Monday, January 23, 2023

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை..!!!

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை..!!!நாடளாவிய ரீதியில் இன்று (ஜன 23) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இன்றைய ராசிபலன் - 23.01.2023 ..!!!

இன்றைய ராசிபலன் - 23.01.2023 ..!!!மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

துலாம்

துலாம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு

தனுசு: இதுவரை இருந்த கோபம், டென்ஷன் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. நன்மை நடக்கும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் பிரச்சினைகள் வரக்கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியைபைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

Sunday, January 22, 2023

இன்றைய ராசிபலன் - 22.01.2023 ..!!!

இன்றைய ராசிபலன் - 22.01.2023 ..!!!


மேஷம்: எதையும் தாங்கும் மனோ பலமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்‌. பாதியில் நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவிவழியில் அணுகூலமுண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ‌வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

துலாம்

துலாம்: பழைய நினைவுகளின் இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ‌ தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்‌. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியும் கூடும் நாள்.

தனுசு

தனுசு: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாருக்கும் பணம் நகைவாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். ‌ யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

Saturday, January 21, 2023

ஜனநாயக சர்வாதிகாரி ரணில்..!!!

ஜனநாயக சர்வாதிகாரி ரணில்..!!!


ரணிலுக்கு இந்தத் தேர்தல் நடந்தாலும் ஒன்று.. நடக்காவிட்டாலும் ஒன்று..

போனவாரம் புத்தளம் கூட்டுறவுச் சங்க தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இட்ட அணி..
இப்போது தேர்தல் நடந்தால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மண் கவ்வும்.. அதன் பின்னர் எதற்கும் தன்னை நம்பியே அவர்கள் இருக்க வேண்டும் என்பது ரணிலின் கணிப்பு...

இந்த தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தவோ அல்லது வேட்புமனுத் தாக்கல் செய்யும் எந்த இடத்திலோ பெசிலை காணமுடியவில்லை. அக்கட்சியின் பொறுப்புகளை நாமல் கவனிக்கிறார். தேசிய அமைப்பாளர் பதவியை நாமலுக்கு வழங்குவதாக முன்னர் சொல்லப்பட்டாலும் அதனை பெசில் வைத்திருப்பது அக்கட்சிக்குள் பூகம்பமாக வெடிக்க தகித்துக் கொண்டிருக்கிறது.

மறுபக்கம் விமல் , கம்மன்பில , சரத் வீரசேகர உட்பட சிங்கள இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்று தெரிந்தும் மாகாண சபைகளுக்கு காணி , பொலிஸ் அதிகாரங்களை வழங்குகிறேன் என்று ரணில் நேற்று கூறியிருப்பதன்மூலம் , சிங்கள தேசியவாதிகளை மெதுவாக ராஜபக்ச தரப்பிலிருந்து வெளியேற்றுகிறார் விக்கிரமசிங்க..

எலெக்சன் வருமாயின் இந்த விடயத்தை வைத்தே ஓட்டுக்களை அள்ளுவார்கள் விமல் அணி.. சிங்கள மக்கள் இந்த இனவாத பேச்சுகளுக்கு இனியும் எடுபடமாட்டார்கள் என்று கருதிவிட முடியாது..

13 ப்ளஸ் தருவேன் என்று ஏற்கனவே கூறியிருக்கும் மஹிந்த ராஜபக்ஸவாலும், மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்காதீர்கள் என்று கூற முடியாத இக்கட்டு.

சர்வதேச நாணய நிதிய கடனைப் பெறவேண்டும் என்பதால் இந்தியா சொல்லும்படி , 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் என்று கூறி இந்தியாவின் நல்லெண்ணத்தைப் பெற்று மறுபக்கம் சிங்கள தேசியவாதிகளின் ஆதரவைப் பெறமுடியாதபடி பெரும் கிடங்கை வெட்டி அதில் பொதுஜன பெரமுனவை தள்ளியுள்ளார் ரணில்..

13 ஆவது திருத்தம் கொஞ்சம் கொஞ்சம் அமுலுக்கு வருமாயின் , தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை வைத்துக்கொண்டு இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லலாம் விக்கிரமசிங்க.. சிங்கள வாக்குகள் சிதறிப்போயிருப்பதால் இனி வரும் தேர்தல்களில் தமிழ் , முஸ்லிம் ஆதரவு இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் வெல்வது கடினம் என்று கணக்குப் போடுகிறார் ரணில்...

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ரணிலுக்கு கவலையே இல்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரதி உயர்நீதிமன்றுக்கு வரும் வாரம் செல்கிறது. தேர்தலுக்கு நிதியில்லை என்பதால் மீண்டும் நாடு பின்னோக்கிச் செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாமென மறைமுகமாக திறைசேரி உயர்நீதிமன்றுக்கு செய்தியை சொல்லியிருக்கிறது.

நாட்டின் பக்கம் நின்று பார்த்தால் தேர்தலை ஒத்திவைப்பதே நீதிமன்று முன்னுள்ள தெரிவு. மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி, வரிசை , போராட்டம் , ஆர்ப்பாட்டமென வந்துவிடும் என்ற அச்சத்தை ஊட்டும் வேலைகளை அரசு லாவகமாக செய்வதால் மன்றுக்கு இதைத் தவிர வேறு ஒப்ஷன் இல்லை.

ஆனால் அரசின் நியாயங்களை கடாசித்தள்ளி , நீதிமன்று தேர்தல் நடத்த இடமளிக்கும் என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.

1982 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையே நடத்தாமல் சர்வசன வாக்கெடுப்பில் பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடித்த மாமனார் ஜே .ஆரின் மருமகன் ரணில் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறாரோ?

வரும் கிழமை , ரணில் விபூதி அடிப்பாரா? அல்லது உயர்நீதிமன்றம் ரணிலுக்கு கொட்டு வைக்குமா என்பது தெரிந்துவிடும்..

Siva Ramasamy
குடும்பத்தலைவரை துரத்திச் சென்று கொன்ற கும்பல்; கோப்பாயில் பயங்கரம்..!!!

குடும்பத்தலைவரை துரத்திச் சென்று கொன்ற கும்பல்; கோப்பாயில் பயங்கரம்..!!!கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தார்.

கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்)  நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் கூறினர்.

ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என அழைக்கப்படுவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

கோப்பாய் இராசபாதையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

முகமூடியணைந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பத்தலைவரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்து தப்பித்தனர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் அந்தோனியாரின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு..!!!

மட்டக்களப்பில் அந்தோனியாரின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு..!!!மட்டக்களப்பு கூலாவடி சந்தியில் உள்ள அந்தோனியார் சொரூபத்தில் இருந்தின் கண்ணில் இருந்து கண்ணீர் வடியும் அதிசயச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சொரூபத்தின் ஒரு கண்ணில் மாத்திரம் இருந்து கண்ணீர் வடியும் அதிசயத்தைக் காண மக்கள் திரண்டு இருந்தனர்.

நேற்று இரவு எட்டு மணி அளவில் இந்த அதிசயச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல்.இந்த சொரூபத்துற்கு அருகாமையில் வீட்டில் இருக்கும் நபர் மாலை மற்றும் விளக்குகளை ஏற்றுவது வழமை. ஏற்றிய பின்னர் இவர் வணங்கி விட்டு செல்லும் போது, அந்தோனியாரின் கண்களை அவதானித்தபோது அதிலிருந்து நீர் வரும் அதிசயத்தை கண்டு வணங்கியுள்ளார்.

இதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கும் இவ்விடயம் தெரியவந்ததை அடுத்து அதிசயத்தை காண மக்கள் திரண்டு இருந்தனர்.அந்தோனியாரின் வலது கண்ணில் இருந்து நீர் கசிகின்ற அதிசயத்தை காண மக்கள் இன்றும் அப்பகுதிக்கு சென்று வருவதை காணக் கூடியதாக உள்ளது.