Saturday, May 14, 2022

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை..!!!

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை..!!!




கொழும்பு, ஹைலெவல் வீதியின் போக்குவரத்து நாவின்ன பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அரிசி விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..!!!

அரிசி விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..!!!




அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் தனி உரிமையாளராக இருந்தால் 100,000 ரூபா முதல் 500,000 ரூபா வரையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் தனியார் நிறுவனம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அவர்களுக்கு 500,000 ரூபா முதல் அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அடித்துப் படுகொலை : பாதுகாப்பு அதிகாரியின் மரணமும் கொலை - வெளியானது முக்கிய தகவல்கள்..!!!

பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அடித்துப் படுகொலை : பாதுகாப்பு அதிகாரியின் மரணமும் கொலை - வெளியானது முக்கிய தகவல்கள்..!!!


மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அமர கீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களிடையே சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கடந்த 9 ஆம் திகதி மாலை சம்பவம் இடம்பெற்றதும் தகவல்கள் வெளியான போதும், பிரேத பரிசோதனை அறிக்கை பிரகாரம், கடுமையாக தாக்கப்பட்டமையால் எலும்புகள் சிதைவடைந்து உள்ளக இரத்தக் கசிவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்தனகல்ல ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ரொமேஷ் அழகியவண்ண முன்னெடுத்த பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினரின் சடலத்துக்கு அருகே இருந்து சடலமாக மீட்கப்பட்ட அவரது மெய்ப்பாதுகாவலரான அஹங்கம விதானகே ஜயந்த குணரத்ன எனும் பொலிஸ் சார்ஜன்ட்டின் மரணமும் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனையூடாக தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதும் சட்ட வைத்திய அதிகாரி ரொமேஷ் அழகியவண்ண பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார்.



பொலிஸ் சார்ஜன்ட்டின் சடலத்தில் துப்பாக்கிச் சூட்டு காயம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் பல காயங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி குண்டு அவரின் மார்பு வழியே நுரையீரலை துளைத்துக்கொண்டு உடலின் மறுபக்கமாக வெளியேறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன் அந்த காயமும், தலையில் பலமாக தாக்கப்பட்டமையால் மண்டை ஓடு வெடித்து மூலைக்குள் இரத்தம் கசிந்தமையும் அவரது மரணத்துக்கு காரணம் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்த விசாரணைகள் நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டி.பி. அபேரத்னவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில், கடந்த 9 ஆம் திகதி அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பொலன்னறுவை நோக்கி வாகனத்தில் சென்றுள்ளார்.

இதன்போது அவரது வாகனம் நிட்டம்புவையில், கொழும்பு - கண்டி வீதியை மறித்து பொது மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கியுள்ளது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினரைத் தாக்க முயலவே, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக அறிய முடிகிறது.

இதனால் மூன்று பொது மக்கள் துப்பாக்கிச் சூட்டு காயத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் அதில் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டையடுத்து நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கிருந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஆவேசமடைந்துள்ளனர்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரும் அவரது சாரதியும், நிட்டம்புவ நகரிலுள்ள ஆடையகமொன்றினுள் ஓடி ஒளிந்துள்ளனர்.

எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தொடர்ச்சியாக விரட்டி சென்றுள்ள நிலையில், அவரது சடலமும் அவரது மெய் பாதுகாவலரின் சடலமும் பின்னர் மீட்கப்பட்டது.

இந் நிலையிலேயே முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவை இரண்டும் கடுமையான தாக்குதல்களால் நிகழ்ந்த மரணங்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


12 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்வு..!!!

12 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்வு..!!!


நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் இன்று மாலை 6 மணிக்கு அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க பிரதமரின் அதிரடி நடவடிக்கை ! சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல்..!!!

பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க பிரதமரின் அதிரடி நடவடிக்கை ! சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல்..!!!


இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச ஒத்துழைப்பு பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இது குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட பன்னாட்டு தூதுவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார்.

அத்தோடு பிரித்தானிய உயர்ஸ்தானிகருடனும் இது தொடர்பில் தொலைபேசியில் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தார்.

இதன்போது ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்வதே பிரதமர் என்ற ரீதியில் தனது ஒரே நோக்கம் என்று கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சீன தூதவர் யி சியான்லியாங் ஆகிய இராஜதந்திரிகளுடன் தீர்க்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தியா

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடனான சந்திப்பின் போது, பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது இலங்கைக்கு தொடர்ந்தும் இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.



ஜப்பான்

இதே வேளை பிரதமருடனான சந்திப்பின் போது , இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக ஜப்பான் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார். அத்தோடு இலங்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டோக்கி செல்லவுள்ளதாகவும் இதன் போது ஜப்பான் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காக ஏனைய வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரு தூதுவர்களும் கலந்துரையாடினர்.

அமெரிக்கா

அமெரிக்காவின் திறைசேறி திணைக்கள குழுவொன்று இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமெரிக்க தூதுவரிடம் கேட்டறிந்து கொண்டார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பாராளுமன்ற கண்காணிப்பு குழுவை பலப்படுத்தல் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

சீனா

பிரதமரை சந்தித்த சீன தூதுவர் இலங்கைக் தொடர்ந்தும் உதவுவதற்காக சீனாவின் விருப்பத்தை உறுதிப்படுத்தினார். அத்தோடு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

பிரித்தானியா

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அந்நாட்டுக்குச் செல்ல முன்னர் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடன் தொலைபேசியில் உரையாடினார், அவர் இலங்கையின் நிலைமைகள் குறித்து பிரித்தானிய அரசாங்கத்திற்கு விளக்கமளிப்பதாகக் கூறினார்.

முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பு

இதே வேளை முன்னாள் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர மற்றும் சுசில் பிரேமஸயந்த உள்ளிட்டோருனும் எரிபொருள் மற்றும் வலுசக்தி தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன் போது எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு மற்றும் மக்களின் சுமைகளை குறைத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இன்றைய மின்வெட்டு குறித்த விபரம்..!!!

இன்றைய மின்வெட்டு குறித்த விபரம்..!!!






இன்று(14) மின்வெட்டை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.





இன்றைய ராசிபலன் - 14.05.2022 ..!!!

இன்றைய ராசிபலன் - 14.05.2022 ..!!!


மேஷம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்திலுள்ள வர்வளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக் கட்டும். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெரு கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர் புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்ப்பு கள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: துணிச்சலாக சில முக்கியமுடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன் பிறந்தவர் கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளை கள் பிரச்னைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச் சினை அவ்வப்போது மனசை வாட் டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண் டாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்

மகரம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசு வதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர திகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோ கத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தெரியாத சின்ன சின்ன கவலை கள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத் தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.