கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 39 பேர் இன்று ( 26) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில்கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 317ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 135 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் முன்னதாக அடையாளம் காணப்பட்ட 96 பேரில் 88 பேர் குவைத் நாட்டிலிருந்து கடந்த வாரம் நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள். 8 பேர் கடற்படைச் சிப்பாய்கள் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை 712 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
595 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:
sri lanka news