செம்மணியில் தொடர்ச்சியாக வெளிப்படும் சிறுவர்களின் என்புக்கூடுகள்..!!!


செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 08 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 18ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன் போது 06 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் சிறுவர்களுடைய இரண்டு என்பு கூட்டு தொகுதி உட்பட 08 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 302 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 298என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

கடந்த சில நாட்களாக செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிறுவர்களின் என்பு கூட்டு தொகுதிகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here