வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) மேற்கொண்ட ஆய்வில், இந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும்.
அங்கு கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது.
அப்போது, 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணமாகும் என்றும், இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களின் இந்த சிறந்த கண்டுபிடிப்பால், இந்தியா - வியட்நாம் இடையே இருக்கும் கலாச்சார உறவு மேம்படும் என்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக தொடர்பும் வெளிப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
Tags:
world news