பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் இன்று சனிக்கிழமை (04) நள்ளிரவு முதல் 15 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தேநீர் , பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் 5 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயுகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்தே சில உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.