Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Monday, November 29, 2021

யாழில். பாணின் விலை 10 ரூபாயால் அதிகரிப்பு - ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளில் மாற்றமில்லை..!!!

யாழில். பாணின் விலை 10 ரூபாயால் அதிகரிப்பு - ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளில் மாற்றமில்லை..!!!


யாழ்ப்பாண மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரித்து 85 ரூபா எனவும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்வது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோருடன் பாணின் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததன் காரணத்தால் 450g பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரித்து 85 ரூபா எனவும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை..!!!

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை..!!!


கொழும்பு மாவட்டம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

பிலியந்தலை, கல்கிசை, அதுருகிரிய, மொரட்டுவை, பதுளை, நுவரெலியா, மாத்தளை மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில்
மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

கொத்மலை மின் நிலையத்திலிருந்து பியகம உப மின் நிலையத்திற்கான உயர் அழுத்தக் கேபிள்கள் பழுதடைந்துள்ளன. மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த இளம் குடும்பஸ்தர்- குழந்தையுடன் உதவி கரம் கோரும் மனைவி - கிளிநொச்சியில் சம்பவம் ..!!!

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த இளம் குடும்பஸ்தர்- குழந்தையுடன் உதவி கரம் கோரும் மனைவி - கிளிநொச்சியில் சம்பவம் ..!!!


கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர், தனது 32 வயதிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், எண்ணற்ற கனவுகளோடு உயிர்வாழப் போராடிக்கொண்டு இருக்கின்றார்.

இந்நிலையில் குடும்பஸ்தரின் உயிரை காப்பதற்கு எவரேனும் தங்களுக்கு உதவுங்கள் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி- புதுமுறிப்பு பாடசாலை முன் வீதியைச் சேர்ந்த செபஸ்தியான்பிள்ளை தேவராசா, தேசிய அடையாள அட்டை இல 198912703797 என்பவரின் மனைவியே கருணையுள்ளம் கொண்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் 1 அரை வயது பூர்த்தியாகியுள்ள எனது பிள்ளைக்காகவேனும் உயிர் காக்க உதவுங்கள் என கோரியுள்ளார்.

குறித்த இளம் குடும்பஸ்தர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சத்திரசிகிச்சை செய்வதற்கு 45 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வங்கி கணக்கு இலக்கம்  048200390018363
தொலைபேசி இலக்கம்  0765335356 / 0774293115



மாதகலில் காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்..!!!

மாதகலில் காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்..!!!


யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று காலை நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.

அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தள்ளனர்.

தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Sunday, November 28, 2021

மாதகலில் நாளை காணி அளவீடு - போராட்டத்திற்கு அழைப்பு..!!!

மாதகலில் நாளை காணி அளவீடு - போராட்டத்திற்கு அழைப்பு..!!!


மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்காக காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணிகடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை 09 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை மாதகல் மேற்கில் 16 ஏக்கர் காணி அளவீட்டு பணிகள் காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த காணி அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை குறித்த காணிகளுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் , அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனவும் , தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் காணி உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.