இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்தார்.
கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவல் சமூக மட்டத்தில் கடந்த 26 நாள்களாக அடையாளம் காணப்படாத நிலையில் நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்நிலை படிப்படியாக ஏற்படுத்தப்படும் நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே சிறப்புக் கலந்துரையாடல் இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பையடுத்து பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் ஊடகங்களிடம் கருத்துரைத்தார்.
இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
மாணவர்களை பொது போக்குவரத்து சேவைகளின் ஊடாக எவ்வாறு பாதுகாப்பான முறையில் பாடசாலைகளுக்கு அழைத்துச் செல்வது குறித்து போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடப்படவுள்ளது.
எனவே பாடசாலை மாணவர்களின் பொது போக்குவரத்து சேவையில் உள்ள சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறத” என்றும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
Tags:
sri lanka news