கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்..!!!


முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் 17ஆவது ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சரியாக காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

இறுதிப் போரின்போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு - வற்றாப்பளையைச் சேர்ந்த பெண்ணால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு ஏனையவர்களாலும் சமநேரத்தில் சுடரேற்றப்பட்டது.

அதனையடுத்து, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இதன்போது, உறவுகளை இழந்தவர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து அஞ்சலி செலுத்தினர்.











Previous Post Next Post


Put your ad code here