அட்சய திருதியை 2025..!!!
அட்சய திருதியை 30.04.2025
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது தான் அட்சய திருதியை. அட்சய திருதியை நாளன்று பலரும் தங்கம் வாங்க வேண்டும், வெள்ளி வாங்க வேண்டும் அப்பொழுதுதான் தங்கமும் வெள்ளியும் அதிக அளவில் சேரும் என்று அதற்கு முன்பதிவு செய்து வைத்து இருப்பார்கள். அட்சய திருதியை அன்று நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது அதிக அளவில் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தங்கம், வெள்ளி வாங்குவது போலவே நமக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் தேவையான எந்த பொருளாக இருந்தாலும் அதை வாங்குவதன் மூலம் அது எப்பொழுதும் நம்மிடமே இருக்கும். அந்த வகையில் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரவும் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கவும் வாங்க வேண்டிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக அட்சய திருதியை நாளன்று பலரும் தங்கம் வெள்ளி வாங்கும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இது வசதி மிக்கவர்களுக்கு பொருந்தக்கூடிய ஒன்று என்றாலும் வசதியற்றவர்களும் தங்களுடைய செல்வ நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வாங்குவதற்காக மிகவும் எளிமையான சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை அட்சய திருதியை நாளன்று வாங்குவதன் மூலம் வாழ்க்கையில் பலவிதமான செல்வ செழிப்பு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
தங்கம், வெள்ளி வாங்குவதைப் போல மகாலட்சுமியின் அம்சம் கொண்ட கல் உப்பு, மங்களங்களை தரக்கூடிய மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் கிழங்கு, வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்கள் போன்றவற்றை வாங்கி பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது உண்டு. அதே போல் அரிசி, பருப்பு போன்ற தானியங்களையும் வாங்கி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் அன்னலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம் வீட்டில் சாப்பாட்டிற்கு எந்தவித பஞ்சமும் வராது.
அதே போல் அன்றைய தினத்தில் பலரும் சொந்தமாக இடம் வாங்குவது, வீடு வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது அல்லது புதிதாக தொழில் தொடங்குவதற்கு முயற்சி செய்வது அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இவை எதுவுமே செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் கூட மதியம் 12 மணிக்குள் இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி வந்தால் போதும். நம் வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் தேடி வருவதற்குரிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அட்சய திருதியை என்பதால் புதன் பகவானுக்குரிய பச்சை நிற துணியை மதியம் 12 மணிக்குள் நாம் நம்முடைய வீட்டிற்கு வாங்கி வந்து பூஜையறையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் புதன் பகவானின் அருளும் கிடைக்கும். அதே சமயம் நம்மை தேடி அதிர்ஷ்டமும் வர ஆரம்பிக்கும். சிறிது நேரம் பூஜை அறையில் இந்த துணியை வைத்து விட்டு பிறகு நம்முடைய தேவைக்காக அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகவும் எளிமையான இந்த ஒரு பொருளை அட்சய திருதியை நாளான ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி 12 மணிக்குள் வாங்கி வந்து வைப்பவர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். அதிர்ஷ்டம் அவர்களை தேடி வரும். செல்வ நிலை உயரும்.
அட்சய திருதியை நாளன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்க இயலாதவர்கள் இந்த எளிமையான ஒரு பொருளை மட்டும் வாங்குவதன் மூலம் செல்வ செழிப்பு உயரும். அதிர்ஷ்டம் தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
Dheivegam