Showing posts with label world news. Show all posts
Showing posts with label world news. Show all posts

Tuesday, August 9, 2022

ஒலிவியா நியூட்டன் ஜோன் காலமானார்..!!!

ஒலிவியா நியூட்டன் ஜோன் காலமானார்..!!!
பிரபல பாடகியும் நடிகையுமான ஒலிவியா நியூட்டன் ஜோன் காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (08) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1948 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பிறந்த ஒலிவியா நியூட்டன் இறக்கும் போது அவருக்கு வயது 73.

கிரேஸ் என்ற பிரபல திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார், அதில் அவர் செண்டி என்ற பாடசாலை மாணவியாக நடித்தார்

Friday, July 8, 2022

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு..!!!

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு..!!!


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் நெஞ்சில் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் NHK செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2006 - 2007 மற்றும் 2012 - 2020 வரை பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே. ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற இடத்தை பிடித்தவர்.

நரா என்ற பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thursday, June 30, 2022

சர்வாதிகாரியின் மகன் பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்பு

சர்வாதிகாரியின் மகன் பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்பு

 


பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் 17வது அதிபராக வியாழன் அன்று பதவியேற்றார்.


பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 9ம் திகதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் பாங் மார்கோஸ் என்று அழைக்கப்படும் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றி பெற்றார்.

இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் சர்வாதிகாரியாக இருந்து ஆட்சி செய்த பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியரின் மகன் ஆவார்.

மக்கள் எழுச்சியில் அவரது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை அவரது மகன் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, June 12, 2022

3.50 கோடி சம்பளம் வேண்டாம் - ராஜினாமா செய்த இளைஞன்..!!!

3.50 கோடி சம்பளம் வேண்டாம் - ராஜினாமா செய்த இளைஞன்..!!!


சீனாவைச் சேர்ந்த மைக்கேல் லின் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நெட்பிளிக்ஸில் மூத்த சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு இந்திய மதிப்பில் ரூ.3.50 கோடி ஆண்டு வருமானம். இவர் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

இதுகுறித்து அவர் தனது லிங்கடின் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அந்த வேலையிலிருந்து விலகிவிட்டேன். இலவசமாக உணவு, அளவுக்கு அதிகமான ஊதியம், ஓய்வு நேரம், பெரிய நிறுவனம் என எனக்குக் கிடைத்தது. இருப்பினும் எனக்கு இந்த வேலை போர் அடித்ததால் விலகி விட்டேன்.

நான் வேலையிலிருந்து விலகப்போகிறேன் என்றவுடன் என் பெற்றோர், எனது வழிகாட்ட ஆகியோர் எதிர்த்தனர். அடுத்த பணியை உறுதி செய்யாமல் வேலையிலிருந்து ராஜினாமா செய்யாதீர்கள். அடுத்த வேலைக்கான ஊதியத்தை உறுதி செய்தபின் செல்லுங்கள் என்றனர்.

ஆனாலும் எனக்கு பிடிக்காததால் வேலையை விட்டுவிட்டேன் ஆரம்ப காலகட்டத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். இருப்பினும் சாஃப்ட்வேர் எஞ்சினியர் வேலை என்பது ஒரே மாதிரி வேலைகளை தொடர்ந்து செய்வதுதான்.

கொரோனாவுக்கு பின் ஊரடங்கில் உடன் பணிப்புரிபவர்களுடன் பழக வாய்ப்பில்லாமல் போனது. அதனால் வேலை அலுத்துவிட்டது இவ்வாறு மைக்கேல் லின் தெரிவித்துள்ளார். மைக்கேல் லின் நெட்பிளிக்ஸில் பணிப்புரிவதற்கு முன் அமேசானில் பணிபுரிந்து வந்தார்.

Saturday, June 11, 2022

கொவிட் பரிசோதனை இனி இல்லை - அமெரிக்கா அறிவிப்பு..!!!

கொவிட் பரிசோதனை இனி இல்லை - அமெரிக்கா அறிவிப்பு..!!!
கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அமெரிக்கா அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் அமுலாகும் வகையில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, வேறு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு கொவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கொவிட் வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம் காரணமாக கொவிட் 19 கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் செயற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.