Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Wednesday, 4 October 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!



லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய 3470 விலை ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1393 ரூபாவாகும்.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!

யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!


முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.















Tuesday, 3 October 2023

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.

அதனால் அக்காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியமர முடியாத நிலை காணப்படுகிறது.

அந்நிலையில் அப்பகுதிக்குள் ஊடுருவும் இரும்பு திருடர்கள் வீடுகளில் உள்ள இரும்புகளை திருடி சென்றனர். அது குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலர் , காங்கேசன்துறை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு பல தடவைகள் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தும் திருட்டினை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , இரும்பு திருடர்கள் சுதந்திரமாக அப்பகுதிகளில் நடமாடி திரிகின்றனர்.

இந்நிலையில் காணி உரிமையாளர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் , தமது காணிகளுக்குள் ஊடுருவும் திருடர்களை கட்டுப்படுத்தும் முகமாக தமது காணிகளை சுற்றி வேலி அடைத்து , அக்காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை அடுத்து அப்பகுதியில் தமது காணிகளை சுற்றி வேலி அடைக்க பிரதேச செயலர் அனுமதி அளித்துள்ளார்.

அதேவேளை 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த மாங்கொல்லை வைரவர் ஆலய திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்கு மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




Monday, 2 October 2023

சாவகச்சேரியில் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!

சாவகச்சேரியில் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிக்கப் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

நுணாவிலில் பகுதியில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றின் உரிமையாளரான கிளிநொச்சி , பளை பகுதியை சேர்ந்த பராமநாதன் ஜோதீஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவர் எனவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

Sunday, 1 October 2023

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு..!!!

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு..!!!


எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்வதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறவித்துள்ளது.

அதன்படி 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்று 4 ரூபாயினால் அதிகரித்து 365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 351 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒன்றின் விலை 62 ரூபாயினால் அதிகரித்து 421 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை லீற்றர் ஒன்றுக்கு 11 ரூபாயினால் அதிகரித்து 242 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு..!!!

கிளிநொச்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு..!!!


கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும். இந்த சிறுவர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவாயிரத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது

பொருட்களின் விலை ஏற்றம் தொழில் வாய்ப்பின்மை வறுமை உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த சிறுவர்கள் போசாக்கு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 2765 க்கு மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் இவ்வாறு போசாக்கு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அதாவது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1288 சிறுவர்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 884 சிறுவர்களும் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 393 சிறுவர்களும் இவ்வாறு போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தின் தகவல்கள் மூலம் அறிய முடிந்துள்ளது.

Thursday, 28 September 2023

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்திற்கு பாடல் எழுதியுள்ள யாழ். இளைஞன்..!!!

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்திற்கு பாடல் எழுதியுள்ள யாழ். இளைஞன்..!!!


ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

“ஜிகர்தாண்டா double x” படத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய காட்சி இருப்பதாகவும் அதனை அருமையாக இயக்குனர் கையாண்டிருப்பதாகவும் தெரிவித்த சந்தோஷ் நாராயணன், அதற்கேற்றது போல யாழ்ப்பாணத்தமிழில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பாடலையே நம் நாட்டு பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞர் பூவன் மதீசன் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் மதீசனுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ். மாநகர சபை தீயணைப்பு சேவை இடைநிறுத்தம்..!!!

யாழ். மாநகர சபை தீயணைப்பு சேவை இடைநிறுத்தம்..!!!


யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்றைய தினம் வியாழக்கிழமை மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.

யாழ் மாநகர தீயணைப்புச் சேவையில் ஈடுபடும் தீயணைப்பு வாகனத்தின் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள், அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு..!!!

அச்சுறுத்தல்கள், அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு..!!!


உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார்.

இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.

குருந்தூர் மலை தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து வழங்கப்பட்ட கட்டளைகளை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரா உள்ளிட்ட இனவாதிகள் நாடாளுமன்றில் நீதிபதிக்கு எதிராக வெளிப்படையாக மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனாவில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பில் பரிசோதிக்க நீதிமன்று கட்டளை..!!!

யாழ்.போதனாவில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பில் பரிசோதிக்க நீதிமன்று கட்டளை..!!!



யாழ்.போதனாவில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாக பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 08 வயது சிறுமி ஒருவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் போது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட "கானுலா" உரிய முறையில் பொருத்தப்படாதமையால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை , மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை நடாத்திக்கொண்டு இருக்கும் வேளையில் , சிறுமியின் பெற்றோரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் ஊடாக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் கோரியமைக்கு அமைய, பெயர் குறிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!!!

யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!!!


யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் , மாவட்ட செயலர் , பொலிஸார் உள்ளிட்டோர் நடாத்திய சந்திப்பின் போதே பொலிஸார் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் ,

யாழ்ப்பாணத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள தனியார் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறைந்தளவு , கட்டணங்களை வசூலிக்கின்றன.

அதனால் நீண்ட காலமாக சேவையில் ஈடுபடும் எமது வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே நாம் பெரும் தொகை பணத்தினை செலவழித்து மீற்றர் கருவியை பொருத்தினோம். அப்படியிருந்தும் அந்நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளே அதிக சேவைகளில் ஈடுபடுவதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த மாவட்ட செயலர் , சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மீற்றர் பூட்டுவது என்பது கட்டாயம். அதனையே நாமும் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

அதேவேளை உரிய அனுமதிகளை பெற்று சேவையில் ஈடுபடும் எந்த முச்சக்கர வண்டிகளையும் தடுக்க முடியாது. அத்துடன் , போக்குவரத்து சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்தை தடுக்கும் அதிகாரம் இல்லை.

மீற்றர் பொருத்தி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொதுமக்களால் தினமும் முறைப்பாடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் இதுவரையில் எந்த முறைப்பாடும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.

Tuesday, 26 September 2023

யாழில் கொட்டிய மழை..!!!

யாழில் கொட்டிய மழை..!!!


யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று செவ்வாய்க்கிழமை (26.09.2023) காலை-10.15 மணி முதல் முற்பகல்-11.45 மணி வரை கடும் மழை பெய்துள்ளது. இதன்பின்னரும் இடையிடையே மிதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடும் மழையினால் குறித்த நேர காலப் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நேற்றுத் திங்கட்கிழமை(25.09.2023) தென்மராட்சியின் சில பகுதிகளிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..!!! (Video)

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..!!! (Video)


தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் , நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் , மழையையும் பொருட்படுத்தாது , நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார்.

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.


படங்கள் – ஐ.சிவசாந்தன்