யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன், மயூரனை நீக்க இடைக்காலத் தடை உறுதி; காங்கிரஸின் மேன்முறையீட்டு அனுமதி மனுக்கள் தள்ளுபடி..!!!


யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்கள் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் மயூரன் இருவரையும்  அப் பதவியில் இருந்து நீக்குகின்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்திற்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடைக் கட்டளையை ஆட்சேபித்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்களை யாழ்ப்பாணம் குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அகில இலங்கை தமிமக் காங்கிரசின் 13 மாநகர சபை உறுப்பினர்களில் மணிவண்ணன்,பார்த்திபன்,மயூரன் தனுஜன்,ஜனன்,பத்மமுரளி உட்பட்ட 10 பேரினை தமது பங்காளி கட்சியான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டதனால் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு அந்த கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக் கொண்டது.

அதன் அடிப்படையில் அவர்களது உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவாத்தாட்சி அலுவலகரால் குறித்த 10 உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

தமது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி மணிவண்ணன் சிறப்பு மனுவை தானே தாக்கல் செய்தார்.ஏனைய சக உறுப்பினர்களும் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மனுதாரர்கள் பிரதிவாதிகளாக அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் தலைவர் ஆனந்தராஜா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்டவர்களை மனுதாரர்களாக குறிப்பிட்டிருந்தனர்.

இவர்களின் மனுக்களை ஏற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் ஆரம்பத்தில் கட்டாணையை வழங்கி பிரதிவாதிகளின் ஆட்சேபனை விண்ணப்பத்தின் பின்னர் மணிவண்ணன், மயூரன், உட்பட நான்கு மாநகர உறுப்பினர்களுக்கு பதவி நீக்கத்திற்கு இடைக்கால கட்டளையை வழங்கியது.

ஏனைய உறுப்பினர்களான பார்த்திபன், தனுஜன்,ஜெனன்,பத்மமுரளி உட்பட 6 உறுப்பினர்களின் மனுக்கள் மாவட்ட நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மணிவண்ணன், மயூரன் உட்பட 4 மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால கட்டளையை ஆட்சேபித்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணம் குடியியல் மேன் முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ் விண்ணப்பங்ள் மேல் நீதிமன்றநீதிபதிகள் பாலேந்திரன் சசி மகேந்திரன், தாபூத் லெப்பை அப்துல் மனாப் ஆகியோர் அடங்கிய யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வின் முன் விவாதங்கள் இடம்பெற்றன.

அமர்வு இன்று அதன் கட்டளையை வழங்கியது
சட்டத்தரணி மணிவண்ணன், மயூரன் ஆகியோரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் ஆகில இலங்கை தமிழ் காங்கிரசின் தீர்மானத்திற்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால கட்டளையை உறுதி செய்தது

அத்துடன் அதனை எதிர்த்து அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்களை யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏனைய உறுப்பினர்களின் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Put your ad code here