Wednesday, 7 June 2023

கஜேந்திரகுமார் எம்.பி கைது..!!!

கஜேந்திரகுமார் எம்.பி கைது..!!!


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாக நிலையிலேயே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றினால் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.

பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையானால் வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்படும் என்றும் மன்று சுட்டிக்காட்டி இந்தக் கட்டளையை நேற்று வழங்கியது.

இதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய ராசிபலன் - 07.06.2023..!!!

இன்றைய ராசிபலன் - 07.06.2023..!!!


மேஷ ராசி அன்பர்களே!

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்ததைவிடவும் குறைவாகத்தான் இருக்கும். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.


ரிஷப ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். நண்பர்களின் மூலம் சில பிரச்னைகளும், வீண்செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.


மிதுன ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என் பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசி யம். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படவும். வியாபாரத் தில் கொடுக்கல் வாங்கலில் சிறுசிறு வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. துர்கையை வழிபடு வதன் மூலம் சிரமங்கள் குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சொற்களில் கவனம் தேவை.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.



கடக ராசி அன்பர்களே!

தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்கு வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதால் உடல் அசதி உண்டாகும். வியாபாரத்தில் பிற்பகலுக்குமேல் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.


சிம்ம ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். சகோதரர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில ருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தா பம் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக் கச் செய்யும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் தர்மசங்கட மான நிலைமை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எப்போதும்போல் நடைபெறும். இன்று சிவபெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.



துலா ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.



விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது அவசியம். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். துர்கையை வழிபட தடைகள் விலகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.



தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களை சந்தித்துப் பேசுவீர்கள். வியாபாரத்தில் முக்கியமான பிரமுகர் ஒருவரின் அறிமுகமும், அவர் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உள்ளது. ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.



மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை முழு ஒத்துழைப்பு தருவார். தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் சற்று கவனம் தேவைப்படும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் வீண் அலைச்சலுடன், சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணுவை வழிபட வீண் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.



கும்பராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியானாலும் சாதகமாக முடியும். வியாபாரத் தில் விற்பனை அமோகமாக நடைபெறு வதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். இன்று நீங்கள் அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.


மீன ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பிரச்னைகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் காரியத்தடைகள் விலகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

Tuesday, 6 June 2023

சனி பகவானுக்கு இந்த 5 ராசிக்காரர்கள் என்றால் கொள்ளைப் ப்ரியமாம்: எந்தெந்த ராசிகள் தெரியுமா?

சனி பகவானுக்கு இந்த 5 ராசிக்காரர்கள் என்றால் கொள்ளைப் ப்ரியமாம்: எந்தெந்த ராசிகள் தெரியுமா?


நவக்கிரக வழிபாட்டில் சனி பகவானுக்கு முக்கிய இடமும் அதிக சக்தியும் உண்டு. அது போல மனிதனின் வாழ்க்கையில் சனி பகவானின் பங்கு அதிகம் இருக்கிறது.

சனி பகவான் கர்மா மற்றும் நீதியின் கடவுளாக இருப்பவர்.

கர்ம பலன்களை அருளும் சனி பகவான், நல்ல செயல் செய்பவர்களுக்கு நல்ல பலனையும், தீய செயல்களை செய்பவர்களுக்கு தீய பலனையும் தருகிறார்.

பொதுவாகவே சனி என்றால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி என எமக்கு கஷ்டத்தை கொடுப்பவர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் சனி பகவானுக்கு பிடித்த ராசிக்காரர்களுக்கு அளவாகவே சோதனைகளைக் கொடுப்பாராம்.

அப்படி அவருக்கு பிடித்தமான ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

ரிஷபம்

ரிஷபம் அன்பின் கிரகமான சுக்ரனால் ஆளப்படுகிறார்கள். இதில் சுக்ரனும், சனிபகவானும் நட்பு கிரகங்கள் என்பதால் சனி பகவான் இவர்களுக்கு ஆதரவாகவும் சாதகமான பலன்களையும் தான் கொடுப்பார். சுக்கிரன் மற்றும் சனி பகவான் ஆசீர்வாதத்துடன் இணைந்து, ரிஷப ராசிக்காரர்கள் விரைவில் வாழ்க்கையில் உச்சம் பெறுவார்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிகபட்ச வெற்றி, செழிப்பு, புகழ், மகிழ்ச்சியைப் பெறுவார்கள்.

கடகம்

சனி ஆதிக்கத்தில் இருக்கும்போது கலை, எழுத்து, பத்திரிகை மற்றும் அரசு வேலைகள் போன்ற படைப்புத் துறைகளில் மகத்தான வெற்றி, மரியாதை மற்றும் செல்வத்தைப் பெறுவார்கள். குடும்பம் இவர்களை நன்றாக ஆதரிப்பார்கள். இவர்களின் பண்பானது மகத்தான வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் வாழ்க்கையில் தொல்லைகள் குறையும்.

துலாம்

துலாம் என்பது சனிபகவானுக்கு மிகவும் பிரியமான ராசிகளில் ஒன்றாகும். அதனால் தான் இந்த ராசிக்காரர்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பும் அருளும் ஆசியும் கிடைக்கும். எல்லோரிடமும் கருணையுடையவர்களாகவும் நற்பண்புகளைக் கொண்டவராகவும் இருப்பார்கள். மேலும், வாழ்க்கையில் வெற்றி, பணம், புகழ், கீர்த்தி என எல்லாவற்றையும் பெற்று இந்த ராசிக்காரர்களை உயரத்தில் வைத்திருப்பார்.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி, எனவே இந்த ராசிக்காரர்கள் சனி பகவானால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு குறைவான பாதகமான விளைவுகளை கொடுப்பார். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் பகுத்தறியும் தன்மையைப் பெற்று தலைமைப் பொறுப்புகளை கொண்டிருப்பார்கள். சனி பகவானின் அருளால் அவர்கள் பணியிடத்திலும் தொழிலிலும் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.

கும்பம்

இந்த ராசிக்கு அதிபதியாக இருப்பதால், சனிபகவான் தனது ஆசீர்வாதத்தையும் அருளையும் எப்போதும் கொடுத்துக் கொண்டே இருப்பார். சனியின் அருளால் பணம், புகழ் என தட்டுப்பாடு இல்லாமல் வாழ்வார்கள். இந்த ராசிக்காரர்கள் நேர்மையானவர்களாகவும் அழகானவர்களாகவும் இருப்பார்கள். மேலும், எதிர்பாலினத்தவர்களின் பாசத்தையும், ஆதரவையும் பெறுவார்கள்.
மின்சார சபையின் பணம் செலுத்தும் பகுதி சனிக்கிழமைகளிலும் யாழில் செயற்படும்..!!!

மின்சார சபையின் பணம் செலுத்தும் பகுதி சனிக்கிழமைகளிலும் யாழில் செயற்படும்..!!!


யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 10.06.2023 சனிக்கிழமை தொடக்கம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பணம் செலுத்தும் பகுதி திறந்து இருக்கும் என பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!



இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 297.94 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.



யாழ். கொழும்புத்துறை பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது..!!!

யாழ். கொழும்புத்துறை பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது..!!!


யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் ஞாயிறுக்கிழமை (04) இரவு போதையில் தனது வீட்டில் இருந்து பெரிய சத்தமாக தகாத வார்த்தைகளால் கத்தி பெரும் அட்டகாசம் செய்துள்ளார்.

அதனால் பொறுமையிழந்த அயலவர்கள் பொலிஸ் அவசர சேவைக்கு அறிவித்ததை அடுத்து, அவரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரை வீட்டினுள் தேடிய வேளை அங்கே கைக்குண்டு ஒன்று இருப்பதனை அவதானித்துள்ளனர்.

அதனை அடுத்து கைக்குண்டை மீட்ட பொலிஸார், வீட்டில் மறைந்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தங்க விலையில் மேலும் வீழ்ச்சி..!!!

தங்க விலையில் மேலும் வீழ்ச்சி..!!!



தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 162,000 ரூபாவாக நிலவியது.

அத்துடன் 22 கரட் தங்கம் 148,000 ரூபாவாக நிலவி இருந்தது.

டொலரின் பெறுமதியானது இந்த ஆண்டு சுமார் 25 சதவீதம் வீழச்சியடைந்துள்ளது.

இன்றையதினம் வர்த்தக வங்கிகளிலும் டொலர் பெறுமதி ஓரளவுக்கு குறைவடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் கடன்கள் மூலம் டொலர்கள் உட்பாய்ச்சப்படவுள்ளன.

இதன் காரணமாக டொலர் பெறுமதி மேலும் குறைவடையும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருந்தாலும் இந்த ஆண்டின் இறுதியில் டொலர் பெறுமதி மீண்டும் 350 ரூபாவைத் தாண்டி அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நாணய சந்தை அல்லது முதலீட்டுச் சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களிலும் இவ்வாறான கணிப்புகள் வெளியாக்கப்பட்டு வந்தாலும், இலங்கை ரூபாய் நன்கு ஸ்திரமடைந்து வருகிறது என்ற கருத்தை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களிலும் இலங்கை ரூபாய் ஸ்திரமான நிலைமையில் இருக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இன்றையதினம் தங்கத்தின் விலையானது பின்வருமாறு நிலவியது.

24 கரட் ஒரு பவுன்- 158,000
22 கரட் ஒரு பவுன்- 146,000


டொலர் விலை இன்னும் குறையும் பட்சத்தில் தங்கத்தின் விலையும் மேலும் குறைவடையும் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.