இன்றைய ராசிபலன் - 02.05.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் அதிகமாக வெளிப்படும். திறமை வெளிபடும். மேலதிகாரிகள் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் காணப்படும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. முன் கோபம் வேண்டாம். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அடுத்தவர்களை கை நீட்டி குறை சொல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நிச்சயம் நன்மை நடக்கும். பெரியவர்கள் சொல்வதை கேளுங்கள். அடம்பிடித்து எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்காதிங்க.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் ரொம்பவும் பணிவோடு நடந்து கொள்வீர்கள். இன்று உங்களைப் பார்ப்பவர்களுக்கே வியப்பாக இருக்கும். அமைதியின் வெளிப்பாட்டு, நிறைய நன்மைகள் நடக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நிறைய இழந்த நல்ல விஷயங்களை திரும்பவும் கடவுள் உங்கள் கையிலே கொடுக்கப் போகிறான். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியின் நன்மையை புரிந்து கொள்வீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுடைய வேலையில் பங்கு போட்டுக் கொள்வீர்கள். உறவினர்களோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். இரவு உடல் சோர்வு கொஞ்சம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் தேவையில்லாமல் வெளியில், வெயிலில் செல்ல வேண்டாம். உடல் பாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தை பொருத்தவரை சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய அளவில் பிரச்சனைகளை கொடுக்கும். கவனக்குறைவோடு முதலீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் முடிவு எடுக்கக் கூடாது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். சுப செலவுகள் உண்டாகும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். அன்பு வெளிப்படும் நாள். காதல் கை கூடும் நாள். மற்ற படி வேலையிலும் வியாபாரத்தையும் உங்களுடைய அக்கறை அதிகமாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக எந்த வேலையையும் செய்யக்கூடாது. குறிப்பாக நேரத்தை வீணடிக்க கூடாது.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சுப விரயங்கள் உண்டு. வேலையில் முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புது வாடிக்கையாளர்களின் வரவால் மனது சந்தோஷம் அடையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தன லாபம் அதிகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு அமைதியை கொடுக்கும். பொன் பொருள் சேர்க்கை, சொத்து சேர்க்கை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். நல்ல முடிவை உடனடியாக எடுப்பீர்கள். இன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று உங்கள் பேச்சு அனைவரையும் வியக்க வைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பார்ட்னரோடு இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நம்பர் இடம். வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நம்பர் ஒன் இடம். சொந்த பந்தங்கள் வீட்டிற்கு சென்றாலும் நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல உபசரணை என்ஜாய் பண்ணுங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். சரியான நேரத்தில், உறவுகளும் நண்பர்களும் பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுபட வைக்க கை தூக்கி விடுப்பார்கள். பொறுமையை இழக்கக்கூடாது. வாய்க்கு வந்தபடி அடுத்தவர்களை பேசக்கூடாது. வார்த்தையில் நிச்சயம் நிதானம் தேவை. இல்லை என்றால் இழப்புகள் அதிகமாக இருக்கும் ஜாக்கிரதை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு நலமான நாளாக இருக்கும். மனதிருப்தி ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வீர்கள். செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். நிதி நிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');