருக்கும் நிலையில், கேரளத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் புதுவகையான வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் பரவலாகவே கை, கால்கள் வெளிரி போதல் அல்லது வெள்ளை நிறமாதல், உடல் முழுவதும் வலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்.

கேரளத்தின் நெடுவத்தூர், ஆரியங்காவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது, இது ‘தக்காளி காய்ச்சல்’ எனத் தெரியவந்துள்ளது.

கேரளா அரசு மருத்துவமனைகளில் தங்கியும், வெளிநோயாளிகளுமாக இதுவரை 86 குழந்தைகள் இந்த நோய்க்குச் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கேட்டபோது,


” தக்காளி வைரஸ் என்னும் வார்த்தைதான் புதிது. நம் தமிழகத்தில் கை,கால்,வாய் நோய் என்று இந்த வைரஸைச் சொல்வார்கள். வைரஸ் உடலில் நுழைந்து மூன்று முதல் ஆறு நாள்களுக்குள் அறிகுறிகள் தென்படும். காய்ச்சல், உடல் சோர்வு பிரதானமாக இருக்கும். இது சிறியவர்களையே பெரும்பாலும் தாக்கும். சின்ன, சின்னக் கொப்பளங்களும் ஏற்படலாம். அரிதிலும், அரிதாகவே நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்த பெரியவர்களைத் தாக்கும். அறிகுறி தென்பட்ட ஒரு வாரத்தில் குணமாகிவிடும். இதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை”என்கின்றனர்.

Saturday, May 7, 2022

பரோட்டா பார்சலில் பாம்பு தோல்..!!!

பரோட்டா பார்சலில் பாம்பு தோல்..!!!




கேரளாவின் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காட்டு எனும் பகுதியில் ஷாலிமார் என்ற ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலில் செல்லங்கோடு என்ற பகுதியில் வசிக்கும் பிரியா என்பவர் பரோட்டா உணவை பார்சல் வாங்கி சென்றுள்ளார். பிரியாவின் மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் நிலையில், இருவருக்கு அந்த ஹோட்டலில் பரோட்டா வாங்கிச் சென்றுள்ளனர். பிரியாவின் மகள் ஒரு பரோட்டா சாப்பிட்ட நிலையில், தானும் சாப்பிடலாம் என பிரியா பார்சிலில் இருந்து பரோட்டாவை எடுத்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் வாய் பரோட்டாவை உண்ணத் தொடங்கியதும், அந்த பரோட்டாவுக்குள் பாம்பின் தோல் இருந்ததை பார்த்து பதறிப்போய் உள்ளார். உடனடியாக உண்ட உணவை வாந்தி எடுத்த பிரியா, அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார். பொலிஸார் அவரை நகராட்சியில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடு அளிக்க கூறியுள்ளனர். இதை தொடர்ந்து பிரியா அளித்த முறைப்பாட்டின் பேரில், நெடுமங்காடு உணவு பாதுகாப்பு அலுவலர் அர்ஷிதா பஷீர் அந்த ஹோட்டலில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளார்.

இந்த ஆய்வுக்குப் பின் பேட்டியளித்த அலுவலர் அர்ஷிதா, முதல் கட்ட விசாரணையில் இந்த பாம்பின் தோலானது பார்சல் கட்டப்பட்ட செய்திதாளில் இருந்துள்ளது. பார்சல் கட்டியப் பின் அது எப்படியே பரோட்டாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. அந்த பாம்பின் தோல் அரை விரல் நீளமாகும். அந்த உணவு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அந்த ஹோட்டலை ஆய்வு செய்த போது, அதன் சமையல் அறையில் போதிய வெளிச்சம் இல்லை. உரிய சுகாதாரம் இல்லை. கழிவுகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. எனவே, ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உடனடியாக மூடப்பட்டுள்ளது என்றார்.

சில நாள்களுக்கு முன்னர், கேரளாவில் கெட்டுப்போன ஷவர்மா சாப்பிட்டதால் மாணவி ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து பல்வேறு ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்த பாம்பு தோல் விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, April 27, 2022

இந்தியாவில் தஞ்சை தேர் திருவிழாவில் விபத்து : 11 பேர் உயிரிழப்பு..!!!

இந்தியாவில் தஞ்சை தேர் திருவிழாவில் விபத்து : 11 பேர் உயிரிழப்பு..!!!


இந்தியா - தஞ்சையில் நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில், அப்பர் மடத்திற்கான கோயில் உள்ளது. இங்கு அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தின் போது சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். மூன்று நாட்கள் இவ்விழா தேரோட்டத்துடன் நடைபெறும். நள்ளிரவு தொடங்கி விடியும் வரை இவ்விழா நடைபெறும்.

அதன்படி 94ஆவது ஆண்டுக்கான திருவிழா நேற்று (ஏப்ரல் 26) காலை தொடங்கி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 10 அளவில் நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் அப்பர் உற்சவர் எழுந்தருளினார். அலங்கார விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின் பகுதியில் பெரிய ஜெனரேட்டரும் இணைக்கப்பட்டிருந்தது.

தேரில் சிறுவர்கள், பெரியவர்கள், பூசாரி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். நள்ளிரவிலும் உற்சாகமாகத் தேரை இழுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு வீடாகத் தேரை நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தேர் செல்ல செல்ல வழிநெடுகிலும் தண்ணீர் ஊற்றப்பட்டது.

இந்த ஊர்வலம் கிட்டத்தட்ட முடியும் தறுவாய்க்கு வந்தது. கடைசி வீட்டில் தேங்காய் உடைத்து வழிபட்டுவிட்டு திரும்பும் போது மின் விபத்து ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அப்பர் மடத்துக்குத் திரும்பும் போது தேர், சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கியிருக்கிறது. தேர் சாய்ந்த சமயத்தில் அதன் மேல் இருந்த உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசி தீப்பிடித்து எரியத் தொடங்கியது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

“கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. தேரை இழுத்தவர்கள் எல்லாம் சுருண்டு சுருண்டு விழுந்தனர். தேரில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அருகில் கூட எங்களால் செல்ல முடியவில்லை. காலை கீழே வைக்கும் போது எர்த் அடித்தது. மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அருகில் சென்று பார்த்தால் எல்லோரும் சுருண்டு விழுந்து கிடந்தனர். ஆர்வமாகத் தேருடன் வந்த சின்ன பசங்கள் எல்லாம் விழுந்து கிடந்தனர். பதற்றத்தில் எங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இரண்டு நிமிடத்தில் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டது. கண் முன்னே எல்லாம் துடி துடித்து விழுந்தனர். ஜெனரேட்டர் அருகே அமர்ந்திருந்தவர் தீயில் கருகிவிட்டார்” என்கின்றனர். இந்த விபத்துக்குச் சாலையின் உயரம் தான் காரணம் எனவும் களிமேடு பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோருக்குத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Sunday, April 24, 2022

மாலை முதல் சீரான மின் விநியோகம்..!!!

மாலை முதல் சீரான மின் விநியோகம்..!!!




முதல்வரின் சீரிய நடவடிக்கையால் நேற்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. முன்அறிவிப்பு இல்லாமல் ஏற்படும் இந்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மின்வெட்டு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்வெட்டு தொடர்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோா் பேரவையில் சிறப்பு கவன தீா்மானம் கொண்டு வந்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 796 மின்சாரம் 2 நாள்களுக்கு முன்பாக தடைபட்டது. இருப்பினும், மாநிலத்தின் 41 இடங்களில் மட்டுமே மின் தடை ஏற்பட்டது. நிலக்கரி பற்றாக்குறையைச் சமாளிக்க 4.80 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்காக நான்கு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையில் முதல்வரின் சீரிய நடவடிக்கையால் இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sunday, April 10, 2022

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

 


ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் நேற்று (9) மீட்கப் பட்டதோடு, போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரித்து வரும் ராமேஸ்வரம் பொலிஸார் மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலிருந்து கடல் அட்டைகள், மஞ்சள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன.இதனால் மத்திய, மாநில உளவுத்துறை பொலிஸார், கடலோர பாதுகாப்பு பொலிஸார், கடலோர காவல் படையினர் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று சனிக்கிழமை (9) போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக ராமேஸ்வரம் குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று சனிக்கிழமை மாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சிறப்பு குற்றப்பிரிவு பொலிஸார் மறைந்திருந்தனர்.

அப்போது தங்கச்சிமடம் பெட்டேல் நகரை சேர்ந்த பிரைட்வின் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் மீன் பிடிக்க செல்வது போல் மீனவர் ஒருவர் கை பை ஒன்றை படகில் ஏற்றிக் கொண்டு இருந்தார்.

இதனை கண்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் குறித்த பையில் ´கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்´ என அழைக்கப்படும் ஐஸ் போதைப்பொருள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து படகின் உரிமையாளர் பிரைட்வின் மற்றும் அக்காள் மடம் புயல் காப்பகம் பகுதியைச் சேர்ந்த டெஸ்மன் ஆகிய இருவரையும் கைது செய்த பொலிஸார் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முத்துப்பாண்டி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ´கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்´ என்ற ஐஸ் போதைப்பொருள் உண்மையானதா? என்பது குறித்து ராமநாதபுரத்தில் உள்ள தடவியல் பொலிஸார் ரசாயனம் மூலம் பரிசோதனை செய்து கிறிஸ்டல் மெத்தம் பீட்டபமைன் என்று உறுதிபடுத்தினர்.

ராமேஸ்வரம் பொலிஸாரால் கைபற்றப்பட்ட 957 கிராம் ஐஸ் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கடத்தல் போதைப்பொருள் பிடி பட்டதை அடுத்து கடலோர பகுதிகளிலும், இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.