யாழில் 35 வருடங்களின் பின் KKS - பலாலி பேருந்து சேவையால் மக்கள் மகிழ்ச்சி..!!!


35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முதல் பலாலி உயர்பாதுகாப்பு வலயம் காணப்படுவதனால், யாழ்ப்பாணம் - பலாலி வீதி வசாவிளான் சந்தியுடன் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி முதல் நிபந்தனைகளுடன் குறித்த வீதி முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, இன்றைய தினம் முதல் குறித்த வீதியூடாக காங்கேசன்துறை வரையில் அரச பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை குறித்த வீதியூடாக ஒரு சில தினங்களில் தனியார் சிற்றூர்திகளும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here