யாழ். கொட்டடி மீன் சந்தையினை மீளத் திறக்குமாறு கோரிக்கை


யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டு மீண்டும் யாழ்.மாவட்டம் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் தற்போது வீதியோரங்களில் கடும் வெயிலில் மத்தியிலும் தமது வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக தமது வியாபார நடவடிக்கைகளை வீதியில் வைத்து கடும் வெயிலிலும், சமூக இடைவெளியினை கடைப்பிடித்துமே வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

மேலும், இவ்வாறான நிலையில் தமக்கு வியாபாரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுவதால், பெரிதாக லாபம் எதுவும் கிடைக்கப்பதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது சந்தையினை திறந்துவிடுமிடத்து அவர்கள் சந்தைக்குள்ளேயும் சமூக இடைவெளியினை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here