
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய ஏழாம் திருவிழாவான கப்பல் திருவிழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பகல் திருவிழாவினைத் தொடர்ந்து இரவு விஷேட மேளக்கச்சேரிகள் இடம் பெற்று அதிகாலை வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி வீதியுலா வரும் போது வடக்கு வீதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கப்பலாட்டும் வைபவம் இடம் பெற்றது.
இதன்போது கப்பல் திருவிழாவின் கதைகள் வாசிக்கப்பட்டு பாடப்பட்டு கப்பலாட்டும் வைபவம் இடம்பெற்றது.
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயக் கப்பல் திருவிழாவில் தென்னிந்திய பிரபல பாடகி நித்யஸ்ரீ குழுவினரின் இசை நிகழ்வும் இடம்பெற்றது.
அந்நியர்கள் நாகர்கோயில் பகுதிக்கு வந்து இங்குள்ளவர்களைப் பிடித்து கப்பலில் ஏற்றிச்செல்ல முற்பட்டபோது நாகதம்பிரான் கப்பலைத் தடுத்து இவ்வூர் மக்களை மீட்டமை தொடர்பாகவே இக்கப்பல் திருவிழா நடைபெறுகிறது. கப்பல் திருவிழா தொடர்பாக பல்வேறு பட்ட கதைகள் காணப்படுகிறது.