ஜேர்மனிய நகர் ஒன்றில் சமூக இடைவெளியைப் பேணும் நிலையில் பள்ளிவாசல்களில் போதிய இடமில்லாததால் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் மே 4 ஆம் திகதி முதல் மத நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் பங்குபற்றுபர்கள் 1.5 மீற்றர் (5 அடி) சமூக இடைவெளியை பேண வேண்டும என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் நியுகொல்ன் (Neukölln ) நகரிலுள்ள தார் அஸலாம் பள்ளிவாசலில் மக்களுக்கிடையில் 5 அடி சமூக இடைவெளியைப் பேணி தொழுகை நடத்துவதற்கு போதிய இடவசதி இல்லை.
இதனால், கடந்த வெள்ளிக்கிழமை (22) முஸ்லிம்கள் தொழுகை நடத்துவற்கான இடவசதி அளிப்பதற்கு க்ரேவுஸ்பேர்க் (Kreuzberg) நகரிலுள்ள லூர்து மாதா தேவாலயம் (Martha Lutheran church) முன்வந்தது.
மேற்படி பள்ளிவாசல் இமாம் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இது ஒரு சிறந்த சமிக்ஞை தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியல் ரமழானில் மகிழ்ச்சியை கொண்டுவந்துள்ளது. இந்த வைரஸ் பரவல் எம்மை ஒரு சமூகமாக ஒன்றிணைத்துள்ளது’ என்றார்.
Tags:
world news