Tuesday, 29 April 2025

முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மோதிரம் வழங்கிய நியூ லலிதா நகை மாளிகை..!!!

SHARE

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் , இரண்டாம் இடம் பெற்ற யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நியூ லலிதா நகை மாளிகை மோதிரம் வழங்கி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

யமுனாநந்தா பிரணவன் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும், யமுனாநந்தா சரவணன் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும், தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

SHARE