Thursday, October 14, 2021

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை..!!!

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை..!!!




தனியார் பேருந்து துறையை மீண்டும் ஊக்கப்படுத்துவதற்காக சலுகை பெக்கேஜ் ஒன்றை வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சலுகை பெக்கேஜ் ஒன்றை வழங்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பேருந்து தொழிற்துறை சார்ந்த 6 தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைப்பு..!!!

விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைப்பு..!!!




நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடாபாடுவ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பேரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

46, 40 மற்றும் 21 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைக்குண்டு ஒன்றுடன் பெண் ஒருவர் கைது..!!!

கைக்குண்டு ஒன்றுடன் பெண் ஒருவர் கைது..!!!




மீகஹவத்த, தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகஹவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குண்டசாலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல பிரதேசங்களில் இன்று சீரான வானிலை..!!!

பல பிரதேசங்களில் இன்று சீரான வானிலை..!!!


சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை

கொழும்பு - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்

காலி - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

கண்டி - அடிக்கடி மழை பெய்யும்

நுவரெலியா - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்

இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்

திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை

மன்னார் - பிரதானமாக சீரான வானிலை
இன்றைய ராசிபலன் - 14.10.2021..!!!

இன்றைய ராசிபலன் - 14.10.2021..!!!


மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெரும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வேற்று மதத்தவர் உதவுவார். வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் நடந்து கொள்வீர்கள். நல்லன நடக்கும் நாள்.

கன்னி

கன்னி: புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்

துலாம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு

தனுசு: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

மீனம்

மீனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
நோர்வேயில் அம்பு , வில் தாக்குதல் :  5 பேர் பலி, 2 பேர் காயம் ..!!!

நோர்வேயில் அம்பு , வில் தாக்குதல் : 5 பேர் பலி, 2 பேர் காயம் ..!!!


அம்பு மற்றும் வில் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொன்ங்ஸ்பேர்க் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


பால்மா தொடர்பில் வெளியிடப்பட்ட மற்றுமொரு புதிய செய்தி..!!!

பால்மா தொடர்பில் வெளியிடப்பட்ட மற்றுமொரு புதிய செய்தி..!!!


வார இறுதியில் தட்டுப்பாடின்றி நுகர்வோர் பால்மாவினை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பால்மா வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மேலும் 8000 தொன் பால் மாவுக்கான தட்டுப்பாடு தற்போது சந்தையில் நிலவுவதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தினங்களில் ஒரே தடவையில் பெருமளவு பால்மாவை சந்தைக்கு விநியோகிக்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேலும் 8 கொள்கலன் பால்மா விடுவிக்கப்படுவதற்காக துறைமுகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.