Thursday, 1 May 2025

அரச ஊழியர்கள் விசேட விடுமுறை குறித்து வெளியான அறிக்கை..!!!

SHARE

நாட்டில் விசேட விடுமுறையில் இருக்கும் அரச ஊழியர்கள் தொடர்பில் ஆய்வறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கை 2024 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையின் படி வெளியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் அரச மற்றும் அரை அரச துறையில் பணியாற்றும் 1,156,018 ஊழியர்களில் 21,928 பேர் விசேட விடு முறையில் இருப்பதுடன், 13,396 பேர் வெளிநாட்டு பயணத்துக்காக இந்த விசேட விடுமுறையை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களில் 8,532 பேர் அரச பணிகளுக்காக விடுமுறை பெற்றுக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1,156,018 ஆக இருந்தது.

இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46,543 அதிகமாகும் அந்தவகையில் 2016ஆம் ஆண்டு நாட்டின் அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1,109,475 ஆக காணப்பட்டது.

நாட்டிலுள்ள மொத்த அரச மற்றும் அரை அரச ஊழியர்களில் 688,669 பேர் மத்திய அரசையும் 467,349 பேர் மாகாண சபைக்குட்பட்ட நிறுவனங்களையும் சேர்ந்தவர்கள்.

மத்திய அரசுக்குச் சொந்தமான அரச மற்றும் அரை அரச ஊழியர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பதுடன் மாகாண சபைக்குட்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் அரச மற்றும் அரை அரச ஊழியர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்.

அவர்களில் 938,763 பேர் அரச ஊழியர்கள் என்பதுடன் 217,255 பேர் அரை அரச ஊழியர்களாவர்.

நாட்டிலுள்ள அரச மற்றும் அரை அரச ஊழியர்களுள் 50.5 சதவீதமானோர் அதாவது 583,363 ஆண்கள் என்பதுடன் 49.5 சதவீதமானோர் அதாவது 572,655 பேர் பெண்களாவர்.

இதேவேளை, 1,156,018 அரச மற்றும் அரை அரச ஊழியர்களில் 1,113,344 பேர் அல்லது 96.3 சதவீதம் பேர் நிரந்தர ஊழியர்களாவர்.

எஞ்சியோர் ஒப்பந்த, சாதாரண மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களாவர், மேலும் நாட்டின் அரச மற்றும் அரை அரச ஊழியர்களில் அதிகமானோர் மத்திய அரச ஊழியர்களாவர்.

அந்தவகையில் 475,483 பேர் மத்திய அரச துறையில் பணியாற்றுகின்றனர் அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் 279,194 அல்லது 58.7 சதவீதத்தினர் ஆண்கள் என்பதுடன் 196,289 அல்லது 41.3 சதவீதமானோர் பெண்களாவர்.

அதேபோன்று மத்திய அரசுக்கு பொறுப்பான அரை அரச ஊழியர்கள் 213,186 பேர் இருப்பதுடன் 148,439 பேர் அதாவது 69.6 சதவீதமானோர் ஆண்களாவர்.

அரை அரச ஊழியர்களில் 64,747 பேர் பெண்கள் என்பதுடன் அதாவது 30.4 சதவீதமாகும் மேலும் மத்திய அரசு மற்றும் அரை அரச சேவையாளர்களில் 463,280 பேர் மாகாண சபைக்குட்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் என்பதுடன் அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் 310,573 பேர் அதாவது 67 சதவீதமானோர் பெண்களாவர்.

அதேபோன்று 152,707 பேர் மாகாண சபை நிறுவனங்களுக்குட்பட்ட அரச சேவையாளர்களாவர் அதாவது 33 சதவீதமாகும். எனினும், நாட்டின் மாகாண சபை நிறுவனங்களுக்குட்பட்ட 4,069 பேர் அரச சேவையாளர்களாவர்.

அவர்களில் 3,023 பேர் அதாவது 74.3 சதவீதமானோர் ஆண்கள் என்பதுடன் 1,046 பேர் அதாவது 25.7 சதவீதமானோர் பெண்களாவர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரை அரச ஊழியர்கள் குறித்த கணக்கெடுப்பானது, நாட்டிலுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒன்பதாவது கணக்கெடுப்பு என்பதுடன் எட்டாவது கணக்கெடுப்பு இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE