கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்திற்கு சீல்..!!!


யாழ்ப்பாணம் - கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்திற்கு  கட்டாய பூட்டு
கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் அனுமதி பெறப்படாமல் திருமண வைபவம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார பணிமனையினரால் இன்று புதன்கிழமை மண்டபம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தமையைத் தொடர்ந்து கல்யாண மண்டபங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் என்பவற்றிற்கு பங்குபற்றுவோரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அனுமதிகள் பெறப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here