இன்றைய ராசிபலன் - 30.04.2025..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பதட்டம் இருக்கும். வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ளலாம். ஆனால் இதற்கெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டாம். கடவுள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றார். பயங்களை தூக்கி தூர போட்டுவிட்டு, துணிந்து செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையின் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் லாபகரமாக முடியும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நன்மைகள் நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நினைத்த வேலைகளை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நடந்து முடியும். சுப செலவுகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பதன் மூலம் மனதில் இருந்த பாரங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கையில் வந்து சேரும். நல்ல உபச்சாரங்கள் நடக்கும். இதுவரை மதிக்காதவர்கள் எல்லாம் கூட உங்கள் வீடு தேடி வர வாய்ப்புகள் இருக்கிறது. சொந்த பந்தங்களோடு நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. கவனக்குறைவாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் போது சில பல பிரச்சனைகள் வரலாம். பேசுவதற்கு முன்பாக பல முறை யோசிக்கவும். கூடுமானவரை அடுத்தவர்கள் விஷயத்தில் இன்று தலையிட வேண்டாம். தேவையற்ற பஞ்சாயத்துகளை கூட்ட வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள். இன்று அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு உங்களுடைய முன்னேற்றம் வெளிப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அவசரப்பட மாட்டிங்க. எந்த பிரச்சினையில் மூக்கை நுழைக்க மாட்டீர்கள். பொறுமை உங்களை விடாமல் பற்றிக்கொள்ளும். இதனால் நிறைய நன்மைகள் நடக்கும். பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சினைகள் கூட சர்வசாதாரணமாக சரியாகிவிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை இருக்கக் கூடாது. அடுத்தவர்களை பார்த்து பொறாமை படக்கூடாது. உங்களுடைய வேலையில் மட்டும் அக்கறை இருந்தால் போதும். வீண் செலவை குறைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பர செலவு வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு அமைதியை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள். எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். செலவுகள் கொஞ்சம் கையை மீறி செல்லும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூறக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நல்ல பெயரை எடுக்க முழு உழைப்பையும் முதலீடாக போடுவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு நல்ல அனுபவத்தையும் நிறைய ஆலோசனைகளையும் கொடுக்கும்.