Thursday, November 25, 2021

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மனோ கணேசன்..!!!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மனோ கணேசன்..!!!


கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றினால் சுகவீனமுற்று கடந்த சுமார் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பூரண சுகம் பெற்ற நிலையில் நேற்று (24) வீடு திரும்பினார்.

ஊடகங்களுக்கு இது பற்றி கருத்து கூறிய பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், “சுகவீனமுற்ற வேளையில் எனக்கு ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு, அன்பையும், நம்பிக்கையையும் நேரடியாகவும், ஊடகங்கள், தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் தெரிவித்த கட்சி, கூட்டணி, நண்பர்கள், ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.
பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு..!!!

பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு..!!!




நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் (23) இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 18 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளதன் காரணமாக நேற்று மாலை பாவற்குளத்தின் 2 வான் கதவுகள் ஒரு அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாவற்குளத்தின் கீழ் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும், இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற சவாலை எதிர்கொள்வதற்காக நீர்பாசனத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளார்கள்.

அத்துடன் மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள முகத்தான்குளம் மற்றும் மருதமடுகுளம் ஆகியனவும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. எனவே அதன் கீழ் உள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையை அச்சுறுத்தும் எலிக் காய்ச்சல் - 5,275 நோயாளிகள்..!!!

இலங்கையை அச்சுறுத்தும் எலிக் காய்ச்சல் - 5,275 நோயாளிகள்..!!!




2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை நாட்டில் 5,275 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த காலப் பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை 706 ஆகும். மேலும் காலி மாவட்டத்தில் 643 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 600 பேரும், கேகாலை மாவட்டத்தில் 418 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை, எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 4.

2020 ஆம் ஆண்டில் 8,579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய வர்த்தமானி அறிவிப்பு வௌியீடு..!!!

புதிய வர்த்தமானி அறிவிப்பு வௌியீடு..!!!





ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் வர்த்தமானி அறிவித்தலாக வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இனிமேல் ஜனாதிபதி சட்டத்தரணியை நியமிக்கும் போது குறித்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
யானை தாக்கியதில் ஒருவர் பலி..!!!

யானை தாக்கியதில் ஒருவர் பலி..!!!




முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (24) இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ள இவர் திரும்பி வராத நிலையில் இவரைத்தேடி அதிகாலை 2 மணிக்கு உறவினர்கள் சென்றவேளை காட்டுபகுதியில் இறந்து கிடந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கெருடமடு, மன்னகண்டலை சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என்பவராவார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை..!!!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை..!!!


இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - அவ்வப்போது மழை பெய்யும்

மட்டக்களப்பு - அவ்வப்போது மழை பெய்யும்

கொழும்பு - அவ்வப்போது மழை பெய்யும்

காலி - அவ்வப்போது மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி - அவ்வப்போது மழை பெய்யும்

திருகோணமலை - அவ்வப்போது மழை பெய்யும்

மன்னார் - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
இன்றைய ராசிபலன் - 25.11.2021..!!!

இன்றைய ராசிபலன் - 25.11.2021..!!!



மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரங்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களைச் சீண்டிப் பார்ப்பார்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.

துலாம்

துலாம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உற்சாகமான நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல்நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்

மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.