Wednesday, November 23, 2022

யாழில் போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட மூவர் கைது..!!!

யாழில் போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட மூவர் கைது..!!!



யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸாரினால் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது, 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் 18 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

அதன் அடிப்படையில் மல்லாகம் சென்ற பொலிஸார், 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!



இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 371.8325 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24.11.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.



புத்தாண்டு 2023 ராசிபலன்! குறி வைக்கும் சனியால் 4 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..!!!

புத்தாண்டு 2023 ராசிபலன்! குறி வைக்கும் சனியால் 4 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..!!!


புதிய ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்கள் மாத்திரமே உள்ளது.

பிறக்க போகும் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருப்போம்.

ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

புத்தாண்டு 2023 ராசிபலன்

ரிஷபம்

புத்தாண்டு உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். சனிபகவானின் சிறப்பு ஆசீர்வாதங்களினால் ஆண்டின் நடுப்பகுதியில் நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத ஒரு மிகப்பெரிய சொத்தை வாங்குவீர்கள். புதிய வருடத்தில் தொட்டதெல்லாம் துலங்கும். நல்ல செய்திகள் தேடி வரும்.

மிதுனம்

2023ஆம் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். இந்த ஆண்டு உங்கள் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

துலாம்

புத்தாண்டில் உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். சனி பகவானின் ஆசீர்வாதம் இருக்கும் என்பதால், பல பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

விருச்சிகம்


உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தினுள் உள் நுழையத் தடை விதிப்பு..!!!

கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தினுள் உள் நுழையத் தடை விதிப்பு..!!!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு, கலாசாலை வீதியில் கடந்த 21 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும், புது முக மாணவர்களுக்குமிடையில் கைகலப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சம்பவத்தின் போது சிரேஷ்ட மாணவர்களால் புதுமுக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பல்கலைக்கழக நடைமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்ற ஆரம்ப கட்ட விசாரணைகளில் சம்பந்தப்பட்ட மூன்று சிரேஷ்ட மாணவர்களுக்கும், ஒரு புது முக மாணவனுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், சுதந்திரமான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அடையாளம் காணப்பட்ட நான்கு மாணவர்களையும் மறுஅறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளினுள்ளும் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுவதுடன், கல்வி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.
யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு..!!!

யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு..!!!


யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஒஸ்மோனியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக ஒரு கோடி ரூபாய் பெண்ணொருவர் மோசடி..!!!

யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக ஒரு கோடி ரூபாய் பெண்ணொருவர் மோசடி..!!!


கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம் பெற்றுக்கொண்டதாகவும் , 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையில் எம்மை வெளிநாடு அனுப்புவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை,

அந்நிலையில் அவரிடம் நாம் பணத்தினை மீள கேட்ட போது , கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு தான் பணத்தினை செலுத்தி விட்டதாகவும் , தற்போது அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் எம்மிடம் தெரிவிக்கின்றார்.

நாம் கொடுத்த பணத்தினை அவரிடமிருந்து மீள பெற்று தர வேண்டும் என கோரியே பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் முறைப்படு செய்துள்ளனர்.

சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்ச ரூபாயும் , மற்றையவர் 44 இலட்சத்து 35ஆயிரம் ரூபாயும் அப்பெண்ணிடம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!




யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் - 23.11.2022
24 கரட் - 173,500/=
22 கரட் - 159,500/=